இந்தியாவில் தடம் பதித்து இடம் பிடிக்க
வேண்டும் என்ற திட்டத்தை வரையறை செய்த ஆண்டு எந்த ஆண்டோ தெரியவில்லை; ஆனால்
2010-இல் திட்டத்தைத் தொடங்கி, 2012-இல் கடையைத் திறந்து விற்பனையைத்
தொடங்கி விட்டது வால்மார்ட் நிறுவனம். கொள்கை அறிவிக்கை, எதிர்ப்பு,
ஆதரிப்பு, விவாதம், வாக்கெடுப்புக் கோரிக்கை, வாக்கெடுப்புக்கு மறுப்பு என
இந்திய அரசியலிலும், மக்கள் மத்தியிலு மாகப் பல தளங்களைத் தொட்டு, கடை
விரித்துள்ள வால்மார்ட் இந்தியாவில் 14 மொத்த விற்பனை நிறுவனங்களை
நடத்திக்கொண்டிருக்கிறது. மேலும் விரிவாக்கம் செய்ய முனைகிறது.
இந்திய அடித்தட்டு மக்களின், நடுத்தர
மக்களின் பொருளாதாரத்தை மிக நயமாகச் சுரண்டும் நோக்குடன் சில்லறை
வர்த்தகத்தில் நுழைய முனைந் துள்ளது, வால்மார்ட் நிறுவனம். தமிழகத்தில்,
சென்னையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இயக்கங்கள் வால்மார்ட்
நிறு வனத்தை எதிர்த்துப் போராட்டத்தைத் தொடங்கி யுள்ளன.
காங்கிரஸ் கட்சி - ‘சில்லறை
வணிகத்திற்குள் அந்நிய முதலீட்டுக்கு இடமில்லை’ என்று கொள்கை பேசிய
காங்கிரஸ் கட்சி - சில்லறை வணிகத்திற்குள் வால்மார்ட் போன்ற நிறுவனங்களை
வரவேற்பதற்கு என்ன காரணம்?
காங்கிரஸ் கட்சிக்கேயுரித்தான முதலாளித்துவ மனப்பான்மைதான்!
இந்தியாவில் தடம் பதித்து இடம் பிடிக்க
வேண்டும் என்ற திட்டத்தை வரையறை செய்த ஆண்டு எந்த ஆண்டோ தெரியவில்லை; ஆனால்
2010-இல் திட்டத்தைத் தொடங்கி, 2012-இல் கடையைத் திறந்து விற்பனையைத்
தொடங்கி விட்டது வால்மார்ட் நிறுவனம்.கொள்கை அறிவிக்கை, எதிர்ப்பு,
ஆதரிப்பு, விவாதம், வாக்கெடுப்புக் கோரிக்கை, வாக்கெடுப்புக்கு மறுப்பு என
இந்திய அரசியலிலும், மக்கள் மத்தியிலு மாகப் பல தளங்களைத் தொட்டு, கடை
விரித்துள்ள வால்மார்ட் இந்தியாவில் 14 மொத்த விற்பனை நிறுவனங்களை
நடத்திக்கொண்டிருக்கிறது.மேலும் விரிவாக்கம் செய்ய முனைகிறது.இந்திய
அடித்தட்டு மக்களின், நடுத்தர மக்களின் பொருளாதாரத்தை மிக நயமாகச்
சுரண்டும் நோக்குடன் சில்லறை வர்த்தகத்தில் நுழைய முனைந் துள்ளது,
வால்மார்ட் நிறுவனம்.தமிழகத்தில், சென்னையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
உள்ளிட்ட இயக்கங்கள் வால்மார்ட் நிறு வனத்தை எதிர்த்துப் போராட்டத்தைத்
தொடங்கி யுள்ளன.காங்கிரஸ் கட்சி - ‘சில்லறை வணிகத்திற்குள் அந்நிய
முதலீட்டுக்கு இடமில்லை’ என்று கொள்கை பேசிய காங்கிரஸ் கட்சி - சில்லறை
வணிகத்திற்குள் வால்மார்ட் போன்ற நிறுவனங்களை வரவேற்பதற்கு என்ன
காரணம்?காங்கிரஸ் கட்சிக்கேயுரித்தான முதலாளித்துவ மனப்பான்மைதான்!
ஒரு நாட்டின் அரசு வேறொரு நாட்டுடன்
அரசியல், பொருளாதார உறவு கொள்ளும்போது, இரண்டு அரசுகளுமே தத்தமது மண்ணின்
உழைக்கும் வர்க்கங்களுக்கு எதிராக, நாட்டு அளவில் உறவு கொள்கின்றன என்றால்,
அந்த நாடுகள் தீவிர முதலாளித்துவ மனப்பான்மை கொண்டவை என்பதில் மாற்றுக்
கருத்து இருக்க முடியாது. அத்தகைய - அதே - முதலாளித்துவ மனப்பான்மை தான்
காங்கிரஸ் மண்டையில் நிரம்பி வழிகிறது. அதனால்தான் அதன் பொருளாதார அறிவு,
இந்திய மக்களைச் சிறிதும் திரும்பிப் பார்க்க மறுக்கிறது.
வால்மார்ட் (Wallmart) மட்டுமின்றி,
டெஸ்கோ (Tesco), கேர் ஃபோர் (Care Four) போன்ற நிறுவனங் களும் இந்தியாவில்
கடை திறந்து, கல்லா கட்டி, பின் இந்தியாவை வழித்தெடுக்கத் துடிக்கின்றன.
இந்த நிறுவனங்கள் இந்தியாவைத் தேர்ந் தெடுக்கக் காரணம்?
இந்தியாவின் மொத்த தேசிய உற்பத்தியில்
(GDP) சில்லறை வர்த்தகம் 11 விழுக்காடாக உள்ளது. இதன் மதிப்பு 2015-இல்
833 பில்லியன் அமெரிக்க டாலராகும். 2018-இல் 1.3 ட்ரில்லியன் (ஒரு
ட்ரில்லியன் = 1 லட்சம் கோடி) அமெரிக்க டாலராக இருக்கும் என்று ஆய்வுகள்
தெரிவிக்கின்றன. போதாக்குறைக்கு, பிற எந்த நாட்டையும் விட இந்தியர்களை
மிகச் சுலபமாக ஏமாற்ற, இருக்கவே இருக்கிறது ஆன்மிக வாய்க்கால். அதிலே
முயன்றால், இந்தியச் செல்வத்தைத் தாராளமாக வேட்டையாட லாமே இந்த வணிக
நிறுவனங்கள்! இதற்கு அனுகூலமாக பல உபரிக் காரியங் களையும் செய்யும் இந்த
வணிக நிறுவனங்கள்.
‘சில்லறை வர்த்தகம் மூலம் அரசுக்குக்
கிடைக்கும் வரி வருவாய் அதிகரிக்கும்’ என பிரதமர் மன் மோகன் நம்புகிற
வேளையில், அந்நிய நிறுவனங் களை நுழைப்பதற்கான காரணம் என்று ‘இந்திய
விவசாயிகளை இடைத்தரகர்கள் கொள்ளையிட்டு வருவதாகவும் வால்மார்ட்,
விவசாயிகளிடம் நேரடி யாகக் கொள்முதல் செய்து விற்கப்போவதால், நியாயமான விலை
கிடைக்கும் என்றும்’ ஆளுங் கட்சிக் கும்பல் கதை பரப்பி வருகிறது.இது
முற்றிலும் தவறு என்று மறுத்துரைக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பெப்சி,
கோக் போன்ற மென்பானங்கள் இந்திய உள்நாட்டுப் பானமான காளிமார்க் போன்றவற்றை
எப்படி தந்திரமாக அழித்தன என்று சுட்டிக்காட்டுகிறது.
“பன்னாட்டுச் சில்லறை வர்த்தக
நிறுவனங்களின் வருகையால் இந்திய விவசாயிகள் நிலங்களைப் பெரிய
நிறுவனங்களிடம் இழக்கும் நிலை ஏற்படும். இது விவசாயத் துறையில் மோசமான
மாற்றங்களை உருவாக்கும்” என எச்சரித்துள்ளார் வேளாண் விஞ்ஞானி
எம்.எஸ்.சுவாமிநாதன்.“வால்மார்ட் போன்ற நிறுவனங்களின் வருகை யால் சீனாவின்
விவசாய விளைபொருட்கள் இந்தி யாவில் குவியும். இதனால் இந்திய விவசாயிகள்
பாதிக்கப்படுவர்” என்று பொருளாதார நிபுணர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ்
தெரிவித்துள்ளார்.இந்தியாவில் மாநிலங்களுக்கிடையேயான கீரை, காய், பூ
உள்ளிட்ட சில்லறை வர்த்தகங்களிலும் அந்நிய நிறுவனங்கள் நுழைந்து,
வணிகர்களைத் தங்களுக்குத் தரகர்களாக மாற்றி, தொழிலை அப்படியே தங்கள்
கைக்குள் அமுக்கிவிடும்.
மேலும், சில்லறை வணிகத்தில் அந்நிய முத
லீட்டைக் கொண்டு வருவதால் ஏராளமானோர் வேலைவாய்ப்பை இழப்பர். இப்படியெல்லாம்
நடக்காது என்று காங்கிரஸ் கட்சியால் எந்த வாக்குறுதியும் கொடுக்க
முடியாது. முட்டாள் தனமாகவாவது நம்பினால்தானே வாக் குறுதி கொடுக்க
முடியும்! மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படாது என்பது காங்கிரசின்
மனசாட்சிக்குத் தான் நன்றாகத் தெரியுமே!
வேலைவாய்ப்பு பறிபோதல், சிறுகடைகள்
மூடப்படுதல் போன்ற பொருளாதாரச் சுரண்டல் களைத் தவிர ‘‘சில்லறை
வணிகத்திற்காகப் பிற நாடுகளில் தடம் பதிக்கும் நிறுவனங்கள் ஆயுதத் தளவாட
உற்பத்தி செய்து, பயங்கரவாதிகளுக்கு விற்பனை செய்யும் மரண வியாபாரிகள்’’
என்று இடதுசாரிகள் எச்சரிப்பது, இந்திய மக்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய
ஒன்று.
நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும்
பொறுப்பை ஏற்கனவே உள்நாட்டுப் பெரு முதலாளிகளிடம் ஒப்படைத்து விட்டு,
பொம்மை அரசாங்கம் நடத்திக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியும், அதன்
கூட்டணிக் கட்சிகளும், செப்பு கின்ற பசப்பு வார்த்தைகளுக்கு இந்தியர்கள்
மயங்குவது கூடாது.‘சில்லறை வர்த்தகத்தில் அந்நியர் முதலீடு வேண்டாம்’ என்ற
இடதுசாரிகளின் முழக்கத்தின் உயிரோட்டத்தைப் புரிந்துகொண்டு, கருத்துநிலை
யளவில் விழிப்புணர்வு பெற வேண்டும்.கொள்கையளவில் நமது தமிழக மக்கள்
எடுக்கின்ற முடிவே, நமது மண்ணின் விடுதலை மீண்டும் பறிபோகாமல்
காப்பாற்றும்.
Thanks to www.keetru.com
Thanks to www.keetru.com
No comments:
Post a Comment