உனக்கு நான் ! எனக்கு நீ !! இச்சமுதாயத்திற்கு நாம் !! தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் வெற்றி கிடைத்தே தீரும். கனி குலுங்கும் மரத்தின் மீது கல் வீசி கனி பெறுவது போன்ற எளிய எண்ணங்களை விட்டொழித்து மலை உச்சி ஏறி மூலிகை தேடுவது போன்ற உழைப்பே உயர்வைத்தரும். உழைப்போம் ! உயர்வோம் !!
Thursday, May 12, 2011
10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு
1.மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு
2. பட்டய படிப்பு (டிப்ளோமா)
3. சான்றிதழ் படிப்பு (ITI)
பத்தாம் வகுப்பு முடித்த பிறகு பெரும்பாலான மாணவர்கள் தேர்ந்தெடுப்பது மேல் நிலை (+1,+2) படிப்புதான். அதை பற்றி முதலில் பார்ப்போம்.
I.மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு :
1. First Group எனப்படும் கணிதம், வேதியில், இயற்பில், உயிரியல் பிரிவு : பெரும்பாலும் மாணவர்கள் விருப்பும் பிரிவு. இந்த பிரிவில் படிப்பதன் மூலம், பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma), மருத்துவம் (MBBS, BDS, B.Phar, Nursing etc…), சட்டம், ஆசிரியர் படிப்புகள், ஆராய்சி படிப்புகள் என பெரும்பாலான துறைகளில் மேல் படிப்பு படிக்கலாம். அரசு துறை, தனியார்துறை என பெரும்பாலான துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது. இந்த பிரிவில் படிப்பது மிக சிறந்தது. எதிர்காலத்தில் அதிக வேலைவாய்ப்பு உள்ள பிரிவு இதுதான், எனவேதான் இந்த பிரிவிற்க்கு அதிக போட்டி இருக்கும், மாணவர்கள் பெரும்பாலும் இந்த பிரிவில் படிக்க முயற்சி செய்யவும். குறிபிட்ட பள்ளிகளில் இந்த குரூப் கிடைக்காவிட்டால், இந்த குரூப் கிடைக்கும் பள்ளியில் சேருங்கள்.
2. கணிதம், வேதியில், இயற்பில், கணினி அறிவியல் பிரிவு : பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma) சார்ந்த படிப்புகள் படிக்க சிறந்த பிரிவு. (மருத்துவம் சார்ந்த பெரும்பான்மையான படிப்புகள் படிக்க இயலாது). மருத்துவ துறை தவிர்த்து மற்ற பெரும்பாலன துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது. First Group கிடைக்காத மாணவர்கள் இந்த குரூபையாவது தேர்ந்தெடுக்கவும். அதிக வேலைவாய்ப்பு பெற்றுதரும் குரூப்பில் இதுவும் ஒன்று.
3. வேதியில், இயற்பில், தாவரவியல், விலங்கியல் பிரிவு : மருத்துவம் (MBBS, BDS, B.Phar, Nursing etc…) சார்ந்த படிப்புகள் படிக்க சிறந்த பிரிவு. (பொறியியல் சார்ந்த பெரும்பான்மையான படிப்புகள் படிக்க இயலாது). அதிகமாக மருத்துவம் சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது
4. Commerce, Accountancy, பொருளாதாரவியல் பிரிவு : B.Com, CA (Charted accountant ), M.Com படிப்பதர்க்கான பிரிவு, அரசு வேலை, Accountancy துறையில் நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளது.
5. வரலாறு, பொருளாதாரவியல் : எதிர்காலதில் B.A. M.A படிக்கலாம். அரசு தேர்வுகள் மூலம் வேலைவாய்ப்பு, ஆசிரியர் பணிகள் போன்றவற்றில் வேலைவாய்ப்புகள் உள்ளன
6. Vocational குரூப் : தொழில் நுட்பம் சார்ந்த படிப்புகள் அடங்கிய பிரிவு, பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma ) சார்ந்த படிப்புகள் படிக்கலாம். தொழில் நுட்ப துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது.
II. பட்டய படிப்பு (டிப்ளோமா):
இது 3 ஆண்டு படிப்பு. தொழில் நுட்பதுறைகள் , மருத்துவ துறைகள், கடல்சார் துறைகள், ஆசிரியர் படிப்புகள் என பெரும்பாலான துறைகளில் டிப்ளோமா படிப்புகள் உள்ளன. தொழில் நுட்ப டிப்ளோமாவில் Automobile, EEE, ECE, Mechanical, civil etc… போன்ற துறைகள் சிறந்த துறைகள். மேலும் பல சிறந்த பிரிவுகள் உள்ளன. டிப்ளோமா படித்து மேற்கொண்டு பொறியியல் (B.E/B.Tech) படிக்கலாம். பொறியியல் (B.E/B.Tech) படிக்க ஆர்வம் உள்ளவர்கள் டிப்ளோமா படித்து பொறியியல் படிப்பது சிறந்ததல்ல (Not Advisable ). 12 ஆம் வகுப்பு முடித்து பொறியியல் படிக்கவும். டிப்ளோமா மட்டும் படிக்க விரும்புவர்கள் 10 -ஆம் வகுப்பிற்க்கு பிறகு டிப்ளோமா படிக்கலாம். தொழில் நுட்ப துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளது.
III. சான்றிதழ் படிப்பு (ITI):
இது ஓராண்டு படிப்பு. Fitter welder, machinist , AC mechanic போன்ற துறைகள் சிறந்த துறைகள். இன்னும் மருத்துவம் சார்ந்த, தொழில் நுட்பம் சார்ந்த பல்வேறு படிப்புகள் ITI-ல் உள்ளது. உடனடி வேலைவாய்பிற்க்கு ஏற்ற படிப்பு, ஆனால் அதிக சம்பளம் கிடைக்காது.
10 – ஆம் வகுப்பு முடித்த பிறகு வேலை வாய்ப்பு (கோரிக்கை:- தயவு செய்து மாணவர்களை 10 -ஆம் வகுப்பு மேல் படிக்க வையுங்கள்)
1. சிறு தொழில் நுட்ப பயிற்சிக்கு பிறகு வேலை. (தமிழகத்தில் அரசு, மாணவர்களுக்கு இலவசமாகவும், குறைந்த கட்டணத்திலும் தொழில் பயிற்சி அளித்து வருகின்றது.)
2. இராணுவத்தில் வேலை மற்றும் அரசு வேலை, இரயில்வேயில் வேலை etc…
3. Date Entry வேலைகள்
4. சமுதாய கல்லூரிகள் மூலம் 6 மாத பயிற்சிக்கு பிறகு உடனடி வேலைவாய்ப்பு
Tuesday, March 22, 2011
Saturday, March 5, 2011
தோப்புக்கரணம் போடுவது ஏன்? தெரியாத உண்மை!
முத்து உருவாகுவது எப்படி ?
இயற்கையின் அதிசயங்களுள் ஒன்று, முத்து. எங்கோ கடலடியில் விளையும் முத்து, அழகுப்பெண்களின் கழுத்தை அலங்கரிக்கிறது. முத்து உருவாகும் விதம் தெரியுமா உங்களுக்கு? முத்துச்சிப்பி என்ற உயிரினத்திடம் இருந்து முத்து கிடைக்கிறது. அந்த உயிரினத்தில் இருந்து முத்து கிடைப்பது வியப்பூட்டும் விஷயம். கடல் நீரில் உள்ள கால்சியம் கார்பனேட் என்ற தாதுப் பொருளையும் மற்றும் சில அங்ககப் பொருட்களையும் சிப்பி உட்கொள்வதால் முத்து தோன்று வதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிப்பியினுள் முத்து சென்றுவிட்டால் அதற்கு ஓர் உறுத்தல் ஏற்பட்டு, தன்னிடம்மீது நாக்கர் திரவம் படிந்து, நன்கு விளைந்த முத்தாக வெளியில் எடுக்கப்பட்டு, நல்ல விலைக்கு விற்பனையாகிறது. இனி, உயர்ந்த முத்துகள் எப்படி உருவாகின்றன என்று பார்க்கலாம். கடலில் உள்ள சில புல்லுருவிகள் (தம்மால் நேரடியாக உணவுப்பொருட்களை உருவாக்க முடியாமல் சத்துக்காக பிற தாவர இனங்களைச் சார்ந்திருப்பவை), சிலநேரங்களில் சிப்பியின் வாய் வழியாக உள்ளே தவறிச் சென்று விடுகின்றன. அப்போது சிப்பியின்
உட்பாகத்தில் ஓர் உறுத்தல் ஏற்பட்டு, நாக்கர் திரவத்தை அதன் மீது பொழியும். அவ்வாறு பொழியும்போது அந்தப் புல்லுருவி மடிந்துவிடும். அதன் மீது நாக்கர் திரவம் பல அடுக்குகளில் படிந்துவிட, அது விலை உயர்ந்த முத்தாக மாறிவிடுகிறது. இம்முறையிலேயே சிறு மணல் துகள் உள்ளே சென்றாலும் அது முத்தாகிவிடுகிறது. ஆனால் முந்தைய முறையில் உற்பத்தியாகும் முத்துதான் மிகுந்த விலை மதிப்பு உடையதாகும்.
Wednesday, February 23, 2011
ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன ?
மின்சாரத்தை கம்பி மூலம் கடத்த முடியும் அதே போல் கம்பி ஏதும் இல்லாமல் குறிப்பிட்ட தூரத்திலிருந்து இரும்பை கவர்ந்து தன்னை நோக்கி இழுக்கும் காந்தத்தையும் நாம் அறிவோம் .ஒரு கம்பியில் பாயும் மின்சாரம் தன்னைச்சுற்றி மின்புலத்தையும் , காந்தம் தன்னைச்சுற்றி காந்த புலத்தையும் உருவாக்குகிறது .இந்த மின்புலம் அல்லது காந்தப்புலம் தன்னைச்சுற்றியுள்ள பொருள்கள் மீது ஒரு விசையை செலுத்துகிறது.மின்காந்த புலத்தில் பரவும் ஒரு வகை ஆற்றல் அலை வடிவம் உடையது . மின்காந்த அலைகள் வெற்றிடத்தில் வேகமாக பரவும். ஒரு வினாடிக்கு 3,00,000 கி .மீ (ம் என்பதற்குள் 3,00,000 கி.மீ ). மின்காந்த அலைகளைக்கொண்டு ரேடியோ , F.M , தூர்தர்ஷன் தரைவழி தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்பாகின்றன.ரிமோட் , ப்ளுடூத் , WI - FI அனைத்தும் மின்காந்த அலைகளால் இயங்குபவை .இருவகை மின்காந்த அலைகளை ( நீளம் . சிவப்பு ) வேறுபடுத்துவது அதிர்வெண் எனும் பண்பு . ஒரு குறிப்பிட்ட வினாடியில் ஒரு அலை எவ்வளவு முறை அதிர்கிறது என்பதுதான் அதிர்வெண் . இதன் அலகு ஹெர்ட்ஸ் . ஒரு பெண்டுலம் ஒரு வினாடிக்கு ஒரு முறைதான் ஆரம்பித்த இடத்துக்கே மீண்டும் வருகிறது. பெண்டுலத்தில் மாற்றம் செய்து ஒரு வினாடிக்கு இருமுறை வர வைக்கலாம் . அப்போது அது இரண்டு ஹெர்ட்ஸ் . ஒளி அலைகளை எடுத்துக்கொள்வோம் ,இவை காற்றில் எளிதில் ஊடுருவும் . மரமோ , சுவரோ தாண்டி செல்வதில்லை .நாம் கண்ணால் காணும் ஒளி அலைகளின் அதிர்வெண் 430-750 டெரா ஹெர்ட்ஸ். ஆனால் இதைவிட குறைந்த அதிர்வெண் கொண்ட மின்காந்த அலைகளால் ஒளியால் ஊடுருவ முடியாத இடங்களையும் ஊடுருவமுடியும் . F.M வானொலிகள் அப்படிப்பட்டவை .(85 - 110 மெகா ஹெர்ட்ஸ் வரை ). முழு ரேஞ்ச் அதாவது 110- 85 மெகா ஹெர்ட்ஸ் வரை உள்ள 25 மெகா ஹெர்ட்ஸ் அகலம் கொண்ட இந்த பகுதியை பண்பலை பரவல் என்பர். .இந்த அலைப்பரவலுக்கு வெளியே F.M நிகழ்ச்சிகள் தரமுடியாது . அதே போல் செல்போனில் 2G ( குரல் வழி சேவை ) ( 2 G - 2 nd Genaration ) .என்பதை 1710 மெகா ஹெர்ட்ஸ் முதல் 1880 மெகா ஹெர்ட்ஸ் என்ற 170 மெகா ஹெர்ட்ஸ் அகலமுள்ள அலைப்ப்ரவலில் தரமுடியும் . அதே போல் 3G சேவைகளை ( குரல் . டேட்டா , வீடியோ ) 1920 - 2170 மெகா ஹெர்ட்ஸ் அலைப்பரவலில் மட்டுமே தரமுடியும். அலைப்பரவலில் அகலம் குறைவாக இருப்பதால் அதைக்கொஞ்சம் பேர்தான் பகிர்ந்து கொள்ள முடியும்.எனவே ஸ்பெக்ட்ரத்தை பயன்படுத்துவதில் போட்டிகள் அதிகம். மேலும் ச்பெக்ரத்தை பயன்படுத்துவதில் வேறு சில சிக்கல்களும் உள்ளன . ஒரு பண்பலை வானொலி நிலையத்துக்கும் இன்னொரு வானொலி நிலையத்துக்கும் இடையில் 0.8 மெகா ஹெர்ட்ஸ் இருக்க வேண்டும் .அப்போதுதான் நிகழ்ச்சிகள் குழம்பாமல் தெளிவாக இருக்கும். பண்பலை வானொலியில் 25 மெகா ஹெர்ட்ஸ் - யை 0.8 -ஆக பிரித்தால் ஒரு நகரில் சுமார் 30 வானொலி நிலையங்கள் மட்டுமே அமைக்கமுடியும் . அதே போல் 2G சேவை என்றால் ஒரு நகரில் 10 சேவை நிறுவனங்கள் 1800 மெகா ஹெர்ட்ஸ் - யை ஒட்டி இருக்க முடியும் .3G சேவையை எடுத்துக்கொண்டால் 7 -8 பேர்தான் இருக்க முடியும் .இதனால் ஸ்பெக்ட்ரத்தை பயன்படுத்துவதில் போட்டிகள் அதிகம் .
Sunday, January 9, 2011
மர்மங்கள் நிறைந்த ஆழ்கடல்

சச்சின் ரமேஷ் தெண்டுல்கர்
பிறப்பு: 24 ஏப்ரல் 1973. பம்பாய் (தற்போது மும்பை), மஹாராஷ்டிரா, இந்தியா
மட்டை வீச்சு முறை: வலதுகை ஆட்டக்காரர்
பந்து வீச்சு முறை:வலதுகை சுழற்பந்து வீச்சாளர், இடப்புறமும், வலப்புறமும் சுழன்று திரும்பும் படியான சுழல் வீச்சு (off break, leg break googly). மிதவேக பந்து வீச்சு.
அணியில் வீரரின் நிலை: ஆல்ரவுண்டர்
விளையாடிய அணிகள்: இந்தியா, ஆசியா லெவன், மும்பை, மும்பை இந்தியன்ஸ், யார்க் ஷையர்
அறிமுகம்: டெஸ்ட் போட்டி: நவம்பர் 15-20, 1989, இந்தியா - பாகிஸ்தான் இடையே கராச்சியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி.ஒருதினப் போட்டி: டிசம்பர் 18, 1989 அன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே குர்ஜன்வாலாவில் நடைபெற்ற ஒருதினப் போட்டி20 ஓவர் போட்டி: டிசம்பர் 1, 2006 அன்று இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 20 ஓவர் போட்டி
தலைசிறந்த இந்திய கிரிக்கெட் ஆட்டக்காரரான சச்சின் தெண்டுல்கர் மும்பை மாநகரத்தைச் சேர்ந்த ஒரு நடுத்தரக் குடும்பத்தில், நான்காவது குழந்தையாகப் பிறந்தார். பல கிரிக்கெட் வீரர்களை உருவாக்கிய சாரதாஷ்ரம் வித்யாமந்திர் பள்ளியில் படித்தவர். உயர்நிலைப் பள்ளி படிப்போடு கல்விக்கு விடை தந்துவிட்டு கிரிக்கெட் வாழ்க்கையில் நுழைந்தவர்.
பின்னர் 1988/89 இல் மும்பை சார்பாக விளையாடிய இவர் 100 ரன்கள் குவித்தார். இந்த போட்டிதான் இவர் ஆடிய மாநிலங்களுக்கிடையிலான முதல் போட்டி என்பதும், அப்போது அவருக்கு வயது 15 என்பதும் குறிப்பிடத்தக்கது.
தெண்டுல்கர் 1989ஆம் ஆண்டு தம் 16வது வயதில் முதன் முறையாக பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதன்முதலாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். இத்தொடரின்போது பாகிஸ்தான் வீரர் வாக்கர் யூனிஸ் வீசிய பந்து பட்டு சச்சினின் வாயில் காயம் ஏற்பட்டது. ரத்தம் அவரது சட்டையில் வழிந்தபடி இருந்தது. ஆயினும் அவர், உடனே களத்தை விட்டு வெளியேறாமல், மன உறுதியுடன் காயத்துடனே விளையாடினார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் அவர் இரண்டு அரைசதங்கள் அடித்தார்.
1990-ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக தனது முதல் சதத்தை அடித்தார். அது முதல் இந்திய அணியில் நிலையாக தொடர்ந்து ஆடி வரும் இவர், டெஸ்ட் போட்டிகளில் 10,000 ரன்களுக்கு மேல் குவித்த ஏழு வீரர்களில் ஒருவராவார். அவர் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 11,782 ரன்கள் எடுத்து தரவரிசையில் இரண்டாமிடத்தில் உள்ளார். முதல் இடத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி முன்னாள் வீரர் பிரையன் லாரா 11,953 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் 39 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
ஒருதினப் போட்டிகளின் சாதனை நாயகன் இவர். அதிக அளவு (417) ஒருதினப் போட்டிகளில் விளையாடி வருகிறவர், ஒரு தினப் போட்டிகளில் அதிக அளவு (16,361) ரன்களைக் குவித்தவர், ஒரு தினப் போட்டிகளில் அதிக அளவு (42) சதங்களைக் கடந்தவர், ஒரு தினப் போட்டிகளில் அதிக அளவு (89) அரை சதங்களைக் கடந்தவர், 417 ஒரு தினப் போட்டிகளில் அதிக அளவு (57 முறை) ஆட்டநாயகன் விருதைப் பெற்றவர், 96 ஒரு தினப் போட்டி தொடர்களில் அதிக அளவு (13 முறை) தொடர்நாயகன் விருதைப் பெற்றவர் என பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்.
1999-ல் இந்தியாவில் நடைபெற்ற ஒருதினப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில், ராகுல் திராவிட்டுடன் (153 ரன்கள்) ஜோடி சேர்ந்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் 186 ரன்கள் குவித்தார். இப்போட்டியில் இந்திய அணி 174 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுவே ஒருதினப் போட்டிகளில் இவரது அதிகபட்ச ரன்களாகும். இதே போட்டியில்தான் திராவிட்டும் தனது ஒருதினப் போட்டிகளில் அதிகபட்ச ரன்களை பதிவு செய்தார்.
கிரிக்கெட் உலகின் உச்ச நட்சத்திரம் சச்சின் தெண்டுல்கரின் ஆட்டத்தைப் பார்த்துவிட்டு கிரிக்கெட் உலகின் பிதாமகன் டான்பிராட்மேன் சொன்ன வார்த்தைகள் 'நான் என்னுடைய இளம் வயதில் எப்படி துடிப்போடு கிரிக்கெட் விளையாடினேனோ.. அந்த நாட்களை என் கண் முன்னே நிறுத்துகிறார் சச்சின். அவர் ஆட்டத்தில் என்னைப் பார்க்கிறேன்' என்ற மனதாரப் பாராட்டினார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஏப்ரல், மே, ஜூன், 2008-ல் நடத்தப்பட்ட , 20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டு கிரிக்கெட் போட்டி (Indian Premier League) தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக தலைமையேற்று அரை இறுதிப்போட்டி வரை அணியை வழிநடத்திச் சென்றார். இவர், அப்போட்டித் தொடரில் காயம் காரணமாக முதல் பாதி ஆட்டங்களில் விளையாடவில்லை என்றாலும், பிற்பாதி ஆட்டங்களில் அணியை திறம்பட வழிநடத்தினார்.
இவரது ஆட்டமுறை கிரிக்கெட் விளையாட வருபவர்களுக்கு ஒரு பாடம். இவரது நேர்த்தியான பேட்டிங் திறமையால், பிற அணிகளில் உள்ள திறமை வாய்ந்த பந்து வீச்சாளர்கள் கூட இவருக்கு பந்து வீசத் திணறுவார்கள்.
அண்மையில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்த அணியில் இடம்பிடித்து விளையாடினார்.
இத்தொடரின்போது, டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் லாராவை (11,953 ரன்கள்) சச்சின் முந்துவார் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. இத்தொடரின் துவக்கத்தில் இச்சாதனை படைக்க சச்சினுக்கு 172 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், 6 இன்னிங்சிலும் சேர்த்து 95 ரன்கள் மட்டுமே எடுத்து, ரசிகர்களை ஏமாற்றினார். தற்போது இவர் 11,877 ரன்களுடன் இரண்டாமிடத்தில் இருக்கிறார்.
இத்தொடர் முடிவடையும் நேரத்தில் இவருக்கு காயம் ஏற்பட்டதால் இலங்கைக்கெதிரான ஒருதினத் தொடரில் இருந்து விலகினார்.
இவருக்கு அண்மையில்தான் இந்திய அரசு பத்மவிபூஷன் பட்டம் வழங்கி கௌவுரவித்துள்ளது.
Friday, September 17, 2010
கடும் எதிர்ப்பில் தமிழ் எழுத்தாளர் மாநாடு: முறியடிக்கப்படுமா ராஜபக்ஷேக்களின் ராஜதந்திரம்?
நெருப்பை காகிதத்தால் மூடி மறைப்-பதைப் போல சிங்கள அரசு தனது போர்க்குற்றத்தை மறைக்க என்னென்னமோ செய்து பார்த்துக் கொண்டிருக்கிறது.இந்திய உதவியுடன் சர்வதேச இந்திய பட விழாவை கொழும்பில் நடத்தி தனது ரத்தக் கறையை ஜிகினாவால் மறைக்க முயன்றது இலங்கை. ஆனால், தமிழகத்திலிருந்து எழுந்த வலிமையான எதிர்ப்பு அலைகளால் அந்த படவிழாவை தமிழ், இந்தி நட்சத்திரங்கள் புறக்கணிக்க... தோல்வியில் முடிந்தது விழா. இதையடுத்து இப்போது கொழும்பில் சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை நடத்த திட்ட-மிட்டிருக்கிறது சிங்கள அரசு. கருணா, கே.பி. போன்ற தமிழர்களை(?) தனது கைப்பிடிக்குள் வைத்துக் கொண்டு தமிழ் என்னும் முகத்துடன் சிங்கள அரசு நடத்த திட்டமிடும் இந்த மாநாட்டுக்கும் எதிர்ப்பு வலுக்க ஆரம்பித்துவிட்டது. கொழும்பு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கு எதிரான தமிழ் படைப்பாளிகள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பினர் சென்னையில் ஒன்றுகூடி ஒட்டு மொத்த தமிழுலகத்தின் எதிர்ப்பை வலிமையாக தெரிவித்துள்ளனர். ‘‘தனது கோர முகத்துக்கு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் மூலம் தமிழ் நேச அரிதாரம் பூசிக் காட்ட இலங்கை கடுமையாக முயற்சிக்கிறது. இதை முறியடித்து உலகெங்கிலும் உள்ள தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் இந்த மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்’’ என வேண்டுகோள் விடுத்திருக்கிறது இந்த கூட்டமைப்பு.இப்படி எதிர்ப்புகள் வலுத்துவரும் நிலையில்... சிங்கள அரசின் திட்டமான இந்த மாநாட்டில் பங்கேற்று ஆதரவு தெரிவிப்பதாக ஈழத் தமிழறிஞர் கா.சிவத்தம்பியைப் பற்றி செய்திகள் சிறகடித்துவந்தன. ஆனால், ‘கொழும்பு எழுத்தாளர் மாநாட்டுக்கு அரசியல் சாயம் பூசப்படுவதால் அதில் கலந்துகொள்ள வேண்டாம்’ என திடீர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார் சிவத்தம்பி.இதுபற்றியெல்லாம் ஈழத் தமிழ் எழுத்தாளரும், கடந்த அறுபது ஆண்டுகளாக ஈழத் தமிழ் படைப்பிலக்கிய முன்னோடியுமான எஸ்பொ என்று சுருக்கமாக அழைக்கப்படும் எஸ். பொன்னுத்துரையிடம் பேசினோம்.‘‘இலங்கையில் தமிழர்களே இருக்கக் கூடாது என வெளிப்படையாக அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் ராஜபக்ஷே சகோதரர்களின் ஆலோசனையின்படிதான் கொழும்பில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழர்களை கொன்று குவித்த தடம் எதுவும் தென்படக் கூடாது என்பதற்-காகவே நல்லூர் கந்தசாமி கோயில் திருவிழா, ஆடி விழா, எழுத்தாளர் மாநாடு போன்றவற்றை நடத்தி... இலங்கையில் தமிழர்கள் சகஜமாக இருக்கிறார்கள் என்ற தோற்றத்தை உலக அரங்கில் உருவாக்கப்பார்க்கிறார்கள் ராஜபக்ஷே சகோதரர்கள். இந்தத் தோற்றத்தை உருவாக்க மகத்தான சாயமாக எழுத்தாளர் மாநாட்டை நடத்த முயற்சிக்கிறார்கள் ராஜபக்ஷேக்கள்.எனக்கு கொழும்பிலிருந்து கிடைத்த நம்பகமான, உறுதிப்படுத்தப்பட்ட தகவல் என்னவென்றால்... சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கு எதிரான விடயங்களை பிரசுரிக்கவேண்டாம் என்று அனைத்து தினசரிகளையும் அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது என்பதுதான். ஆக, இந்த மாநாடு தனக்கு சாதகமானது என சிங்களனே நினைக்கிறான் என்றால், இதன் பின்னால் இருந்து இயக்குபவர்கள் யார் என்பது தெளிவாகிறது. முள்ளிவாய்க்கால் படு-கொலைக்கு சில தினங்கள் முன்பாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நடேசன், லண்டன் பாலசுப்ரமணியன் ஆகியோர் ராஜபக்ஷே சகோதரர்களை சந்தித்து விருந்துண்டு மகிழ்ந்தவர்கள். அவர்கள்தான் இந்த மாநாட்டை நடத்தும் பொறுப்புகளில் இருக்கிறார்கள். தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டே தமிழ் தேசியத்தை எதிர்ப்பவர்கள்தான் சிங்களனுக்கு சாதகமாக கொழும்பில் இந்த மாநாட்டை நடத்துகிறார்கள் என்பது வெளிப்படையாகிவிட்டது’’ என்ற எஸ்பொவிடம்... ‘‘சிவத்தம்பி மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறாரே?’’ என்று கேட்டோம்.‘‘சமீபகாலமாக சிவத்தம்பி முன்னுக்குப் பின் முரணாக பேசிவருகிறார். தமிழ்நாட்டில் நடந்த செம்மொழி மாநாட்டில் கூட முதலில் சிவத்தம்பி பங்கேற்கப்போவதில்லை என்ற நிலையில் இருந்தார். பின் திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு மாநாட்டில் கலந்துகொண்டார்.அதேபோலத்தான் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு விடயத்திலும் இப்போது முரணான நிலையை மேற்கொண்டிருக்கிறார். அந்த மாநாட்டின் அமைப்பாளர்கள், ‘சிவத்தம்பி முன்னிலையில்தான் மாநாட்டுக்கான ஆலோசனைக் கூட்டமே நடந்ததாகச் சொல்கிறார்கள். ஆனால் சிவத்தம்பி திடீரென மாநாட்டை எதிர்க்கிறார். இந்த விடயத்தில் வரவேற்கத்தகுந்த அவருடைய மன மாற்றத்துக்கு காரணம் தெரியவில்லை.இந்த மாநாடு நடக்கவே கூடாது என்பது எங்கள் எண்ணம் அல்ல. ஆனால், தமிழர்களைக் கொன்றொழித்த ராஜபக்ஷே சகோதரர்கள் உலக அரங்கில் தங்கள் போர்க்குற்றத்தை மறைத்துக்கொள்ள கேடயமாக கொழும்பில் இந்த மாநாடு நடப்பதைத்தான் எதிர்க்கிறோம்’’ என விரிவாகப் பேசினார் எஸ்பொ.‘பேரழிவு ஆயுதங்களை தமிழனுக்கு எதிராக தூக்கிய ராஜபக்ஷேக்கள், இன்று தமிழனின் பேனாவையே தமிழனுக்கு எதிராக தூக்கத் துணிந்துவிட்டனர். கொழும்பின் கொழுப்பை அடக்க, இந்த மாநாட்டுக்கு எதிரான எதிர்ப்பு மேலும் வலுப்படுவது அவசியம்’ என்பதே மிகப் பெரும்பான்மையான தமிழ் உணர்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.
ஜாதி அமைப்பு முறை இருக்கும் வரை ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற முடியாது
ரஷ்யா போன்ற நாட்டில் பார்ப்பானும் இல்லை; பறையனும் இல்லை. அந்த நாடுகளிலே என்னதான் அடக்குமுறைகள் இருந்ததாகச் சொல்லப்பட்டாலும், அறிவுக்கும் சிந்தனைக்கும் உரிமை இருந்தது. இந்த நாட்டைப் போல் அதை நினைத்தாலே கடவுள் கண்ணைக் குத்திவிடுவார்; அந்த சங்கதியை ஆராய்ந்தாயானால் நரகத்திற்குப் போய் விடுவாய்; இது கடவுளுக்கு விரோதம் என்கிற மாதிரியான நிலைமை இல்லை.
மார்க்ஸ், லெனின், ஏங்கெல்ஸ் முதலியவர்கள் இந்தப்படிதான் முயற்சி செய்ய வேண்டும் என்று சொன்னார்கள் என்பது, கம்யூனிஸ்டுகளின் வாதம். நம்டைய வாதம் என்னவென்றால், இந்த நாட்டின் நிலைமையும் தன்மையும் காரல் மார்க்சுக்கோ, லெனினுக்கோ அல்லது ஏங்கெல்சுக்கோ தெரியாது. இந்த நாட்டிலே பார்ப்பான் என்று ஒரு ஜாதி பிறவியிலேயே மேல் ஜாதியாகவும், மற்றவர்கள் எல்லாம் கீழ்ஜாதியாகவும் இருக்கிற சதாய அமைப்பு இந்த நாட்டிலே இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாது. அதனால் மார்க்ஸ் வழியோ, லெனின் தலைறையோ இந்த நாட்டுக்கு ஒத்து வராது என்பது நம்முடைய வாதம்.
உண்மையாகவே இந்த நாட்டுக் கம்யூனிஸ்டுகள் நினைக்க வேண்டும்; அவர்களுடைய ஆதரவாளர்கள் என்பவர்களும் அறிய வேண்டும். தன் முதலில் இந்த நாட்டில் சமதருமப் பிரச்சாரம் செய்து அதற்கு ஆகவென்றே சிறைக்குப் போனவன் நான். 30 வருடமாக இந்த அடிப்படையில் தானே நாங்கள் பொதுப்பணி புரிகிறோம்! கம்யூனிஸ்டுகள் வெறும் பொருளாதாரத்தை மட்டும் முன்னிறுத்திச் சொல்லுகிறார்கள். நாங்கள், பொருளாதாரத் துறையிலே இருக்கிற பேதம் ஒழிய வேண்டியதுதான் ஆனால், சமுதாயத் துறையிலே இருக்கிற பேதம் ஒழிந்தால்தான் சமத்துவம் கிடைக்கும் என்கிறோம். பொருளாதாரத் துறை பேதமொழிப்பு வேலை எங்களுக்கு விரோதமானதல்ல. ஆனால், சமூதாயத் துறையிலே இருக்கிற பேதம் ஒழிந்தால்தான் சமத்துவம் கிடைக்கும் என்கிறோம். ஆனால், சமூதாயத்துறை பேதமொழிப்புக் காரியத்தைக் கம்யூனிஸ்டுகள் ஒத்துக் கொள்வதில்லை.
தோழர்களே! பொருளாதாரப் புரட்சிக்கு சர்க்காரை (ஆட்சியை) ஒழித்தாக வேண்டும்; மாற்றியமைத்தாக வேண்டும். ஆனால், சமூதாயப் புரட்சியை சர்க்காரை ஒழிக்காமலேயே உண்டாக்க முடியும். மக்கள் உள்ளத்திலே, இன்றைய சமூதாய சம்பந்தமாக உள்ள உணர்ச்சியையும், பயத்தையும் போக்கி, பிரத்தியட்ச (உண்மை) நிலையை மக்களுக்கு உணர்த்தினால் போதும். நிலைமை தானாகவே மாறும். இந்தச் சமூதாய அமைப்பை, இன்றைய சர்க்கார் அமைப்பு இருக்கும் போதே மாற்றிவிட முடியும் மக்கள் பகுத்தறிவு பெறும்படிச் செய்வதன் மூலமாக. 30 ஆண்டுகளுக்கு முன் இந்நாட்டில் ஜாதி ஆணவம், திமிர் எவ்வளவு இருந்தது! இன்று எங்கே போயிற்று அந்த ஜாதி ஆணவம் திமிரும்?
30 ஆண்டுகளுக்கு முன் இந்த நாட்டுத் திராவிடப் பெருங்குடி மக்கள் எவ்வவு காட்டுமிராண்டித்தனமாக, கேவலமாக நடத்தப்பட்டார்கள்? அந்த நிலைமை இன்று எவ்வளவோ தூரத்துக்கு மாற்றமடைந்து விட்டதே! எப்படி முடிந்தது இவ்வளவும்? சர்க்காரைக் கவிழ்க்கும் முயற்சி செய்ததாலா? அல்லது அண்டர் கிரவுண்ட் (தலைமறைவு) வேலையாலா? இல்லையே! மக்கள் உள்ளத்திலே பகுத்தறிவு உணர்ச்சி ஏற்படும்படியாகச் செய்ததன் காரணமாக, நிலைமையில் வெகுவாக மாறுதல் ஏற்பட்டிருக்கிறது.
முதலில் இந்தக் காரியத்தைச் செய்வோம். பிறகு தானாகவே பொருளாதார உரிமையை ஏற்படுத்திவிட முடியும். பணக்காரத் தன்மைக்கும் அஸ்திவாரமாய், ஆதாரமாய் பேதத்தை ஒழிப்போமானால், தானாகவே பொருளாதார உரிமை வந்துவிடும். ஆகவே, இந்தத் துறையில் பாடுபட முன் வாருங்கள் என்று அன்போடு, வணக்கத்தோடு அழைக்கிறேன்.
இன்னும் சொல்லுகிறேன். இந்த ஜில்லாவையே எடுத்துக் கொள்ளுங்களேன்: யார் இந்த ஜில்லாவில் பணக்காரர்கள்? முதலாவது பணக்காரன் கோயில் சாமிகள்; அதற்கடுத்த பணக்காரன் நிலமுடையோன் பார்ப்பான்; அதற்கடுத்தபடியாக பணக்காரன், நிலமுடையோன் சைவர்கள் என்ற சூத்திர ஜாதியிலே சற்று உயர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள். அதற்கடுத்தபடி, தூக்கியவன் தர்பார் என்பது போல இருக்கிறவனுக்குக் கொஞ்சம் சொத்து. கடைசியிலே யாருக்கு ஒன்றும் இல்லையென்றால், சூத்திரனிலே தாழ்த்த ஜாதி என்று சொல்லப்படுகிறவனுக்குக் கொஞ்சம் சொத்து. கடைசியிலே யாருக்கு ஒன்றும் இல்லையென்றால் சூத்திரனிலே தாழ்ந்த ஜாதி என்று சொல்லப்படுகிறவனுக்கும், பஞ்சமனுக்குந்தான் ஒன்றுமே இல்லை. இப்போது சொல்லுங்கள்: பணக்காரன் ஏழை என்கிற பாகுபாடு, உயர் ஜாதி தாழ்ந்த ஜாதி என்ற அமைப்போடு ஒட்டிக் கொண்டு, சார்ந்து கொண்டு இருக்கிறதா, இல்லையா?
இந்த அடிப்படைகளை நாம் புரிந்து கொள்ளாமலேயே இருக்கிறோம். யாரும் எடுத்துச் சொல்லுவதில்லை. காரணம், இந்த நாட்டின் எல்லாத் துறையும் மேல் ஜாதிக்காரர்கள் என்கிற பார்ப்பனர்களிடத்திலும் பணக்காரர்களிடத்திலும் சிக்கிக் கொண்டதால், அவர்கள் இந்த அமைப்பு இருக்கிறவரையில் லாபம் என்று கருதி, இந்த அமைப்பின் நிலத்தில் கையே வைப்பதில்லை. மக்களை வேறு பக்கம் திருப்பிவிட்டு விடுகிறார்கள். அதனால்தான் 2000 வருடங்களாக இப்படியே இருக்கிறோம். இன்னம் சொல்லுகிறேன், இந்தத் தொழிலாளி ஜாதி, முதலாளி ஜாதி அமைப்பு முறை அதாவது பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிறவரையில், இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்.
காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த.......
ஆனால், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் தலைநகர் டெல்லியில் நேற்று நடந்து முடிந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஐந்தரை மணி நேரம் விவாதித்தப் பிறகும் நமது தலைவர்களால் இந்த உண்மையை உணர்ந்து கொள்ள முடியவில்லை.
காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து, அனைத்து மாவட்டங்களிலும் நிகழும் அல்லது நிகழ்த்தப்படும் வன்முறைக்கு, கல்லெறியும் வன்முறையாளர்கள் கூறும் ஒரே காரணம்: காஷ்மீரில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தையும் மத்திய கூடுதல் காவற்படைகளையும் வெளியேற்ற வேண்டும் என்பதே. இந்த கோரிக்கையில் உள்ள நியாயத்தை காஷ்மீரிகளிடையே பேட்டி கண்ட ஊடகங்கள் தெட்டத் தெளிவாக வெளிப்படுத்தின.
“எங்களுடைய அன்றாட வாழ்க்கையில் சுதந்திரமில்லை. சாலைகளிலும், தெருக்களிலும் நிறுத்தப்பட்டிருக்கும் காவற்படைகளும், இராணுவத்தினரும் சோதனை என்ற பெயரில் எங்களிடம் அத்துமீறுகின்றனர், அவமானப்படுத்துகின்றனர். எங்களது பெண்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். எங்களுக்குத் தனி மனித சுதந்திரம் மறுக்கப்படுகிறது. இராணுவத்தாலும், மத்திய கூடுதல் காவற்படைகளாலும் காஷ்மீர் சிறைபடுத்தப்பட்டுள்ளது” என்று கூறுகின்றனர்.
இவ்வாறு கூறுபவர்கள் காஷ்மீரிகள் மட்டுமல்ல, காஷ்மீரிலுள்ள மற்ற மாநிலத்தவரும், அயல் நாட்டவர்களும்தான். பாதுகாப்புப் படையினரால் தாங்கள் அடித்துத் துன்புறுத்தப்பட்டதாக ஸ்ரீநகரில் வாழுந்து வரும் பிரேசிலைச் சேர்ந்த கால்பந்தாட்ட பயிற்சியாளரும் அவருடைய மனைவியும் கூறினர். இதையெல்லாம் இந்தியாவிலுள்ள அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
எனவேதான் பாதுகாப்புப் படைகளை குறிவைத்து அவர்கள் கல் வீசி வன்முறையில் ஈடுபடுகின்றனர். அவர்களை ஒடுக்க முற்பட்ட காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 72 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயினும், தங்கள் சுதந்தரத்தை, அன்றாட வாழ்வை கேள்விக்குறியாக்கும் அந்தப் படைகள் தங்கள் மண்ணை விட்டு வெளியேற வேண்டும் என்பதே காஷ்மீரிகளின் கோரிக்கை.
அதுமட்டுமல்ல, காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் பிரகடனம் செய்யப்பட்டுள்ள ஆயுதப் படைகள் சிறப்புச் சட்டம் (Armed Forces Special Powers Act - AFSPA). காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதம் தலைதூக்கியிருந்தபோது, அவர்களை ஒடுக்க, இராணுவத்திற்கு கூடுதல் அதிகாரமளிக்க பிரகடனம் செய்யப்பட்ட இச்சட்டம் இன்றுவரை நடைமுறையில் உள்ளது.
தாங்கள் சந்தேகப்படும் எவரையும் கைது செய்து அழைத்துச் சென்று விசாரணைக்கு உட்படுத்தவும், எந்த வீட்டிற்குள் நுழைந்தும் எந்த நேரமும் சோதனையிடவும், கைது செய்யவும், எத்தனை நாட்கள் வேண்டுமாயினும் விசாரணையில் வைக்கவும் ஆயுதப் படைகளுக்கு இச்சட்டம் அதிகாரமளிக்கிறது.
இச்சட்ட அதிகாரத்தை வைத்துக் கொண்டு இராணுவமும் காவற்படையும் எப்படிப்பட்ட அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகின்றன என்பதற்கு உதாரணம்தான், சோபியானில் இரண்டு பெண்கள் இராணுவத்தினரால் கடத்திச் செல்லப்பட்டு கற்பழிக்கப்பட்டு பிறகு கொல்லப்பட்ட (இந்த உண்மையை தனது அதிகாரத்தை பயன்படுத்தி மத்திய அரசு மறைத்தது) சம்பவமாகும். இதைப்போல் பல நூறு சம்பவங்கள் காஷ்மீரில் நடந்துள்ளன. ஆனால் அவைகள் மறைக்கப்படுகின்றன அல்லது அரசால் மறுக்கப்படுகின்றன.
பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் ஒரு நிரந்தரமான அடக்குமுறைக்கு ஒட்டுமொத்த காஷ்மீரும் உட்படுத்தப்பட்டுள்ளது எனும் உண்மையை இந்தியர்களாகிய நாம் முதலில் ஒப்புக் கொள்ள வேண்டும். ஏனெனில் அரசுகள் தங்கள் தவறுதலான, ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு நியாயம் கற்பிப்பதை வழக்கமாக கொண்டுள்ளன.
பயங்கரவாதம், தீவிரவாதம், ஊடுறுவல் (பத்திரிக்கைகளில் வெளியான மாகில் படுகொலை) ஆகிய சொற்கள் எல்லாம் அரசுகளின் ஜனநாயகத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளை மறைக்கவும், தொடரவும் வசதியாக பயன்படுத்தப்படுகின்றன. இதுதான் காஷ்மீரில் நடக்கிறது.
எனவே, அவர்களின் இரண்டாவது கோரிக்கை, ஆயுத படைகள் சிறப்புச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பது. இந்தியாவைப் போன்ற ஜனநாயக நாட்டில் மனித உரிமைகளை பறித்து, அவர்களை மனிதாபிமானமற்ற வகையில் நடத்தும் சட்டங்களுக்கு நிரந்தரமாக இடமளிப்பது எவ்வாறு ஏற்கத்தக்கதாகும்?
இராணுவத்தினருக்கும், இதர ஆயுதப் படைகளுக்கும் எதிராக இப்போது காட்டப்படும் கல்வீச்சு எதிர்ப்பின் காரணத்தை மத்திய அரசு உணர்ந்தும், பிரச்சனையை திசை திருப்பும் வகையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் என்றும், பேச்சுவார்த்தைக்கு அழைப்பு என்றும் கூறுவது அம்மக்களை மேலும் அந்நியப்படுத்திவிடும்.
இப்போதே அவர்கள் மிக அதிகமான அந்நியப்பட்டுவிட்டார்கள். அவர்களின் அரசியல் எதிர்பார்ப்புகள் தொடர்ந்து புறந்தள்ளப்பட்டு வந்த காரணத்தில் உருவான விளைவு இது. காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று மட்டும் பேசினால் தவறாகும், அம்மக்களும் எம்மக்களே என்பதை தனது நடவடிக்கையின் மூலம் அரசு நிரூபிக்க வேண்டும். இதற்கு பாரதிய ஜனதா உள்ளிட்ட அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டத் தேவையில்லை. காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்களின் பிரதிநிதிகளாகவும், குரல்களாகவும் விளங்கும் தலைவர்களோடும், இயக்கங்களோடும் மத்திய அரசு பேச வேண்டும். இதைத்தான் அங்கு தொடர்ந்து போட்டியிட்டு வென்றுவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சட்டப் பேரவை உறுப்பினர் தாரிகாமி கூறுகிறார்.
காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு உண்மையாக விரும்பினால், அது செய்ய வேண்டியது, அங்கு மக்கள் வாழும் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள மத்திய கூடுதல் காவற்படைகளை திரும்பப் பெற வேண்டும், எல்லையைத் தவிர மற்றப் பகுதிகளில் இருந்து இராணுவத்தை திரும்பப் பெற வேண்டும், ஜனநாயக சூழலிற்கும், வாழ்விற்கும் எதிரான ஆயுதப்படை சிறப்புச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
இதைச் செய்யாமல், ஒரு கோடி மக்கள் வாழும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் 5 இலட்சம் இராணுவத்தினரையும், மேலும் 2 இலட்சம் ஆயுதப் படைகளை நிறுத்தி வைத்துக் கொண்டு பேச்சுவார்த்தையின் மூலம் சுமூகத் தீர்வு காண்போம் என்று பிரதமர் கூறுவாரேயானால், அது மற்ற இந்திய மக்களை ஏமாற்றுவதற்கு ஒப்பாகும்.
ஏனெனில், காஷ்மீரைப் பொறுத்தவரை அமைதிக்கு எதிரி வன்முறை மட்டுமல்ல, ஆயுதப் படைகளும்தான் என்பதை பிரதமர் உணர்ந்து செயலாற்ற வேண்டும்
Saturday, August 14, 2010
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
நாம் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் கொண்டாடும்போதேல்லாம் குறிப்பிட்ட பிரபலமடைந்த தலைவர்களின் புகழைப்பாடிக்கொண்டிருக்கின்றோம் .சாதாரணமாக நமக்கு தெரிந்த சுதந்திர போராட்ட வீரர்கள் என்றால் அதிகபட்சமாக ஒரு ஐம்பது தியாகிகளைப்பற்றி கூறமுடியும். ஆனால் சுதந்திரத்திற்காக எத்தனை ஆயிரம் மக்கள் தனது உயிரையும் தியாகம் செய்திருக்கிறார்கள் . அவர்களின் பெயர்கள் கூட நமக்கு தெரியாதே . தனது பெயரைக்கூட சுதந்திரத்திற்க்காக தியாகம் செய்த தியாகிளைப்பற்றியும் நாம் தெரிந்துகொள்வோம் . அந்த அடிப்படையில் இன்று திரு .பி. கக்கன் அவர்களிப்பற்றி சில தகவல்கள் ...இளமைக்காலம்
கக்கன் ஜூன் 18, 1908 ஆம் ஆண்டு மதராஸ் இராசதானியாக தமிழகம் இருந்தபொழுது மதுரை மாவட்ட, மேலூர் தாலுக்காவிலுள்ள தும்பைபட்டி கிராமத்தில் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தையார் பெயர் பூசாரி கக்கன், கிராமக் கோயில் அர்ச்சகராக (பூசாரியாக) பணிபுரிந்தவர். தொடக்கக் கல்வியை மேலூரில் பயின்ற அவர் மேல்நிலைப் படிப்பிற்காக திருமங்கலம் வந்து அங்கே ஓர் அரசு மாணவர் விடுதியில் தங்கிப் படித்தார்.
இந்திய விடுதலை போராட்டம்
கக்கன் தனது இளவயதிலேயே சுதந்திர போராட்டத்தில் ஈடுபடலானார். பள்ளி மாணவப்பருவத்திலேயே கங்கிரசு இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டார். அன்றைய காலகட்டத்தில் தலித்துகள் மற்றும் சாணார்கள் கோயில்களில் நுழைவது தடை செய்யப்பட்டிருந்தது. இராஜாஜி அரசு கோயில் உள்நுழைவு அதிகாரம் மற்றும் உரிமைச் சட்டம், 1939 என்ற சட்டத்தினை கொண்டு வந்ததின் விளைவாக தலித்துக்கள் மற்றும் சாணார்கள் கோயில்களில் நூழைய தடைசெய்யபட்டிருந்ததை இச்சட்டம் நீக்கியது. மதுரையில் கக்கன் தலித்துக்கள் மற்றும் சாணர்களை தலைமைத் தாங்கி மதுரை கோயிலினுள் நுழைந்தார். ஆங்கிலேயனே வெளியேறு இயக்கத்திலும் கக்கன் பங்கேற்று அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். 1946 இல் நடந்த தொகுதிப் பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று 1946 முதல் 1950 வரை உறுப்பினராக பொறுப்பு வகித்தார்.
சுதந்திர இந்தியாவில் அரசியல் பணி
கக்கன் இந்தியா நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராக 1952 முதல் 1957 வரை பொறுப்பு வகித்தார். காமராசர் தமிழகத்தின் முதல்வர் பொறுப்பை ஏற்கும் பொருட்டு தான் வகித்து வந்த தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் {கமிட்டி) தலைவர் பதவியை விட்டு விலகியபொழுது கக்கன் அந்தப் பதவியை ஏற்றார்.1957 இல் இந்திய தேசிய காங்கிரஸ் மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்று மதராஸ் மகாணத்தின் ஆட்சி பொறுப்பை ஏற்றது. கக்கன் பொதுப்பணித்துறை (மின்துறை நீங்கலாக), அரிசன நல்வாழ்வு, பழங்குடியினர் நலத்துறை ஆகியத் துறைகளின் அமைச்சராக ஏப்ரல் 13, 1957 இல் பொறுப்பேற்று கொண்டார். மார்ச் 13, 1962 முதல் அக்டோபர் 3, 1963 வரை விவசாயத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். ஏப்ரல் 24, 1962, முதல் வணிக ஆலோசனைக்குழுவின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். அக்டோபர் 3, 1963 அன்று மாநில உள்துறை அமைச்சராக பொறுப்பேற்று 1967 இல் காங்கிரஸ் தமிழ்நாட்டில் தோற்கும் வரை அப்பொறுப்பிலிருந்தார் .
நற்பணிகள்
கக்கன் அமைச்சராகப் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் மேட்டூர், வைகை அணைகள் கட்டப்பட்டன. தலித்துக்களின் வாழ்வு முன்னேற்றத்திற்காக அரிசன சேவா சங்கம் உருவாக்கப்பட்டது. அவர் விவசாய அமைச்சராக பொறுப்பில் இருந்த காலத்தில் இரண்டு விவாசாயப் பல்கலைக் கழகங்கள் மதராஸ் மகாணத்தில் துவக்கப்பட்டன. இவரின் நாட்டுக்காற்றியப் பணிகளைப் பாராட்டி இந்திய அரசு இவரின் உருவப்படம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை 1999 ஆண்டு வெளியிட்டு கௌரவப்படுத்தியது.
அரசு மருத்துவமனையில் இடமில்லாமல்....
மேனாள் தமிழக முதல்வர் ம.கோ.இரா அவர்கள் தனக்குத் தெரிந்த ஒருவரைப் பார்க்கும் பொருட்டு மதுரை அரசு இராசாசி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்றிருந்தார். அங்கே தற்செயலாக படுக்க படுக்கை கூட இன்றி தரையிலே படுத்துக் கிடந்த ஒரு நோயரைக் கண்டதும் அவரருகில் சென்று அவர்நிலை கண்டு வருந்தினார். அந் நோயர் வேறு யாருமல்ல. தியாகி கக்கனே!
தியாகி கக்கனைப்பற்றிய தகவல்களோடு இனிய சுதந்திர தின வாழ்த்துக்களையும் நண்பர்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கின்றேன் .
Monday, July 26, 2010
நோக்கியாவின் அட்டூழியமும் அதை அம்பலப்படுத்திய வினவும்
சென்னை நோக்கியா ஆலையில் சமீபத்தில்தான் வேலை நிறுத்தம் ஒன்று நடந்திருந்தது. அது குறித்து வினவின் சென்னை செய்தியாளர்கள் குழு ஒன்று செய்தி சேகரிக்கச் சென்ற போது ஆலையில் உள்ள தொழிலாளிகள் பெரும் விபத்து ஒன்றை அல்லது சதியை எதிர் கொண்டு துடித்துக் கொண்டிருந்தார்கள். இந்தக் கட்டுரைக்காக சுங்குவார்சத்திரம், நோக்கியா ஆலை, ராமச்சந்திரா மருத்துவமனை ஆகிய மூன்று இடங்களுக்கும் சென்று நேரில் பார்த்தும் விசாரித்தும் இந்த கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. புகைப்படம் எடுப்பதை ஆலை நிர்வாகிகள் எதிர்த்தாலும் விடமால் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. தோழர்களைத் தவிர அங்கே எந்த செய்தியாளர்களும் இல்லை.
அதிர்ச்சியில் உறைந்து போனோம்!
மொத்தம் ஆறு தொழிலாளர்கள். அவர்களில் இருவர் பெண்கள். இவர்கள் அனைவருமாக சேர்ந்து சக பெண் தொழிலாளி ஒருவரை தூக்கிக் கொண்டு வேகமாக நோக்கியா நிறுவனத்திலிருந்து ஓடி வந்தார்கள். வேறு யாருமே உடன் வரவில்லை. இந்த ஏழு பேருக்கும் அதிகம் போனால் 24 வயதுதானிருக்கும். அனைவரது உடலிலும் வறுமை குடி கொண்டிருந்தது. கண்களில் இயலாமை, பரிதவிப்பு. அடுத்து எந்தத் தொழிலாளி ரத்த வாந்தி எடுத்து மயக்க மடைவாரோ என்ற பதட்டம் அவர்களது இதயத்தை பலமாக துடிக்க வைத்தது.
கைகள் நடுங்கியபடியே அந்தப் பெண் தொழிலாளியை சுமந்தபடி எத்தனை கிலோ மீட்டர்கள் ஓடி வந்தார்கள் என துல்லியமாக சொல்ல முடியவில்லை. இரும்பு வேலியிட்ட தொழிற்சாலையின் கதவுக்கு வெளியே ‘ஜெயா மருத்துவமனை’ ஆம்புலன்ஸ் வண்டி நின்றிருந்தது. அந்த ஆம்புலன்சை தொழிற்சாலைக்குள் நிர்வாகம் அனுமதிக்கவில்லை.
எனவே உள்ளடங்கியிருந்த தொழிற்சாலையில் மயக்கமான அப்பெண்ணை காப்பாற்றும் பொருட்டு அந்த ஆறு பேரும் தங்கள் சக்திக்கு அப்பாற்பட்டு சுமந்தபடி ஓடி வந்தார்கள். அப்பெண்ணை ஆம்புலன்சில் ஏற்றிய பிறகும் அவர்கள் சமாதானமாகவில்லை. ஆம்புலன்சில் உடன் சென்ற தன் நண்பரிடம், ஒரு தொழிலாளி, ”மச்சான்… ‘ஜெயா மருத்துவமனை’ வேண்டாம்டா… நேரா ராமசந்திரா கூட்டிட்டுப் போங்க…” என்று சொல்லி முடிப்பதற்குள் அந்த ஆம்புலன்ஸ் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பறந்துவிட்டது. காற்றில் மிதந்த தனது சொற்களை திரும்பவும் சேகரித்த அத்தொழிலாளி தனது கைப்பேசி மூலம், ஆம்புலன்சில் சென்ற தன் நண்பனை அழைத்து மீண்டும் அதையே சொன்னார்.
நோக்கியா ஆலை விபத்தின் ஆரம்பம்!
கடந்த சனிக்கிழமை (24.07.10) மாலை 6 மணிக்கு நோக்கியா என்ற பன்னாட்டு நிறுவனத்தின் வாசலில் நடந்த சம்பவம் இது. இச்சம்பவம் நடப்பதற்கு அரைமணி நேரத்துக்கு முன்னால் வரை ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், தொழிற்சாலையின் வாயிலில் குழுமியிருந்தார்கள். பணிக்கு திரும்ப மாட்டோம் என்ற உறுதி அனைவரிடமும் தென்பட்டது. ஆனால் தி.மு.க.வின் கொடி பறந்த காரிலிருந்து இறங்கிய கரை வேட்டி மனிதர், ‘அனைத்தையும்’ தான் பார்த்துக் கொள்வதாகவும், ‘இனி எதுவுமே’ நடக்காது என்றும் சொன்ன பிறகு தொழிலாளர்களின் உறுதி நொறுங்கியது. வேறு வழியின்றி தொழிற்சாலைக்குள் சென்றார்கள்.
கரை வேட்டியின் நடிப்புக் கருணை கனவானின் கார் சென்ற 15 நிமிடத்தில் மீண்டும் அந்த கொடூரம் நிகழ ஆரம்பித்தது. மீண்டும் ஒரு பெண் தொழிலாளி ரத்த வாந்தி எடுத்து மயக்கமானார். அவரை ஆறு தொழிலாளர்கள் மட்டுமே ஆம்புலன்ஸ் வரை சுமந்து வந்தார்கள். மற்றவர்களை வெளியே செல்ல தொழிற்சாலை நிர்வாகம் அனுமதிக்கவில்லை.
விஷவாயு கசிவுதான் இதற்கு காரணம். 1984ம் ஆண்டு போபாலில் அரங்கேறியதே ஒரு கொடூரம், அதற்கு சற்றும் குறையாத சம்பவங்கள் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரிலும் நடைபெற ஆரம்பித்திருப்பதன் அறிகுறிதான் மேற்கண்ட சம்பவம்.
நோக்கியாவும் அதன் சகோதரத்துவ நிறுவனங்களும்!
‘நம்ம நாட்டு செல்ஃபோன்’ என்ற அடைமொழியுடன் இந்திய சந்தையில் கோலோச்சும் நோக்கியா நிறுவனத்தின் கிளை, சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் இருக்கிறது. ஃபெர்லெக்ஸ், ஸ்கல்காம், டெர்லாஸ், ஃபாக்ஸ்கான் ஆகியவை நோக்கியா நிறுவனத்துடன் தொடர்புடைய துணை நிறுவனங்கள். இந்த துணை நிறுவனங்களின் தொழிற்சாலைகளும், நோக்கியா தொழிற்சாலையின் எல்லைக்குள்ளேயே அமைந்திருக்கின்றன. சந்தைக்கு வரும் நோக்கியா கைப்பேசியின் உதிரி பாகங்களை இந்த துணை நிறுவனங்கள் தங்களுக்குள் பங்கிட்டு தயாரிக்கின்றன.
இதில் ஃபாக்ஸ்கான் என்ற துணை நிறுவனத்தின் சைட் 3இல்தான் கடந்த வெள்ளிக்கிழமை (23.07.10) மதியம் ஒன்றரை மணிக்கு மேல் அந்தக் கொடூரம் நிகழ ஆரம்பித்தது. முதல் ஷிப்டுக்கு வந்த தொழிலாளர்கள், மதிய உணவை சாப்பிட்டுவிட்டு அப்போதுதான் பணிக்கு திரும்பியிருந்தார்கள். சீராக இருக்க வேண்டிய சுவாசம், எக்குத்தப்பாக மாறியது. பலருக்கு மூச்சுத் திணற ஆரம்பித்தது. கண்கள் எரிந்தன. திரண்ட உமிழ்நீரில் ரத்தம். அது குளிர்பதனம் பொருத்தப்பட்ட தொழிற்சாலை. எனவே உள்ளிருக்கும் காற்று வெளியேறவும், வெளியிலிருந்து காற்று உள்ளே வரவும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
காரணம் தெரியாத விபத்தும், பாதிப்படைந்த தொழிலாளிகளும் !
ஏதோ விபரீதம் என தொழிலாளர்கள் உணர்வதற்குள், யாருமே எதிர்பார்க்காத நேரத்தில், பணியிலிருந்த ஒரு பெண் தொழிலாளி ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். பதறிப் போன மற்ற தொழிலாளர்கள், அவரை அணுகி என்ன ஏது என்று பார்ப்பதற்குள் அடுத்தடுத்து ஆண்களும், பெண்களுமாக பல தொழிலாளர்கள் சடசடவென்று ரத்த வாந்தியுடன் மயங்கி விழ ஆரம்பித்தார்கள். பணியில் இருந்த மற்ற தொழிலாளர்களுக்கு எதுவும் புரியவில்லை.
என்ன நடக்கிறது என்று அவர்களுக்கு சொல்ல வேண்டிய நிர்வாகம் அலட்சியமாக இருந்தது. ‘இன்னிக்கி ஆடி மாசம் முதல் வெள்ளிக்கிழமை இல்லையா? அதான் விரதம் இருந்திருக்காங்க. பசி மயக்கம் விழுந்துட்டாங்க… மத்தபடி ஒண்ணுமில்ல. வேலையை பாருங்க…’ என்று சூபர்வைசர்கள் ஷிப்டுக்கான உற்பத்தி குறைந்துவிடக் கூடாதே என்ற அக்கறையுடன் மற்ற தொழிலாளர்களை வேலை செய்யும்படி மிரட்டியிருக்கிறார்கள்.
ஆனால், சிவா என்கிற ஷிப்ட் மானேஜரும், மாரிமுத்து என்ற ஷிப்டுக்கான லீடரும் மயங்கி விழவே பதட்டம் அதிகரித்தது. தொழிலாளர்கள் மயங்கி விழுந்தபோது அவர்களை கண்டுக்கொள்ளாத நிர்வாகம், ஷிப்ட் மானேஜரும், ஷிப்ட் லீடரும் மயங்கி விழுந்ததும் பதறியது. உடனடியாக ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் ஜெயா மருத்துவமனைக்கு தகவல் பறக்க, ஆம்புலன்ஸ் விரைந்துவந்து அவர்களை அழைத்துச் சென்றது. இதற்கு மேலும் தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும் என்பதை உணர்ந்துக் கொண்ட நிர்வாகம், மயங்கி விழுந்த தொழிலாளர்களையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அனுமதித்தது.
இப்படியாக சிகிச்சைக்கு சென்ற தொழிலாளர்கள் 127 பேர்.
இதனையடுத்து முதல் ஷிப்டுக்கு வந்த தொழிலாளர்கள் பணி செய்ய மறுத்து, தொழிற்சாலையை விட்டு வெளியே வந்தனர். நிர்வாகமும் அதன் பின் முதல் ஷிப்டை தொடர விரும்பாததுடன், இரண்டாவது ஷிப்டையும் ரத்து செய்தது. தொழிலாளர்கள் உடனே ஜெயா மருத்துவமனைக்கு விரைந்திருக்கிறார்கள். அங்கே கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
அடுத்தடுத்து சிகிச்சைக்காக வந்த தொழிலாளர்களை மருத்துவமனைக்குள் நுழையவிடாமல், மருத்துவமனையின் செக்யூரிட்டி அடித்து விரட்டி அடிக்க ஆரம்பித்திருக்கிறார். இப்படி செய்யும்படி மருத்துவமனையும், தொழிற்சாலை நிர்வாகமும் செக்யூரிட்டிகளிடம் கட்டளையிட்டிருக்கிறது. இதை மீறியே பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை மருத்துவமனைக்குள் மற்ற தொழிலாளர்கள் கொண்டு சென்றிருக்கிறார்கள்.
ஆனால் ரத்த வாந்தி எடுத்து மயக்கமான எந்தத் தொழிலாளிக்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கவேயில்லை. முதலுதவியுடன் நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனையறிந்த தொழிலாளர்கள் ஆவேசத்துடன் மருத்துவர்களிடம் நியாயம் கேட்டபோது கிடைத்த பதில்: “நிர்வாகம் முதலுதவி தர மட்டும்தான் சொல்லியிருக்கு. என்ன விஷவாயு கசிந்ததுனு சொல்லலை. அது தெரிஞ்சாதான் மாற்று மருந்து தர முடியும்”.
விபத்துக்கு காரணம் ஆடி விரதமா?
மருத்துவர்கள் இதை சொல்லி முடித்த மறு விநாடி, சிகிச்சைக்கு வந்திருந்த சிவாவையும், மாரிமுத்துவையும் பார்க்க வந்திருந்த மற்றொரு நிர்வாகியை தொழிலாளார்கள் சூழ்ந்துக் கொண்டார்கள். “நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்திருக்கிறார்கள். அவர்களில் இஸ்லாமிய தொழிலாளர்களும் அடக்கம். இவர்களுமா ஆடி வெள்ளிக்கிழமை விரதம் இருந்திருப்பார்கள்? தொழிற்சாலையில் வேறு ஏதோ நடந்திருக்கிறது. விஷவாயு கசிந்திருக்கிறது. அது என்ன வாயு என்று சொல்லுங்கள். அப்போதுதான் மருத்துவர்களால் சிகிச்சை அளிக்க முடியும்” என்று கதறியிருக்கிறார்கள்.
எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் அந்த நிர்வாகி சொன்ன பதில்: “இந்த யூனிட்டுக்குள்ள ஒரு ரூம் இருக்கு இல்லையா? அதுல பழைய இரும்பு சாமான்களை போட்டு வச்சிருக்கோம். இது உங்களுக்கும் தெரியும். முதல் ஷிப்ட்டுக்காரங்க சாப்பிட போயிருந்தப்ப, அந்த ரூம்ல பூச்சி மருந்து அடிச்சோம். ஏசி இருந்ததால அந்த பூச்சி மருந்தோட வாடை வெளியேற முடியலை. அதான் இப்படி ஆகியிருக்கு. டாக்டர்கள் கிட்ட இதை சொல்லியாச்சு. அவங்களும் பூச்சி மருந்தை சுவாசிச்சவங்களுக்கு மாற்று மருந்து கொடுக்கறேனு சொல்லிட்டாங்க. ஒண்ணும் பிரச்னையில்லை. அரை மணி நேரத்துல எல்லாரையும் டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க. கவலைப்படாம போங்க. மூணாவது ஷிப்டுக்கு வர வேண்டியவங்க வந்துடுங்க…”
இந்த வாக்குறுதியை நம்ப தொழிலாளர்கள் தயாராக இல்லை. சைட் 3இல் நடைபெற வேண்டிய மூன்றாவது ஷிப்டுக்கு எதிர்பார்த்த அளவுக்கு தொழிலாளர்கள் வரவில்லை. எனவே சைட் 2லிருந்து பல தொழிலாளர்களை சைட் 3க்கு செல்லும்படி நிர்வாகம் நிர்ப்பந்தம் செய்திருக்கிறது. ஆனால், காலை முதலே சைட் 3இல் நடந்து வரும் கொடூரம், சைட் 2 தொழிலாளகளுக்கு தெரிந்திருந்ததால் யாரும் சைட் 3க்கு செல்லவில்லை. நிர்வாகமும் அசரவில்லை. சைட் 3இன் 3வது ஷிப்டுக்கு வந்த தொழிலாளர்களை வைத்து உற்பத்தியை தொடங்கியிருக்கிறது.
ஆனால் முதல் ஷிப்டில் நடந்த அதே கொடூரம் மூன்றாவது ஷிப்டிலும் தொடர்ந்தது. இம்முறை பாதிக்கப்பட்டு ரத்த வாந்தியுடன் மயக்கமான தொழிலாளர்களின் எண்ணிக்கை 145 ஆக இருந்தது. கொந்தளித்த தொழிலாளர்கள் சைட் 3லிருந்து வெளியேறினார்கள். பாதிக்கப்பட்ட 260க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் அளவுக்கு மருத்துவ வசதியும், மருந்துகளும் ஜெயா மருத்துவமனையில் இல்லை.
மருத்தவமனையில் மயக்கமடைந்த தொழிலாளிகள்!
எங்கே இந்த விபரீதம் கசிந்து மீடியாவில் பரபரப்பாகி விடுமோ என்ற பயந்த நிர்வாகம் அனைத்து தொழிலாளர்களையும் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. ஆரம்ப கட்ட சிகிச்சைக்குப் பின் பல தொழிலாளர்களை மருத்துவமனை அவசரம் அவசரமாக டிஸ்சார்ஜ் செய்தது. அவர்களை மற்ற தொழிலாளர்களுடன் பேச விடாமல் அவர்களது வீட்டுக்கு அனுப்பி வைப்பதில் நிர்வாகம் முழு மூச்சுடன் இறங்கியது. சீரியசாக இருக்கும் தொழிலாளர்கள் மட்டும் ஐசியூவில் சிகிச்சை பெற நிர்வாகம் ஒப்புக் கொண்டது.
ஆனால், எதனால் இப்படி இருநூற்றுக்கும் அதிகமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்ற விபரத்தை மருத்துவமனையும் சரி, நிர்வாகமும் சரி சக தொழிலாளர்களிடம் சொல்லவில்லை. எந்த விஷவாயு கசிந்தது… அதை சுவாசிப்பவர்களுக்கு என்ன மாற்று மருந்து தர வேண்டும் ஆகிய விபரங்கள் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, அங்கிருந்த நிர்வாகிகளுக்கும் தெரியவில்லை.
இந்த அடிப்படையை அலட்சியப்படுத்தி, ஆரம்பக்கட்ட சிகிச்சை முடிந்து வலுக் கட்டாயமாக டிஸ்சார்ஜ் செய்யப்படும் தொழிலாளர்களின் மருத்துவ ரிப்போர்ட்டை எந்தக் காரணம் கொண்டும் தொழிலாளர்கள் கொண்டு செல்லக் கூடாது என்பதிலேயே நிர்வாகம் குறியாக இருந்ததை – இருப்பதை கண்கூடாக பார்க்க முடிந்தது. இதற்காகவே நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட ஒரு நபர், கண் கொத்திப் பாம்பைப் போல வலுக்கட்டாயமாக டிஸ்சார்ஜ் செய்யப்படும் தொழிலாளர்களையே கண்காணித்துக் கொண்டிருந்தார்.
கொடூரம் நடந்த மறுநாள் – சனிக்கிழமை – இரவு வரை அரை மணி நேரத்துக்கு ஒருமுறை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வந்துக் கொண்டேயிருந்தது. பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை அவசர சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற படியே இருந்தார்கள். வாசலில் நின்றபடி உள்ளே அழைத்து செல்லப்படும் தொழிலாளர்களின் பெயரை ஒரு தாளில் எழுதியபடியே ஒரு நிர்வாகி இருந்தார். தாள்கள் நிரம்ப நிரம்ப அதை ஸ்டாப்ளர் பின் அடித்து கத்தையாக மாற்றினார். ஒரு கட்டத்துக்கு பிறகு, வெறும் எண்ணிக்கையின் அளவிலேயே அந்த நிர்வாகி பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை பார்க்க ஆரம்பித்தார்.
சிகிச்சைக்காக வந்த தொழிலாளர்களில் பெண்கள் அதிகம். ஐசியூவில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் ஒரு பெண் தொழிலாளிக்கு அடுத்த மாதம் திருமணமாம். இதுவரை அப்பெண்ணின் பெற்றோருக்கு நிர்வாகம் எந்தத் தகவலையும் சொல்லவில்லை என்று ஆவேசத்துடன் தொழிலாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
தொழிலாளர்களை சுரண்டும் ஃபாக்ஸ்கான் நிறுவனம்!
இந்த கொடூரத்தை நிகழ்த்தியிருக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைமையகம் தைவானில் இருக்கிறது. எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை தயாரிக்கும் இந்த பன்னாட்டு நிறுவனம், தொடர்ந்து உலகம் முழுக்க செய்திகளில் அடிபட்டபடியே இருக்கிறது. இந்நிறுவனத்துக்கு சொந்தமான தொழிற்சாலைகள் உலகம் முழுக்க இயங்கி வருகின்றன. அனைத்து தொழிற்சாலைகளிலும் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் அடிப்படை சலுகைகளை கூட வழங்காமல் நிர்வாகம் கசக்கிப் பிழிகிறது என சர்வதேச மீடியாக்கள் குற்றம்சாட்டியிருக்கின்றன. அம்பலப்படுத்தியிருக்கின்றன.
இந்த ஆண்டு மட்டுமே, இதுவரை உலகம் முழுக்க இயங்கி வரும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலைகளில் பணிபுரியும் 10 தொழிலாளர்கள், பணியிடத்திலேயே தற்கொலை செய்து கொண்டு இறந்திருக்கிறார்கள். காரணம், நிர்வாகத்தின் அடக்குமுறை. கடந்த மே மாதம் சீனாவில் இயங்கும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையின் மாடியிலிருந்து ஒரு தொழிலாளி குதித்து தற்கொலை செய்து கொண்டதை குறித்து ‘சதர்ன் வீக்லி’ சீன இதழ், விரிவாக செய்தி வெளியிட்டிருக்கிறது.
சென்னையில் இயங்கும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை, அசெம்பிளிங், மோல்டிங், பெயிண்டிங், ஸ்டாம்பிங், எம்பிஎம் (மொபைல் ஃபோன் மெட்டல்ஸ்), ஷீட் விண்டோ, வேர் அவுஸ், குவாலிட்டி என பல பிரிவுகளாக இயங்கி வருகிறது. நோக்கியா செல்ஃபோனுக்கான போர்ட் தவிர, மற்ற அனைத்து உதிரி பாகங்களையும் தயாரித்து தருவது இவர்களது பணி. தினமும் 3 ஷிப்டுகளில் உற்பத்தி நடக்கின்றன. சராசரியாக ஒரு ஷிப்டுக்கு நாளொன்றுக்கு நாற்பதாயிரம் செல்ஃபோன் உதிரி பாகங்கள் அனைத்து பிரிவிலுமாக சேர்ந்து தயாராகின்றன. அதாவது ஒரு நாளைய உற்பத்தி மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 20 ஆயிரம்.
காஸ்ட்லியான செல்பேசிக்காக வதைபடும் தொழிலாளிகள்!
ஒவ்வொரு பிரிவிலும் ஒரு ஷிப்டுக்கு குறைந்தது ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இரண்டாவது ஷிப்டில் மட்டும் தொழிலாளர்களின் எண்ணிக்கை – குறிப்பாக பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை – குறைவாக இருக்கும். ஆக சென்னை ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் மட்டுமே கிட்டத்தட்ட 6 ஆயிரம் தொழிலாளர்களுக்கு மேல் வேலை செய்கிறார்கள். அனைவருமே அதிகபட்சமாக முப்பது வயதுக்கு உட்பட்டவர்கள். ப்ளஸ் 2 படித்தவர்கள் முதல், பட்டம், டிப்ளமா படித்தவர்கள் வரை இங்கு தொழிலாளியாக இருக்கிறார்கள்.
அனைவரின் சம்பளமும் ஒரேயளவுதான். கடந்த 5 ஆண்டுகளாக சென்னையில் இயங்கி வரும் இத்தொழிற்சாலையில், ஆரம்பம் முதல் பணிபுரியும் தொழிலாளிக்கு அதிகபட்சமாக ரூபாய் 6 ஆயிரம் மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறது. இந்த 6 ஆயிரம் சம்பளத்தையும் வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைவே. பெரும்பாலானவர்களின் சம்பளம் 4,200 ரூபாயை தாண்டவில்லை. அத்துடன் இதுவரை ஊதிய உயர்வு அளிக்கப்படவேயில்லை. ஓராண்டு நிறைவடைந்த தொழிலாளிக்கு மட்டும் தீபாவளி சமயத்தில் ஒரு மாதச் சம்பளம் போனசாக வழங்கப்படுகிறது.
இப்படி ‘அநியாயமாக’ போனஸ் என்னும் பெயரில் பணம் வீணாவதை தடுக்க வேண்டும் என்று முடிவு செய்த நிர்வாகம் ஒரு காரியத்தை தொடர்ந்து செய்கிறது. அதாவது ஓராண்டு முடிந்ததுமே தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்குவது. இவர்களுக்கு பதிலாக புதிதாக தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பது. இதற்காக ஆண்டுதோறும் அனைத்து நாளிதழ்களிலும் விளம்பரம் தருவதை நிர்வாகம் வழக்கமாக கொண்டிருக்கிறது.
தி.மு.க. தலைமையிலான தொழிற்சங்கம் தவிர இங்கு வேறெந்த தொழிற்சங்கமும் செயல்படவில்லை. நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கை வெகு சொற்பம். மற்ற அனைவருமே டிரெயினிஸ் – பயிற்சியாளர்கள் – என்ற பிரிவிலேயே பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். இப்படி பயிற்சியாளர்களாக இருப்பவர்கள் தொழிற்சங்கம் கட்டவும் முடியாது, சலுகை கேட்டு போராடவும் முடியாது. இந்திய சட்டத்தில் இருக்கும் இந்த சாதகமான அம்சத்தையே அனைத்து பன்னாட்டு நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்கின்றன. இதற்கு ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையும் விதிவிலக்கல்ல. ஆனால், பயிற்சியாளர்களைக் கொண்டு உற்பத்தியை நடத்தக் கூடாது என்ற சட்டத்தை மட்டும் கவனமாக, பகிரங்கமாக மீறுகிறார்கள். இதற்கு அரசு உடந்தையாக இருக்கிறது.
காஞ்சிபுரம், திருத்தணி, அரக்கோணம், காவேரிப்பாக்கம், வாலாஜாபேட்டை, செங்கல்பட்டு ஆகிய சிறு நகரங்களிலிருந்து தொழிலாளர்கள் பணிக்கு வருகிறார்கள். இவர்களுக்காகவே தினமும் 45 பேருந்துகளை நிர்வாகம் இயக்குகிறது. இது தவிர சிறு சிறு கிராமங்களிலிருந்து வருபவர்களுக்காக வேன்களும் இயங்குகின்றன. இது சென்னையை சுற்றியுள்ள தொழிலாளர்களின் நிலவரம் என்றால், தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து வேலை செய்ய வந்திருக்கும் தொழிலாளர்களின் அவலம் இன்னும் மோசமானது. இவர்களுக்காகவே டார்மிட்ரியை(தங்கும் விடுதிகள்) நிர்வாகம் கட்டியிருக்கிறது. அறைக்கு 8 தொழிலாளர்கள் வீதம் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். உணவு, இருப்பிடம் சேர்த்து மாதந்தோறும் இவர்களது சம்பளத்திலிருந்து ரூபாய் 800 கழிக்கப்படுகிறது.
தொழிற்சாலையில் வழங்கப்படும் உணவு எந்தளவுக்கு மோசமாக இருக்க வேண்டுமோ அந்தளவுக்கு மோசமாக பரிமாறப்படுகிறது. கரப்பான் பூச்சி முதல் சிறு சிறு புழுக்கள் வரை அனைத்தையும் இந்த உணவில் பார்க்கலாம் என்கிறார்கள் தொழிலாளர்கள். உணவுக்கான காண்டிராக்டை ஏற்றிருக்கும் கொடாக்ஸோ, நோக்கியா ஊழியர்களுக்கு தரமான உணவையும், ஃபாக்ஸ்கான் தொழிலாளர்களுக்கு படு கேவலமான உணவையும் வழங்குவதாக குமுறலுடன் சொல்கிறார்கள். அசைவ சாப்பாடு கிடையவே கிடையாது என்பது ஒருபுறமிருக்க, சைவ சாப்பாடு அளவுடனேயே வழங்கப்படுகிறது. அதுவும் ஒரு தொழிலாளிக்கு இவ்வளவு கிராம் என்பதுதான் கணக்கு. அதைத்தாண்டி ஒரு பருக்கை அளவுக்குக் கூட உணவை வழங்குவதில்லை. மிக தாராள மனதுடன், ஷிப்ட் நேரத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் உண்ணும் இந்த ‘ கரப்பான் பூச்சி வாழும் கிராம்’ உணவுக்கு நிர்வாகம் எந்தவிதமான கட்டணத்தையும் அவர்களது சம்பளத்திலிருந்து வசூலிப்பதில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும்.
அதேபோல் இத்தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் பணி நேரத்தில் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு சிகிச்சையளிக்க மருந்துக்குக் கூட எந்த மருத்துவரையும் நிர்வாகம் நியமிக்கவில்லை. வார்டு பாய் போன்ற ஒருவரும், நர்ஸ் ஒருவரும் மட்டுமே பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். தலைவலி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு… என சகலத்துக்கும் ஒரே மாத்திரையைத்தான் இவர்கள் தருகிறார்களாம்.
இவையனைத்தையும் எதிர்த்தும், பணி நிரந்தர கோரிக்கையை வலியுறுத்தியும், ஊதிய உயர்வு கேட்டும் கடந்த ஆண்டு சென்னையிலுள்ள ஃபாக்ஸ்கான் தொழிலாளர்கள் போராடினார்கள். தி.மு.க.வை சேர்ந்த தொழிலாளர் துறை அமைச்சரான தா.மோ.அன்பரசன் – காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க செயலாளரும் கூட – தலைமையில் நிர்வாகம் நடத்திய கட்டப் பஞ்சாயத்தில் தொழிலாளர்களின் போராட்டம் கொடூரமாக ஒடுக்கப்பட்டதுடன், முன்னின்று போராட்டம் நடத்திய தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். அப்போது ஊதிய உயர்வு அளிப்பதாக நிர்வாகமும், தா.மோ.அன்பரசனும் வாக்குறுதி அளித்தார்கள்.
ஆனால், இந்த வாக்குறுதி மாதங்கள் பல கடந்தும் நிறைவேற்றப்படவில்லை. எனவே இந்த மாத தொடக்கத்தில் மீண்டும் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள். இதையும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடந்த கட்டப்பஞ்சாயத்து ஒடுக்கியது. இந்த போராட்ட விபரங்கள் எதுவும் வெளியுலகுக்கு தெரியாது. அப்படி தெரியாதபடி நிர்வாகமும், தி.மு.க. அமைச்சரும் பார்த்துக் கொண்டார்கள்.
இந்த அடக்குமுறைக்கு பணிவதைத் தவிர இத்தொழிலாளர்களுக்கு வேறு வழியில்லை என்பதான எண்ணத்தை நிர்வாகம் மட்டுமல்ல, ஒவ்வொரு தொழிலாளர்களின் குடும்பமும் ஏற்படுத்தியிருக்கிறது. தங்கைக்கு திருமணம், தம்பியின் கல்வி, அக்கா மகளுக்கு காது குத்தல், திருமணத்துக்கான வரதட்சணை, நகை சேகரிப்பு… என ஒவ்வொரு தொழிலாளியையும் அழுத்தும் பிரச்னைகளுக்கும் குறைவில்லை.
வெளியூரில் வசிக்கும் தொழிலாளியின் குடும்பங்கள், நோக்கியா செல்ஃபோன் மூலமாகவே இவர்களை தொடர்பு கொள்கிறார்கள். பேசுகிறார்கள். குடும்பத்தின் சுக, துக்கங்களை பகிர்ந்துக் கொள்கிறார்கள். ஆனால், தாங்கள் பயன்படுத்தும் நோக்கியா செல்ஃபோன் வழியே யாரிடம் பேசுகிறோமோ அவரது ரத்தம்தான் அதே ஃபோனில் கலந்திருக்கிறது என்ற உண்மை மட்டும் குடும்பத்தினருக்கு தெரிவதேயில்லை.
ஆமாம், இந்தத் தொழிலாளர்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார்கள்.
சென்னையில் ஒரு போபால்?
இந்த பின்னணியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொடூரத்துக்கு வருவோம்.
விஷவாயு கசிந்து தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டது சைட் 3இல். அதாவது அசெம்பிளிங் செக்ஷனில். இந்தப் பிரிவு இத்தொழிற்சாலை இயங்க ஆரம்பித்த இரண்டு மாதங்களிலேயே ‘எதன் காரணமாகவோ’ மூடப்பட்டது. மூன்று மாதங்களுக்கு முன்புவரை இந்தப் பிரிவு செயல்படாமல் ‘சும்மா’தான் இருந்தது. ‘பராமரிப்பு’ வேலைகள் நடப்பதாக நிர்வாகம் சொன்னது. அதன்பின், கடந்த மே மாதம் முதல் இந்தப் பிரிவு இயங்க ஆரம்பித்தது. இப்போது விஷவாயு கசிந்து 250க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதுவே தொழிலாளர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. எதனால் இந்தப் பிரிவை மூடி வைத்தார்கள்? இடைப்பட்ட காலத்தில் என்ன பராமரிப்பு செய்தார்கள்? பராமரிப்பு சரியாக இருப்பதாக யார் சொன்னதன் பேரில் இப்போது திறந்திருக்கிறார்கள்? இங்கு என்ன விதமான ரசாயன வாயு பயன்படுத்தப்படுகிறது? அது கசிந்தால் என்ன தற்காப்பு நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று கூடவா நிர்வாகத்துக்கு தெரியாது?
தொடரும் இந்தக் கேள்விகளுக்கு விடை தேடுவதற்கு முன்பே சனிக்கிழமை இரவு, சுகாதாரத்துறை இணை இயக்குனர் ராஜசேகர் உத்தரவின் பேரில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சீனிவாசன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் தொழிற்சாலைக்குள் ஆய்வு நடத்தி ‘ஒரு உண்மையை’ கண்டறிந்திருக்கிறார்கள். அதாவது தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக தொழிற்சாலை நிர்வாகத்தினர் சுகாதாரத் துறையிடம் தடையில்லாச் சான்றிதழை பெறவே இல்லையாம்! எனவே சுகாதாரத்துறை இணை இயக்குனரிடம் தடையில்லா சான்றிதழ் பெற்ற பிறகே தொழிற்சாலையை இயக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்!
அடப்பாவிகளா, 5 ஆண்டுகளாக ஒரு பன்னாட்டு நிறுவனம் சான்றிதழ் பெறாமலேயே இயங்கி வந்திருக்கிறது என்று கூடவா தெரியாமல் இருந்திருக்கிறார்கள்? ஆட்சியை நடத்தியிருக்கிறார்கள்? இதுதான் தமிழகம் ஒளிரும் பட்சணமா?
இந்த அயோக்கியத்தனம் ஒருபுறம் இருக்க, இதன் மறுபுறம் அழுகி சீழ்வடியும் இந்த அமைப்பின் வீக்கத்தில் இருக்கிறது. அதாவது விஷவாயு கசிவு என்பதையே திட்டமிட்டு மூடிமறைத்து ஏதோ சான்றிதழ் பெறவில்லை என்பதான பிம்பத்தை தோற்றுவிக்க ஃபாக்ஸ்கான் நிர்வாகமும், ஆளும் தி.மு.க. அரசும் முயல்கிறது.
உலகமயமாக்கலின் அதிகபட்ச கொடுமை இதுதான். உற்பத்தில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு எந்தவிதமான உற்பத்தி கருவியை பயன்படுத்துகிறோம், எந்தவிதமான ரசாயனங்கள் அதில் கலந்திருக்கின்றன, இந்த ரசாயனங்களை கையாள்வதால் என்னவிதமான நோய்களால் தாங்கள் பாதிக்கப்படுவோம், இதில் குறுகிய காலத்தில் என்ன நோய்வரும், நீண்ட காலத்தில் என்ன பாதிப்பு வரும், இதற்கு மாற்று மருந்தாக எதை உண்ண வேண்டும்…. ஆகிய அனைத்தும் மறைக்க; மறுக்கப்படுகின்றன.
சென்னை நோக்கியா – ஃபாக்ஸ்கான் – தொழிற்சாலையில் நடந்திருக்கும் இந்த விஷவாயு கசிவு ஒரு விபத்தல்ல. தொழிலாளர்களின் உயிரை பணயம் வைத்து பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் தொழில். இருபத்தாறு வருடங்களுக்கு முன்னர் போபாலில் என்ன நடந்ததோ அதுவே இங்கேயும் நடக்கிறது. போபாலில் நகரத்து மக்கள் அனைவரும் வதைபட்டார்கள். இங்கே அது தொழிலாளிகளுக்கு மட்டும் நடக்கிறது.
இன்றும் ராமச்சந்திரா அவசர சிகிச்சை பிரிவில் பல தொழிலாளர்கள் சிகிச்சை பெறுகிறார்கள். ஞாயிற்றுக்கிழமை 25.7.2010 அன்று இதே மருத்துவமனைக்கு மூப்பனாரின் தம்பியைப் பார்க்க வந்த கருணாநிதி இந்த தொழிலாளர்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. சென்னையை சுற்றியுள்ள புறநகரங்களில் இருக்கும் எல்லா பன்னாட்டு நிறுவனங்களும் எல்லா முறைகேடுகளோடும் இயங்குவதற்கான அனுமதியை தி.மு.கதான் வழங்கியிருக்கிறது. இதற்கான ஆதாயத்தை வட்டம் முதல் அமைச்சர் வரை பெறுகிறார்கள். அவர்கள் பெறும் ஆதாயம் என்பது கோடிகளில் இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.
இந்த விபத்தை மறைப்பதற்கு நிர்வாகத்தோடு தி.மு.க உள்ளூர் தலைவர்களும் மும்மூரமாக ஈடுபட்டிருந்ததை நேரிலேயே பார்த்தோம். ஆம்புலன்சுகளோடு தி.மு.க கொடி ஏந்திய வண்டிகளும் அன்று பூந்தமல்லி சாலையை நிறைத்திருந்தன. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தொழிலாளிகளுக்கு ஆதரவாக வந்திருந்த தொழிலாளர்களை அப்புறப்படுத்துவதில் தி.மு.க தலைவர்கள் முன்னணி வகித்தனர்.
நோக்கியாவின் காலன் ட்யூன்!
நோக்கியா ஃபோனை பயன்படுத்தாதவர் யாருமில்லை. நமது துக்கம், மகிழ்ச்சி, காதல், நட்பு, அரட்டை அனைத்தும் இந்த சிறிய கருவியை வைத்தே இயங்குகின்றன. புகழ்பெற்ற நோக்கியா காலர் ட்யூனை மனப்பாடம் செய்யாதவர் யாருமில்லை. ஆனால் இந்த இனிமையான எலக்ட்ரானிக் பொருளின் பின்னேதான் இத்தகைய சுரண்டலும், தொழிலாளிகளின் இரத்தமும் கலந்திருக்கிறது. சில ஆயிரங்களுக்காக தமது உயிரையும், ஆரோக்கியத்தையும் பணயம் வைத்தே தொழிலாளிகள் வேலை செய்கின்றனர்.
கேமரா உள்ள ஒரு செல்பேசியின் விலை கூட இங்கு தொழிலாளிக்கு சம்பளமாகத் தரப்படவில்லை. இப்படியான கடும் சுரண்டலின்றி பன்னாட்டு நிறுவனங்களின் பகாசுரமான இலாபம் என்பது சாத்தியமில்லை. இவர்களை இந்தியாவை விட்டு விரட்டாதவரை நமக்கும் விடுதலை இல்லை. அது வரை இந்த தொழிலாளிகள் மெல்ல மெல்ல இறந்து கொண்டுதான் நமக்கான செல்பேசிகளை தயாரிக்க வேண்டும்.
நினைவுகள் அழுத்த செல்பேசியை பார்த்தபடியே ராமச்சந்திரா மருத்துவமனையை விட்டு அகன்றோம். அப்போதும் ஒரு ஆம்புலன்ஸ் இறைந்தபடியே ஒரு பெண்தொழிலாளியோடு வந்திறங்கியது. அந்த ஆம்புலன்சின் சத்தம் ஒரு சுடுகாட்டின் ஒலிபோல இன்னமும் காதுகளை அடைத்துக் கொண்டிருக்கிறது. இனி செல்பேசியின் காலர் ட்யூனைக்கேட்கும் போது அது காலன் ட்யூனாகத்தான் உணருவோம்.
காலனை தொழிலாளிகள் எதிர்கொண்டு வதம் செய்யும் நாளுக்காக காத்திருக்கிறோம்.
குறிப்பு : இக்கட்டுரையை மறு பதிவிட அனுமதி அளித்த வினவு .காம் -க்கு நன்றி.
Friday, June 18, 2010
ராவணன் விமர்சனம் .
கம்ப ராமாயணத்தையும், வீரப்பன் கதையையும் சேர்த்து ராவணனை உருவாக்கியிருக்கிறார் மணிரத்தினம். வால்மீகி ராமாயணத்தில் ராமன் நல்லவராக இருப்பார்… ராவணன் கெட்டவனாக காட்டி இருப்பார்கள். ஆனால் உண்மையில் ராவணன் மாபெரும் வீரன். மணிரத்தினத்தின் படைப்பில் ராவணனாக காட்டப்படும் விக்ரம் தரப்பின் நியாயங்கள் காட்சிகளாக்கப் பட்டிருக்கின்றன. ராவணனை கிட்டதட்ட ஒரு ஹூரோவாகவே காட்டியிருக்கிறார் மணி! அந்த வகையில் இது ஒரு புதுமையே!மேகமலைப் பகுதியில் வசிக்கும் மக்களால் கொண்டாடப்படும் வீரா என்கிற வீரய்யனாக விக்ரம். அவரை என்கவுண்டரில் சுட்டுக் கொல்ல வரும் போலீஸ் எஸ்.பி. தேவ்ஆனந்தாக பிரித்விராஜ். எஸ்.பி.யின் மனைவி ராகினியாக ஐஸ்வர்யாராய். வீராவின் அண்ணனாக பிரபுவும், தங்கை வெண்ணிலாவாக பிரியாமணியும் கதையோடு இணைந்து வருகிறார்கள். ஃபாரஸ்ட் கார்டாக கார்த்திக் ரீ எண்ட்ரியின் கவனத்தை ஈர்க்கிறார்.
வீராவைக் கண்டுபிடிக்க அவனுடைய தங்கை வெண்ணிலாவை திருமணக் கோலத்தில் சிறப்பு அதிரடிப்படையினர் அழைத்துச் செல்கின்றனர். காதலித்து கைப்பிடித்த மேல்குடியைச் சேர்ந்த கணவன் போலீசைப் பார்த்து ஓடிவிட… ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த வெண்ணிலாவை காவலில் வைத்து ஒட்டுமொத்த போலீசும் பாலியல் பலாத்காரம் செய்துவிடுகின்றனர். கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில் தப்பிய வீராவுக்கு, தனக்கு நேர்ந்த கொடுமையைச் சொல்லிவிட்டு கிணற்றில் விழுந்து உயிரை விடுகிறாள் வெண்ணிலா.
தன் தங்கையைப் பாழாக்கிய அதிரடிப்படை போலீஸ் கும்பலையும் அதன் தலைவரான எஸ்.பி. தேவ்ஆனந்தையும் பழிவாங்க கிளம்புகிறான் வீரா. எஸ்.பி.யின் மனைவி ராகினியை கடத்திச் செல்கிறான். மேகமலையில் உள்ள பழங்குடியினர் பகுதியில் ராகினியை சிறைபிடிக்கிறான் வீரா. மனைவியை மீட்க சிறப்பு அதிரடிப்படையோடு புறப்படுகிறார் தேவ் ஆனந்த். 14 நாட்கள் நீடிக்கும் இந்த சேசிங் படலத்திற்கு இடையே வீராவுக்கு எஸ்.பி.யின் மனைவி ராகினி மீது காதல் வருகிறது. இறுதியில் தன்னைத் தேடிக் கண்டுபிடித்த அதிரடிப்படையை மொத்தமாக அழித்த வீரா… எஸ்.பி. தேவ்ஆனந்தை மட்டும் கொல்லாமல் விடுகிறான். என் கணவரின் உயிருக்கு உத்தரவாதம் கொடுத்தால் நான் இங்கேயே இருந்திடுவேன் என்று ஒரு கட்டத்தில் ராகினி சொல்ல… அதையே தனக்குக் கிடைத்த வெற்றியாக நினைத்து ராகினியை விட்டுவிடுகிறான் வீரா.
ரயிலில் ராகினியோடு ஊர் திரும்பும் எஸ்.பி. தேவ் ஆனந்த்… 14 நாளில் வீரா உன்னைத் தொடவே இல்லையா? என்று சந்தேகப்பட, ரயிலை நிறுத்தி இறங்கிவிடுகிறாள் ராகினி. மீண்டும் வீராவைத் தேடி, அவன் இடத்துக்கு வந்து அவனிடம்… என்னைப்பற்றி என் கணவரிடம் என்ன சொன்னாய் என்று கேட்கிறாள். கணவன் தன்னைச் சந்தேகப்பட்டதாக ராகினி சொன்னதும், எஸ்.பி.யின் திட்டத்தை புரிந்துகொள்கிறான் வீரா. ராகினியின் மூலம் தன்னைப் பிடிக்க திட்டமிட்டிருக்கிறார் எஸ்.பி. என்பதை உணர்ந்துகொள்கிறான் வீரா. அதே நேரத்தில் சிறப்பு அதிரடிப்படையுடன் வந்த எஸ்.பி. தேவ் ஆனந்த் ராகினியின் எதிர்ப்பையும் மீறி வீராவைச் சுட்டுக் கொல்வதுடன் முடிகிறது ராவணன்.
ராமனாக எஸ்.பி.கதாபாத்திரத்தையும், சீதையாக ராகினி கதாபாத்திரத்தையும், ராவணனாக வீரா கதாபாத்திரத்தையும், வெண்ணிலாவை சூர்ப்பநகையாகவும், ஃபாரஸ்ட் கார்டு கார்த்திக்கை ஆஞ்சநேயராகவும் நினைக்க வைக்கின்றன காட்சிகளும், வசனங்களும்.
சொந்தக் குரலில் பேசியிருக்கும் ஐஸ்வர்யாவின் முயற்சியைப் பாராட்டலாம். உலக அழகிக்கான தகுதி இப்போதும் இருக்கிறது என சொல்லாமல் சொல்கிறார் ஐஸ்வர்யா. பேசும் கண்களை அத்தனை அழகாய் கேமராவில் சிறை பிடித்திருக்கிறார் சந்தோஷ் சிவன். கணவன் மீதான அன்பை வெளிப்படுத்தும் போதும்… அவர் தப்பு செய்ய மாட்டார் என உறுதியாக சொல்லும் போதும் தேவ் மீதான காதலை அழகாக வெளிப்படுத்துகிறார். வீராவின் தங்கை வெண்ணிலாவுக்கு நேர்ந்த கொடுமையை அறியும்போது கண்களில் நீர்வழிய துக்கம் தொண்டை அடைக்க அழும்போது நம்மையும் சோகத்தில் ஆழ்த்துகிறார். படம் முழுக்க வந்து மொத்தமாக ஸ்கோர் செய்திருக்கிறார் ஐஸ்.
வீராவாக வந்து, வர்க்க ரீதியான இடைவெளிகளைப் பற்றி, கூர்மையான வசனங்களை பேசும் விக்ரமின் நடிப்பும் பிரமாதம். உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்கும் விக்ரமுக்கு ஏற்ற கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது. உயிருக்குப் பயப்படாமல் அருவியில் விழுந்துகிடக்கும் ஐஸ்வர்யா மீது உருவாகும் காதலை அவ்வளவு அழகாக வெளிப்படுத்துகிறார். சஞ்சலப்பட்ட மனதோடு கஷ்டப்படுவதை வெளிப்படுத்தும் காட்சிகளில் பின்னியிருக்கிறார்.
எஸ்.பி. மேல எனக்கு பொறாமையா இருக்கு. அவர் முந்திக்கிட்டாரே… என்று தன் விருப்பத்தை ராகினி ஐஸ்வர்யாவிடம் வெளிப்படுத்தும்போதும், இங்கேயே இருந்திடுறீங்களா? என்று கேட்கும் போதும் தன் இன்னொரு முகத்தை வெளிப்படுத்துகிறார். மேட்டுக்குடி மீதான தன் கோபத்தை வெளிப்படுத்தும் இடங்களில் உணர்ச்சிக் கொந்தளிப்பு. நரம்புகள் முறுக்கேறுகின்றன.
அறிமுகக் காட்சியிலேயே தன்னுடைய ஆஞ்சநேய சேஷ்டைகளைக் காட்டும் கார்த்திக்கும் ரசிக்க வைக்கிறார். கண்டேன் சீதையை என்கிற ரீதியில் எஸ்.பி.யிடம்… பார்த்துட்டேன்… பார்த்துட்டேன் சார் என்று உற்சாகப்படும் இடங்களில் அவரின் டச் தெரிகிறது. சமாதானமாக போயிடு வீரா…இல்லைன்னா அழிவு வரும் என்று சமாதானம் பேசும்போதும் கார்த்திக் அழுத்தமாக தெரிகிறார். காட்சிகள் குறைவென்றாலும் மனதில் நிற்கிறார் பிரியாமணி. பிரபுவுக்கும் நீண்ட நாட்களுக்கு பிறகு நடிப்பதற்கான ஒரு கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது. எந்தக் கடையில் அரிசி வாங்குகிறாரோ தெரியவில்லை! பெரிதும் பேசப்பட்ட ரஞ்சிதாவை படத்தில் தேடிப்பார்க்க வேண்டியிருக்கிறது.
மொத்த நட்சத்திரப் பட்டாளத்தையும் முந்தியிருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். உசிரே போகுதே, காட்டுச் சிறுக்கி என்று பாடல்கள் அத்தனையும் தாளம் போட வைக்கும். பின்னணி இசையில் காட்சிகளோடு ஒன்ற வைக்கிறார். கவிப்பேரரசுவின் கவிதை வரிகள் உள்ளத்தை அள்ளுகின்றன. அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியின் அழகை மொத்தமாக காட்டியிருக்கிறார்கள்.
மேக்கிங்கில் மிரட்டியிருக்கிறார் மணிரத்னம். ஓப்பனிங் சீனில் தொடங்கும் விறுவிறுப்பு கடைசி சீன் வரை தொடர்கிறது. பல இடங்களில் வசனங்கள் ஈர்க்கின்றன. படம் முழுக்க மணிரத்தினத்தின் ஈடுபாடும், உழைப்பும் வெளிப்படுகிறது. பழங்குடியினரிடம் அதிகார வர்க்கம் காட்டும் மூர்க்கத்தனத்தையும், வெறியையும் காட்சிகளாக்கியிருக்கும் விதத்தில் வீரப்பன் காடு நினைவுக்கு வந்துபோகிறது.
படத்தில் குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனாலும் நிறைகளில் எல்லாம் மறந்துவிடுகின்றது.
கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்.
Tuesday, April 13, 2010
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .
அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அவரைப்பற்றி ....
அண்ணல் அம்பேத்கர் சட்ட அறிஞர்; ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக பாடுபட்டவர்;அத்துடன் அவர் அறிவுலக மாமேதையகவும் திகழ்ந்தவர்; மிகச் சிறந்த தலைமைப் பண்புகள் கொண்டவர்; மத ஆராய்ச்சியாளர்; தொழிலாளர் நலம் பெற சிந்தித்தவர்; இப்படி பன்முக ஆளுமை கொண்டவர் அம்பேத்கர். அம்பேத்கரின் தலைமை பண்பு நலம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மேலவை உறுப்பினராக அவர் இருந்தபோது ஒரு முறை மேலவை கூட்டத்தில் பேசும் போது ஆங்கிலேயர் அரசில் தாழ்த்தப்பட்டோர் படும் அவலங்களை எல்லாம் கேட்போர் நெஞ்சம் வேதனைப்படும் வகையில் விரிவாக எடுத்துரைத்தார்.அதனைக் கேட்டு அரசு அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தது. ஆளுநர் வில்சன் "நான் கொடுத்த பதவி பிச்சையை ஏற்றுக்கொண்டு எங்கள் அரசையே குறை கூறுவதா?" என்று கேட்டார். அதற்கு அம்பேத்கர்,"ஆளுநர் அவர்களே உலகத்தில் ஒவ்வொரு நாடாகப் பிச்சை எடுப்பவர்கள் நீங்கள் தான். இந்த நாட்டை கூட உங்களுக்கு நாங்கள் தான் பிச்சை போட்டுள்ளோம். நீங்கள் கொடுத்த பதவியை வேண்டுமானால் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள். பதவியில் அமர்ந்துக் கொண்டு கடமையைச் செய்யாதவனை நான் மனிதனாகவே மதிப்பது கிடையாது” என்றார் அம்பேத்கர்.
அம்பேத்கர் காட்டும் சாதியின் கொடிய முகமும் இந்து மத எதிர்ப்பும் பலரும் பொதுவாக சாதி ஏற்றத்தாழ்வினை உயர்வு தாழ்வு என்ற இரு நிலைகளிலேயே அணுகுவர். ஆனால், அம்பேத்கர் அவர்கள் அதனை நுட்பமாக ஆராய்ந்து இந்து மதத்தில் சாதி இரு நிலைகளாக மட்டும் இல்லை இரு நிலைகளாக மட்டும் இருந்தால் அது சமத்துவம் இல்லாத சாதாரண நிலையாகும். ஆனால், இந்து மதச் சாதி என்பது சமத்துவம் இல்லாத நிலைக்கும் தாழ்வான படிநிலைத் தன்மை, படிப்படியான சமத்துவமின்மை என்ற நிலையை கொண்டதாகும். சமத்துவமின்மையால் நேரும் அபாயமானது, படிப்படியான சமத்துவமின்மையால் நேரும் அபாயத்தில் பாதி கூட இல்லை. சமத்துவமின்மைக்குள்ளேயே அதன் அழிவை ஏற்படுத்தும் வித்துக்களும் உள்ளன.
ஆனால், படிப்படியான சமத்துவமின்மை என்பது, அதனை எதிர்த்து பொதுவான அதிருப்தி ஏற்படாமல் தடுக்கிறது. இதனை விளக்க வேண்டுமாயின், நமது சாதி அமைப்பில் ஒருவர் ஒருபுறம் மற்றவர்களை விட உயர்ந்தவராகவும் மறுபுறம் வேறு பலரை விட தாழ்ந்தவராகவும் இருப்பவராகப் பிரிக்கப்பட்டுள்ளார். உயர் சாதியினர் எனப்படுவோரிடமும் படிப்படியான தாழ் நிலை உண்டு. அவ்வாறே தாழ்த்தப்பட்டோரிடமும் படிப்படியான உயர் நிலை உண்டு. இந்தப் படிநிலைத் தன்மை தான் தாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று வேறு பலரால் கூறப்படுவதற்கு கோபமடைந்து விடாமல் அவர்களைத் தடுத்து விடுகிறது,என்று அம்பேத்கர் விளக்குகிறார்.
1956 ஆம் ஆண்டு அக்டோபர் ஆம் நாளில் நாக்பூரில் பேசும்போது டாக்டர்.அம்பேத்கர் குறிப்பிட்டார். "சமத்துவமின்மை, சமூக அநீதி ஆகியவற்றின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ள இந்து மதம், வளர்ச்சிக்கு வழி வகுக்கவில்லை. தீண்டத்தகாத மக்கள், இந்து மதத்தில் அடிமைகளாக இருக்கும் வரை எந்தவித தன்னம்பிக்கையும் புத்துணர்வும் வரவே வராது. "இந்து மதம் தீண்டாமை கொடுமையால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் தீமை செய்து விடவில்லை. மற்றவர்க்கும் இந்த நாட்டுக்கும் கூட அது எதிரானது" என்பதனையும் அம்பேத்கர் அவ்வுரையில் குறிப்பிடுகிறார். "இந்து மதமும் அதன் சமூகப் படிநிலைத் தன்மையும் நம்மை அழித்துவிட்டது. ஆனால் இத்துடன் இது நின்றுவிடப்போவதில்லை. இந்துக்களையும், இறுதியாக இந்தியாவையும் அழித்து விடும். இந்து மதம் யாரையுமே காப்பாற்றாது." என்கிறார் அம்பேத்கர்.
அம்பேத்கர் இந்து மதம் குறித்து இவ்வளவு தீவிரமான எதிர்ப்புணர்வு கொண்டிருப்பதற்கு காரணங்கள் பல்வறு வகைப்பட்டவை. இந்து மதம் மட்டுமின்றிப் பிற மதங்களிலும் கூட அறிவியல் பூர்வமான சிந்தனை இல்லை என்று அம்பேத்கர் கூறுகிறார். அவர் ஏற்றுகொண்ட புத்தமதத்தில் உலகம், மக்கள் தோற்றம் குறித்து தவறான, உண்மைக்கு மாறான கருத்துக்களை அம்பேத்கர் தெளிவுப்படுத்துகிறார். “பிற மாதங்களில், கடவுள்தான் உலகத்தைப் படைத்தார்; முதலில் பூமியையும் பிறகு சொர்க்கத்தையும் பல கோள்களை ஏற்படுத்தினார் என்று உள்ளது.... நமக்குத் தேவையானவற்றையெல்லாம் கடவுள் உருவாக்கினார். எனவே நாம் செய்யவேண்டியது இதையெல்லாம் உருவாக்கிய கடவுளைப் புகழ்ந்து பாடுவது தான் என்று பொருள்படுகிறது. இன்று பகுத்தறிவுள்ள மனிதன் இதை ஏற்கமாட்டான்." என்கிறார் அம்பேத்கர்.
இன்றைக்கும் இந்து மதம் போன்ற மதங்கள் சொல்லும் உண்மைகள் இவைதான். எனவே அம்பேத்கரின் இந்து மத எதிர்ப்பு பகுத்தறிவின் அடிப்படையில், காரண காரியங்களுடன் கூடியது என்பதை நாம் புரிந்து கொள்வோம்!
Friday, January 29, 2010
எச்சரிக்கை ! செல்போன்
கண்ணிமைக்கும் நேரத்தில் கடல் கடந்து பறக்கும் குரல் ஒலிகளின் ஒப்புயவர்வற்ற செயல்பாடுகளுக்கு செல்பேசி முக்கிய பங்காகிவிட்டது. காடுகள் மேடுகள் எல்லாம் உழைத்து களைத்துப்போன ஏழைமக்கள் வாழும் குடிசைப்பகுதிகளின் சந்து பொந்துகளிலெல்லாம் சந்தடியில்லாமல் நுழைந்து சாகசம் படைத்து அவர்தம் வாழ்க்கைத் தொடர்பை வலுவாக்கி வருவதும் செல்பேசிகளே. செல்போன்களின் சேவைகள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே செல்கின்றன. 2005 - ஆண்டு கணக்கெடுப்பின்படி உலகில் இதனை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 126 கோடியாக இருந்தது என்றும் அது, நாளொன்றுக்கு 46000 பேர் வீதம் புதிதாக அதிகரித்து வருவதாகவும் கணக்கிட்டுள்ளனர்.
இங்ஙனம் பரவிவரும் செல்பேசிகளின் பயன்பாடுகள் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் கேடுகள் விளைவிக்கின்றன என்பதனை சமீபத்திய அறிவியல் ஆய்வுகள் தெளிவுபடுத்தி உள்ளன. இயற்கையின் இயற்கையான கதிர்வீச்சுகளிடையே அறிவியல் கண்டுபிடிப்புகளாகிய ஒயர்லெஸ், ரேடியோ, டிவி, ரேடார், செல்போன்கள் இவைகளின் இயக்கத்தால் வெளிவிடப்படும் ரேடியோ அலைகள், கதிரியக்க அதிர்வுகள், நுண்ணலை அதிர்வுகள், நுண்ணலை கதிர்வீச்சுகள் போன்றவை உயிர்களின் மீது பல்வேறு தீயவிளைவுகளை உருவாக்கி வருகின்றன. இதில் இன்றைய செல்பேசிகளே அபரிமிதமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதனை அறிய முடிகிறது.
இதுபோலவே செல்பேசி "டவர்களும்" மிகவும் ஆபத்தானவை தான். அவற்றிலிருந்து வரும் பாதுகாப்பற்ற நுண்ணலை கதிர்வீச்சுகளில் சுமார் 60%, தலைப்பகுதிகளில் கிரகிக்கப்பட்டு, கொஞ்சம் மூளையினுள் ஊடுருவி செல்வதாக கண்டறிந்துள்ளனர்.
சிறுகுழந்தைகள் செல்பேசிகளை பயன்படுத்துவது மிகவும் பாதிப்பான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதனையும் பிரிட்டீஷ் தேசிய கதிரியக்க பாதுகாப்புக்கழகம் ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளது. பெரியவர்களைவிட குழந்தைகளை 3.3 மடங்கு கதிர்வீச்சுகள் அதிகமாக பாதிக்கின்றன என்றும், குழந்தைகளின் மண்டைஓடுகள் மிகவும் மெல்லிய தன்மையுடையதாக இருப்பதால் அவை ஆபத்தான கதிர்வீச்சுகளினால் எளிதாக பாதிக்கப்படுவதால் 30 முதல் 40 வயதிற்குள் பெரும்பாலோருக்கு மூளைக்கட்டிகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்றும் உறுதிபடுத்தியுள்ளனர்.
செல்பேசிகளின் தீயவிளைவுகள் பற்றி பல்வேறு நாட்டைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்களின் தீவிர ஆய்வுகளில் பல உண்மைகள் வெளியாகி உள்ளன.
இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த "ராப்பாபோல்ட் மருத்துவ அறிஞர்கள் அமைப்பு" செல்பேசி கதிர்வீச்சுகளை விலங்குகளில் பரிசோதனை செய்ததில் அவற்றின் கண்கள் வெகுவாக பாதிக்கப்படுவதாக கண்டறிந்துள்ளனர். கண்களுக்கு அருகில் செல்பேசி கதிர்வீச்சு செல்லும்போது வெப்பநிலை சுமார் 3டிகிரி செல்சியஸ் அதிகரிப்பதால் கண்புரை நோய்கள் எளிதில் (Cataract) உருவாவதனை கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்க அறிவியலறிஞர்கள் மேற்கொண்ட பல்வேறு ஆய்வுகளின்படி செல்பேசி பயன்படுத்துபவர்கள் பெரும்பாலோர் ஆண்மைக்குறைவு, விந்தணுக்குறைவு, மகப்பேறின்மை போன்ற ஆபத்திற்குள்ளாவதை கண்டுபிடித்துள்ளனர். இந்தியாவில் மும்பையைச் சேர்ந்த மருத்துவ அறிஞர்களும் பல்வேறு ஆய்வுகள் மூலம் இதை தெளிவுபடுத்தியுள்ளனர். சாதாரணமான மனிதர்களைவிட நாள்தோறும் குறைந்தபட்சம் நான்கு மணிநேரம் செல்பேசிகளை பயன்படுத்துவோரின் விந்தணு எண்ணிக்கை 25% குறைவாகவே காணப்படுவதனை அறிவியல் ஆய்வுகள் தெளிவுபடுத்தி உள்ளன.
அமெரிக்க ஓஹியோவின், கிளீவ்லேண்ட் இனப்பெருக்க மருத்துவ ஆய்வு மையத்தின் இயக்குநர் பேராசிரியர் அசோக் அகர்வால் விலங்கினங்களில் மேற்கொண்ட ஆய்வுகளின்படி விந்தணுக்களை உருவாக்கும் செல்கள் மின்காந்த கதிர்வீச்சுகளினால் அல்லது அதனால் ஏற்படுத்தப்படும் வெப்பத்தினால் பாதிக்கப்படுவதனை கண்டறிந்து வெளியிட்டார். செல்பேசிகளை இடுப்பு பகுதியில் வைத்திருப்பவர்களின் அடிவயிறு, தொடையிணைப்பு பகுதிகள் எளிதில் சூடாவதும் இத்தகைய பாதிப்புகளுக்கு காரணமாகும்.
அன்னாள் நரம்பியல் ஆய்வுகளும், டாக்டர் பாவ்லோ ரோஷினியின் ஆய்வுகளும் செல்பேசி கதிர்வீச்சுகள் மூளைசெல்களை தூண்டுகின்றன என்பதனை வெளிப்படுத்தியுள்ளன. இத்தகைய தூண்டுதல்கள் காக்கைவலிப்பு போன்ற விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ளார்.
சுவீடன் தேசிய உழைப்பாளர் வாழ்வு மையம் வெளியிட்டுள்ள ஆய்வாளர்களின் அறிக்கையின் படி 2000 மணி நேரத்துக்கு மேல் செல்பேசியை பயன்படுத்திய 905 முதியவர்கள் மூளைப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதனை வெளிப்படுத்தியுள்ளனர். சாதாரணமாக செல்பேசி பயன்படுத்தாதவர்களை விட 3.7 மடங்கு அதிகமாக செல்பேசி பயன்படுத்துவோர் பாதிக்கப்படுகின்றனர் என்பதையும் ஒப்பிட்டுள்ளனர்.
இலண்டன் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் - மூன்று பிரிட்டிஷ் பல்கலை கழகங்களுடன் சேர்ந்து நான்கு ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் படி அதிக செல்பேசி பயன்பாடு உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதை கண்டறிந்துள்ளனர்.
எனவே செல்பேசி பயன்படுத்துவோர் குழந்தைகளிடம் செல்பேசிகளை கொடுப்பதை தவிர்க்கவும்.
செல்பேசி வைத்திருப்போர் கவனத்திற்கு :
பேசும்போது உடலுக்கு சற்று தொலைவில் வைத்து பேசுவதும், வாய்ப்புகள் உள்ளபோது சாதாரண தொலைபேசிகளை பயன்படுத்துவதும். வாகனங்களில் செல்லும்போது கண்டிப்பாக செல்பேசி தொடர்புகளை தவிர்ப்பதும், அதிகமாக சூடாகும் வரை பேசுவதை தவிர்ப்பதும். செல்பேசி பயன்படுத்துபவருக்கு மிகவும் பாதுகாப்பானதாகும்.







