Thursday, April 17, 2014

பயனுள்ள இணையதளங்கள்...!


சான்றிதழ்கள் :-

1) பட்டா / சிட்டா அடங்கல்
http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?lan=ta

2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட
http://taluk.tn.nic.in/eservicesnew/land/areg_ta.html?lan=ta

3) வில்லங்க சான்றிதழ்
http://www.tnreginet.net/igr/webAppln/EC.asp?tams=0

4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/birth.pdf

http://www.tn.gov.in/appforms/death.pdf

5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-community.pdf

6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-income.pdf

C. E-டிக்கெட் முன் பதிவு

1) ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு
http://tnstc.ticketcounters.in/TNSTCOnline/

http://www.irctc.co.in/

http://www.yatra.com/

http://www.redbus.in/

2) விமான பயண சீட்டு
http://www.cleartrip.com/

http://www.makemytrip.com/

http://www.ezeego1.co.in/

D. E-Payments (Online)

1) BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம் செலுத்தும் வசதி
http://portal.bsnl.in/portal/aspxfiles/login.aspx

2) Mobile ரீ- சார்ஜ் மற்றும் டாப் அப் செய்யும் வசதி
https://www.oximall.com/

http://www.rechargeitnow.com/

http://www.itzcash.com/

3) E.B. Bill கட்டணம் செலுத்தும் வசதி
http://www.itzcash.com/

https://www.oximall.com/

http://www.rechargeitnow.com/

4) NEFT / RTGS மூலம் பிறர் ACCOUNT ‘க்கு பணம் மாற்றும் வசதி

5) E-Payment செய்து வேண்டிய பொருள் வாங்கும் வசதி
http://www.ebay.co.in/

http://shopping.indiatimes.com/

http://shopping.rediff.com/shopping/index.html

6) Share Market – பங்குச் சந்தையில் On-Line வணிகம் செய்யும் வசதி
http://www.icicidirect.com/

http://www.hdfcsec.com/

http://www.religareonline.com/

http://www.kotaksecurities.com/

http://www.sharekhan.com/

E. கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த சேவைகள் (Online)

1) மாணவர்கள் மேற்படிப்புக்கான வங்கிக் கடன் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள்
https://www.sbi.co.in/user.htm?action=viewsection&lang=0&id=0%2C1%2C20%2C118

http://www.indianbank.in/education.php

http://www.iob.in/vidya_jyothi.aspx

http://www.bankofindia.com/eduloans1.aspx

http://www.bankofbaroda.com/pfs/eduloans.asp

http://www.axisbank.com/personal/loans/studypower/Education-Loan.asp

http://www.hdfcbank.com/personal/loans/educational_loan/el_indian/el_indian.htm

2) பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு முடிவு / மதிப்பெண் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி
http://www.tn.gov.in/dge/

http://www.tnresults.nic.in/

http://www.dge1.tn.nic.in/

http://www.dge2.tn.nic.in/

http://www.Pallikalvi.in/

http://www.results.southindia.com/

http://www.chennaionline.com/results

3) சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய
http://www.tn.gov.in/dge

4) இனையதளங்கள் மூலமாக 10th, 12th Std பாடங்களை கற்றுக்கொள்ளும் வசதி
http://www.classteacher.com/

http://www.lampsglow.com/

http://www.classontheweb.com/

http://www.edurite.com/

http://www.cbse.com/

5) 10th & 12th வகுப்பிற்கான அரசு தேர்வு மாதிரி கேள்வி தாள்கள் மற்றும் பாடங்களை படிக்க அல்லது பதிவிறக்கம் செய்ய
http://www.kalvisolai.com/

6) UPSC/ TNPSC/ BSRB / RRB / TRB க்கான பயிற்சி, தேர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி
http://www.tnpsc.gov.in/

http://www.tnpsctamil.in/

http://www.upsc.gov.in/

http://upscportal.com/civilservices/

http://www.iba.org.in/

http://www.rrcb.gov.in/

http://trb.tn.nic.in/

http://www.tettnpsc.com/

7) உள் நாடு மற்றும் உலக நாடுகளில் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி, பதிவு செய்து விண்ணப்பிக்கும் வசதி
http://www.employmentnews.gov.in/

http://www.omcmanpower.com/

http://www.naukri.com/

http://www.monster.com/
.இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்புகள் அறிய
http://www.ssbrectt.gov.in/

http://bsf.nic.in/en/career.html

http://indianarmy.nic.in/

9) இந்திய கப்பல் படையில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் அறிய
http://nausena-bharti.nic.in/

10) Face to Face chat / Interview நேர்காணல் செய்யும் வசதி
http://www.skype.com/

http://www.gmail.com/

http://www.yahoochat.com/

http://www.meebo.com/

F. கணினி பயிற்சிகள் (Online)

1) அடிப்படை கணினி பயிற்சி
http://www.homeandlearn.co.uk/

http://www.intelligentedu.com/

http://www.ehow.com/about_6133736_online-basic-computer-training.html

2) சிறார்களுக்கு கணினி பயிற்சி
http://www.ehow.com/video_5846782_basic-computer-training-children.html

3) இ – விளையாட்டுக்கள்
http://www.zapak.com/

http://www.miniclip.com/

http://www.pogo.com/

http://www.freeonlinegames.com/

http://www.roundgames.com/

4) ப்ரௌசிங், இ-மெயில், சாட்டிங், வெப் கான்ஃபெரென்ஸ், தகவல் தேடுதள்
http://www.google.com/

http://www.wikipedia.com/

http://www.hotmail.com/

http://www.yahoo.com/

http://www.ebuddy.com/

http://www.skype.com/

G. பொது சேவைகள் (Online)

1) தகவல் அறியும் உரிமை சட்டம்
http://rti.gov.in/

http://www.rtiindia.org/forum/content/

http://rti.india.gov.in/

http://www.rti.org/

2) சுற்றுலா மற்றும் முக்கிய தலங்கள் பற்றிய தகவல் பெறும் வசதி
http://www.incredibleindia.org/

http://www.india-tourism.com/

http://www.theashokgroup.com/

http://www.smartindiaonline.com/

3) திருமணம் புரிய விரும்புவோர் இணையதளங்கள் மூலமாக பதிவு செய்து தங்கள் வாழ்க்கை துணையை தேடி தேர்வு செய்யும் வசதி
http://www.tamilmatrimony.com/

http://kalyanamalai.net/

http://www.bharatmatrimony.com/

http://www.shaadi.com/

4) குழந்தைகளுக்கான தமிழ் பெயர்களை அர்த்ததோடு பார்க்கவும் மற்றும் தமிழ் அகராதி, தமிழ் புத்தகங்களை பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய
http://www.tamilcube.com/

5) ஜாதகம் மற்றும் ராசிபலனை அறிந்துக் கொள்ள
http://www.koodal.com/

http://freehoroscopesonline.in/horoscope.php

6) இனையதளம் மூலமாக இந்தியாவில் எந்த ஒரு மொபைலுக்கும் இலவசமாக SMS அனுப்பும் வசதி
http://www.way2sms.com/

7) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான VIDEO படங்களை தேடி கண்டு மகிழலாம்
http://www.youtube.com/
இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொழில் / வர்த்தகம் மற்றும் ஸ்தாபனங்கின் முகவரி / தொலைபேசி தகவல்கலை இலவசமாக தேடி தெரிந்து கொள்ளலாம்
http://www.justdial.com/

9) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மொழியில் தினசரி / வார நாளிதல்களை இலவசமாக வாசித்து செய்திகளை அறியலாம்
http://www.dinamalar.com/

http://www.dinamani.com/

http://www.dailythanthi.com/

http://www.tamilnewspaper.net/

http://www.vikatan.com/

http://www.puthiyathalaimurai.com/

http://www.nakkheeran.in/

10) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை நேரலையாக இலவசமாக கண்டு மகிழலாம்
http://puthiyathalaimurai.tv/new/

http://www.bbc.co.uk/

11) SPEED POST மூலமாக நீங்கள் அனுப்பும் தபால்களை இந்திய தபால் துறையின் இனையதளம் மூலமாக தபால் சேர்ந்த விவரம் அறியலாம்
http://services.ptcmysore.gov.in/Speednettracking/Track.aspx

12) இந்திய தபால் துறையின் INTERNATIONAL SPEED POST / ELECRTONIC MONEY ORDER / REGISTERED POST / EXPRESS PARCEL / E-VPP சேவைகளை தபால் துறையின் இனையதளம் மூலமாக விவரம் அறியலாம்.
http://www.indiapost.gov.in/tracking.aspx

H. மென்பொருள் (Software) பதிவிறக்கம் செய்ய

1) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மென்பொறுளை இலவசமாக பதிவிறக்கம் செய்து உபயோகிக்கலாம்
http://www.filehippo.com/

I. வணிகம் (Economy)

1) தமிழ் நாட்டின் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை விவரம் அறியலாம்
http://www.goldenchennai.com/

http://www.rates.goldenchennai.com/

http://www.bullionrates.in/p/live-bullion-rates.html

2) வெளிநாட்டின் பணமதிப்புக்கு இந்திய ரூபாயின் அன்றைய மாற்றத்தக்க மதிப்பை அறியலாம்
http://www.gocurrency.com/

http://www.xe.com/

H. அரசு சார்ந்த விண்ணப்ப படிவங்கள் (Online)

1) பாஸ்போர்ட் விண்ணப்பம்
http://www.passport.gov.in/

2) பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்ய
http://www.tn.gov.in/services/employment.html

J. அரசு நலத் திட்ட படிவங்கள் (Online)

1) குடும்ப அட்டை
http://www.tn.gov.in/appforms/ration.pdf

2) மகளிர் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் பெறுவதற்கான விண்ணப்பம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/socialwelfare/wses_bankloan_form.pdf

3) பெண்கள் திருமணத்திற்கு கோரப்படும் உதவித் தொகை விண்ணப்பம் மற்றும் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/socialwelfare/socialwelfareschemes.pdf

4) நலிந்தோர் குடும்ப நல நிதியுதவி பெருவதற்கான மனு
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-drs.pdf

5) ஆதரவற்ற முதியோர் / விதவைகள் / கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் / உடல் ஊனமுற்றோர் உதவி தொகைக்கான மனு
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-oap.pdf

http://www.tn.gov.in/schemes/swnmp/social_security_net.pdf

6) புல எல்லை அளந்து அத்து காட்டக் கோருவதற்கான விண்ணப்பம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-boundary.pdf

7) திருமணப்பதிவிற்கான குறிப்பாவணம் மற்றும் விண்ணப்ப படிவம்
http://www.tnreginet.net/english/Applforms/appln3.doc

http://www.tnreginet.net/english/Applforms/compulsory_marriage/Comp_Marriage_Application_Tamil.pdf
பட்டா பதிவு மாற்றம் கோருவதற்கான விண்ணப்ப படிவம் – சாதாரண பெயர் மாற்றம் / உட்பிரிவு மாற்றம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-patta-transfer.pdf

K. விவசாய சந்தை சேவைகள் (Online)

1) தேசிய அளவிலான விற்பனை நிலவரம்
http://agmarknet.nic.in/

2) பதிவு செய்து தினசரி சந்தை விலைகளை பெறும் வசதி
http://indg.in/agriculture/e2030aci-nya2039-aea3153oiTM-moo2039/

3) தோட்டப்பயிரகளின் சந்தை நிலவரம்
http://nhb.gov.in/OnlineClient/categorywiseallvarietyreport.aspx

4) முக்கிய வியாபாரிகள் பற்றிய விவரம்
http://indg.in/agriculture/major-traders-database/

5) தமிழ்நாட்டில் உள்ள விவசாய அமைப்புகள் / சங்கங்கள்
http://indg.in/agriculture/database-of-growers-federations-farmers-associations-in-tamil-nadu/

6) கொள்முதல் விலை நிலவரம்
http://www.tnsamb.gov.in/price/login.php

7) ஒழுங்குமுறை விற்பனை கூடம்
http://www.tnsamb.gov.in/mktcom.php
தினசரி சந்தை விற்பனை விலை நிலவரம்
http://59.90.246.98/pricelist/

9) வானிலை செய்திகள்
http://services.indg.in/weather-forecast/

L. தொழில் நுட்பங்கள்

1) பயிர் சாகுபடி, பாதுகாப்பு மற்றும் பயிர் பெருக்கம்
http://www.agritech.tnau.ac.in/ta/Agriculture/agri_index_ta.html

http://www.agritech.tnau.ac.in/ta/crop_protection/crop_prot_ta.html

2) விதை கொள்முதல் செய்ய இருப்பு நிலை விவரம்
http://www.tnagrisnet.tn.gov.in/website/availabilityReports.php?type=Seed

3) உயிரிய தொழில்நுட்பம்
http://www.agritech.tnau.ac.in/ta/bio_tech/biotech_ta.html

4) அறுவடை பின்சார் தொழில் நுட்பம்
http://www.agritech.tnau.ac.in/ta/post_harvest/post_harvest_ta.html

5) உயிரி எரிபொருள்
http://www.agritech.tnau.ac.in/ta/bio_fuels/bio_fuels_ta.html

M. வேளாண் செய்திகள்

1) பாரம்பரிய வேளாண்மை
http://www.agritech.tnau.ac.in/ta/itk/indi_farm_ta.html

http://www.agritech.tnau.ac.in/ta/crop_protection/crop_prot_ta.html

2) வளம்குன்றா வேளாண்மை
http://www.agritech.tnau.ac.in/ta/sustainable_agri/susagri_ta.html

3) பண்ணை சார் தொழில்கள்
http://www.agritech.tnau.ac.in/ta/farm_enterprises/farm_enter_ta.html

4) ஊட்டச்சத்து
http://www.agritech.tnau.ac.in/ta/nutrition/nutrition_ta.html

5) உழவர்களின் கண்டுபிடிப்பு
http://www.agritech.tnau.ac.in/ta/farm_innovations/farm_innovations.html

N. திட்டம் மற்றும் சேவைகள்

1) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் திட்டங்கள் & சேவைகள்
http://www.tnrd.gov.in/schemes_states.html

2) வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான திட்டங்கள் & சேவைகள்
http://www.agritech.tnau.ac.in/ta/govt_schemes_services/govt_serv_schemes_ta.html

3) வட்டார வளர்ச்சி
http://www.agritech.tnau.ac.in/ta/dev_blocks/indextnmap_ta.html

4) வங்கி சேவை & கடனுதவி
http://www.agritech.tnau.ac.in/ta/banking/credit_bank_ta.htm

5) பயிர் காப்பீடு
http://www.agritech.tnau.ac.in/ta/crop_insurance/crop_ins_ta.html

6) Krishi Vigyan Kendra (KVK) | Agricultural Technology Management Agency (ATMA)
http://www.agritech.tnau.ac.in/ta/kvk/kvk_ta.html

http://www.agritech.tnau.ac.in/ta/atma/atma_ta.html

7) NGOs & SHGs
http://www.agritech.tnau.ac.in/ta/ngo_shg/ngo_shg_ta.html
அக்ரி கிளினிக்
http://www.agriclinics.net/

9) கிசான் அழைப்பு மையம்
http://www.agritech.tnau.ac.in/ta/kisan/kisan_ta.html

10) பல்லாண்டு மேம்பாட்டு குறிக்கோள்
http://www.agritech.tnau.ac.in/ta/mdg/mdg_ta.html

11) கேள்வி பதில்
http://www.agritech.tnau.ac.in/ta/faq_ta.html

12) பல்கலைக்கழக வெளியீடுகள்
http://www.agritech.tnau.ac.in/ta/tnau_publications/tnau_publish_ta.html

O. ஈ – வேளாண்மை செய்தி மற்றும் சேவைகள்

1) தோட்டக்கலை
http://www.agritech.tnau.ac.in/ta/horticulture/horti_index_ta.html

2) வேளாண் பொறியியல்
http://www.agritech.tnau.ac.in/ta/agrl_engg/agriengg_index_ta.html

3) விதை சான்றிதழ்
http://www.agritech.tnau.ac.in/ta/seed_certification/seedcertification_index_ta.html

4) அங்கக சான்றிதழ்
http://www.agritech.tnau.ac.in/ta/org_farm/orgfarm_index_ta.html

5) பட்டுபுழு வளர்பு
http://www.agritech.tnau.ac.in/ta/sericulture/seri_index_ta.html

6) வனவியல்
http://www.agritech.tnau.ac.in/ta/forestry/forestry_tamil_index.html

7) மீன்வளம் மற்றும் கால்நடை
http://www.agritech.tnau.ac.in/ta/fisheries/fish_index_ta.html
தினசரி வானிலை, மழைப்பொழிவு மற்றும் நீர்த்தேக்க நிலைகள்
http://services.indg.in/weather-forecast/

9) விதை மற்றும் உரம் தயாரிப்பாளர் விபரம்
http://www.tnsamb.gov.in/seedcomp.html

http://www.tnsamb.gov.in/fertilizers.html

10) உரங்களின் விலை விபரம்
http://www.tnagrisnet.tn.gov.in/website/FertilizerPrice.php

P. போக்குவரத்து துறை

1) ஓட்டுனர் பழகுனர் உரிமம் மனு முன்பதிவு
http://www.tn.gov.in/appforms/form2.pdf

2) புகார்/கோரிக்கைப் பதிவு
http://transport.tn.nic.in/transport/registerGrievanceLoad.do

3) வாகன வரி விகிதங்கள்
http://www.tn.gov.in/sta/taxtables.html

4) புகார்/கோரிக்கை நிலவரம்
http://transport.tn.nic.in/transport/grievance_statusLoad.do

5) ஓட்டுனர் உரிமம் சேவை முன்பதிவு
http://tnsta.gov.in/transport/transportTamMain.do

6) தொடக்க வாகன பதிவு எண்
http://transport.tn.nic.in/transport/rtoStartNoListAct.do

Monday, January 20, 2014

                         






                                            


               பிச்சாவரம் தமிழ்நாட்டில் சிதம்பரத்துக்கு அருகே வங்கக் கடலை ஒட்டிய ஒரு பகுதி. இவ்வூரில் அலையாத்திக் காடுகள்(சதுப்புநிலக்காடுகள், மாங்குரோவ் காடுகள்) மிகுந்துள்ளன. உலகின் மிகப்பெரிய அலை ஆத்திக் காடுகள், பிரேசில் நாட்டில் உள்ளன. அதன் பரப்பளவு 26 ஆயிரம் சதுர கிலோ மீட்டர்கள். அதற்கு அடுத்தபடியாக, உலகிலேயே இரண்டாவது இடத்தைப் பெறுவது நமது பிச்சாவரம் காடுகள்தாம். இந்தக் காடுகளில் உள்ள செடிகளும், குறுமரங்களும், கடல்நீருக்கு உள்ளேயே வளருகின்றன. இவற்றின் தண்டுகளிலும், கிளைகளிலும் உள்ள துளைகளின் வழியாக, உயிர்க்காற்றை உறிஞ்சுகின்றன. நீர்மட்டம் உயரும்போது, சிறிய குழல்களைவெளியே நீட்டி, காற்றை உறிஞ்சுகின்றன. கடல்நீரில் உள்ள உப்புத்தன்மையை வடிகட்டியே நீரை எடுத்துக் கொள்கின்றன. இங்கு விளைந்துள்ள செடிகள் சுனாமி வந்தாலும் அதனை மேலும் செல்லவிடாமல் தடுத்து விடும் தன்மை பெற்றது.
பிச்சாவரம் காட்டுப்பகுதியின் பரப்பளவு 2800 ஏக்கர்கள். இப்பகுதி சிறுசிறு தீவுகள் நிறைந்து காணப்படுகிறது. இக்காடுகளுக்கு நிறைய பறவைகள் வருகின்றன. மொத்தம் 41 குடும்பங்களைச் சேர்ந்த 177 வகையான (சிற்றினங்கள்) பறவைகள் வருவதாகக் கண்டறியப் பட்டுள்ளது. வாட்டர் ஸ்னிப்ஸ், ஹெரான், பெலிகன், கார்மோரான்ட்ஸ் மற்றும் ஈக்ரெட் ஆகியவை அவற்றில் சில குறிப்பிடத்தக்க பறவை வகைகளாகும்.
உலகெங்கிலும் உள்ள பறவை கவனிப்பாளர்களை ஈர்க்கும் இடமாக இந்த காடுகள் உள்ளன. இந்த காடுகளுக்குள் படகுப் பயணம் செய்வது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மற்றுமொரு அம்சமாகும்.

Friday, October 11, 2013

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சச்சின் டெண்டுல்கர் ஓய்வு







           

               கடந்த 24 ஆண்டுகளாக ரன் குவிக்கும் எந்திரமாக இயங்கி வந்த சச்சின் டெண்டுல்கர், தனது 200-வது டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.
ஏற்கெனவே, ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் தனது ஓய்வை அறிவித்துள்ள சச்சினை, டெஸ்ட் போட்டியில் மட்டும் காணும் வாய்ப்பு ரசிகர்களுக்கு இருந்தது. சச்சினின் 200-வது டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து, ஆடுகளத்தில் தனக்கே உரித்தான பாணியில் விளையாடும் சச்சினை ரசிகர்கள் காண முடியாது.
தனது ஓய்வு குறித்த அறிவிப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் சச்சின் வியாழக்கிழமை தெரிவித்தார்.
198 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 15, 837 ரன்களைக் குவித்துள்ள சச்சின், "கிரிக்கெட் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்ப்பதற்கு கடினமாக உள்ளது' என்று மனம் உருகித் தெரிவித்துள்ளார்.

தனது ஓய்வு அறிவிப்புக்குப் பின் அவர் கூறியது:
என்னுடைய வாழ்க்கை முழுவதும் இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாட வேண்டும் என்றே கனவு கொண்டிருந்தேன். கடந்த 24 ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் அதே கனவுகளுடன் வாழ்ந்து வந்தேன். எனது 11 வயது முதல் கிரிக்கெட் விளையாடி வருகிறேன். கிரிக்கெட் விளையாடாத வாழ்வை நினைத்துப் பார்ப்பதற்கு மிகவும் கடினமாக உள்ளது.
எனது தாய் நாட்டின் சார்பில் உலகம் முழுவதும் கிரிக்கெட் விளையாடியதை பெரும் கெüரவமாகப் பார்க்கிறேன். சொந்த மண்ணில் விளையாட உள்ள 200-வது டெஸ்ட் போட்டியை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்.
எனது மனசாட்சி அனுமதிக்கும் வரை, என்னை கிரிக்கெட் விளையாட அனுமதித்த கிரிக்கெட் வாரியத்துக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். என்னை புரிந்து கொண்டு, பொறுமையுடன் காத்திருந்த எனது குடும்பத்துக்கு நன்றி தெரிவிக்கிறேன். அனைத்தையும்விட, நான் நன்றாக விளையாட வேண்டும் என்று பிரார்த்தனை நடத்திய ரசிகர்கள் மற்றும் நலன் விரும்பிகளுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
சதங்கள் அதிகரிக்குமா? டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் சச்சின் இதுவரை 100 சதங்களை அடித்துள்ளார். கடைசியாக விளையாட உள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் அவர் சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் பேராவல் கொண்டுள்ளனர்.
சொந்த மண்ணில் சாதனை: 198 டெஸ்ட் போட்டிகளை விளையாடியுள்ள சச்சின், மேலும் 2 டெஸ்ட் போட்டிகள் விளையாடினால் 200 டெஸ்ட் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை பதிவு செய்ய உள்ளார். இந்த சாதனை, தென் ஆப்பிரிக்க தொடரில் சாத்தியமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்னதாக மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் டெஸ்ட் மட்டும் ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இதனால், 200 டெஸ்ட் போட்டியை தனது தாய் நாட்டிலே விளையாடும் வாய்ப்பை சச்சின் பெற்றார்.
எங்கே 200-வது டெஸ்ட்?: 200-வது டெஸ்ட் போட்டியை சச்சினின் தனது சொந்த மாநிலத்திலேயே விளையாட வேண்டும் என்று மகாராஷ்டிர மாநில கிரிக்கெட் சங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது. அதேபோல, தங்கள் மாநிலத்தில் விளையாட வேண்டும் என்று மேற்கு வங்க கிரிக்கெட் சங்கமும் கோரிக்கை விடுத்துள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் விளையாடும் டெஸ்ட் போட்டிகள் எங்கு நடைபெறுகிறது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
ஆனால், தற்போது சச்சின் ஓய்வு முடிவை அறிவித்துள்ளதால், அவரைக் கெüரவப்படுத்தும் வகையில், மகாராஷ்டிரத்திலேயே அவரது 200-வது டெஸ்ட் போட்டி வரும் வகையில் பிசிசிஐ அட்டவணை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறே போட்டி அட்டவணை வெளியிடப்பட்டால், அவரது இறுதி டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 14-ம் தேதி நடைபெறும்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக சதமடித்தவர்கள்
வீரர் போட்டிகள் இன்னிங்ஸ் சதங்கள் அதிகபட்சம்
சச்சின் (இந்தியா) 662 780 100 248*
பாண்டிங் (ஆஸ்திரேலியா) 560 668 71 257*
காலிஸ் (தென் ஆப்பிரிக்கா) 508 604 61 224
லாரா (மேற்கிந்தியத் தீவுகள்) 430 521 53 400*
சங்ககாரா (இலங்கை) 516 574 49 287
திராவிட் (இந்தியா) 509 605 48 270
ஜெயவர்த்தனே (இலங்கை) 590 658 48 374
ஜெயசூர்யா (இலங்கை) 586 651 42 340
ஹைடன் (ஆஸ்திரேலியா) 273 348 40 380

டெஸ்ட்: பேட்டிங்
அறிமுகம்: 1989-பாகிஸ்தான்
போட்டிகள் : 198
இன்னிங்ஸ் : 327
நாட் அவுட் : 33
ரன்கள் : 15,837
அதிகபட்சம் : 248*
சராசரி : 53.86
சதம் : 51
அரை சதம் : 67

பந்து வீச்சு
இன்னிங்ஸ் : 142
விக்கெட்டுகள் : 45
சிறந்த பந்து வீச்சு : 3வி/10

ஒருநாள்: பேட்டிங்
அறிமுகம்:1989-பாகிஸ்தான்
கடைசி:2012-பாகிஸ்தான்
போட்டிகள் : 463
இன்னிங்ஸ் : 452
நாட் அவுட் : 41
ரன்கள் : 18,426
அதிகபட்சம் : 200*
சராசரி : 44.83
சதம் : 49
அரை சதம் : 96

பந்து வீச்சு
இன்னிங்ஸ் : 270
விக்கெட்டுகள் : 154
சிறந்த பந்து வீச்சு : 5வி/32

இருபது ஓவர் பேட்டிங்
போட்டி : 1
இன்னிங்ஸ் : 1
ரன் : 10
அதிகபட்சம் : 10
சராசரி : 10.00

பந்து வீச்சு
இன்னிங்ஸ் : 1
விக்கெட் : 1
சிறந்த பந்து வீச்சு : 1வி/12

ஒவ்வொரு அணிக்கு எதிராகவும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவர் அடித்த சதங்கள்
அணிகள் டெஸ்ட் ஒருநாள்
ஆஸ்திரேலியா 11 9
இலங்கை 9 8
தென் ஆப்பிரிக்கா 7 5
நியூஸிலாந்து 4 5
இங்கிலாந்து 7 2
ஜிம்பாப்வே 3 5
பாகிஸ்தான் 2 5
மேற்கிந்தியத் தீவுகள் 3 4
வங்கதேசம் 5 1
கென்யா - 4
நமீபியா - 1

Monday, September 16, 2013

சர்வதேச ஓசோன் தினம் 16.09.2013

           சூரியனின் கதிர்களில் உயிர்ச் சூழலுக்குத் தீங்கு விளைவிக்க கூடிய புற ஊதாக் கதிர்களும், அகச் சிகப்புக் கதிர்களும் புவியை வந்தடையா வண்ணம் அவற்றினை உறிஞ்சி எடுத்துக் கொண்டு உயிர்ச் சூழலுக்கு நன்மை பயக்கக் கூடிய கதிர்களை தேவையான அளவு புவிக்கு வழங்குகின்ற ஓரு படலமே ஓசோன் படலமாகும். இவ் ஓசோனில் ஏற்பட்டுள்ள துவாரமே இன்று ஜீவராசிகள் எதிர் நோக்குகின்ற மிகப் பெரிய பிரச்சினைகளில் ஒன்றாகும்.
இவ் ஓசோன் படலத்தைப் பாதுகாக்கும் நோக்கில் 1987 செப்ரெம்பர் 16 இல்  கனடாவில் உள்ள மொன்றியலில் பல நாடுகளின் பிரதி நிதிகள் ஒன்றிணைந்து ஓசோன் படையின் அழிவைத் தடுக்க சர்வதேச ஒப்பந்தம் ஒன்றினை மேற்கொண்டனர். இதில் இருபத்திநான்கு நாடுகள் கைச்சாத்திட்டன. அத்தினமே, 1995 ஆம் ஆண்டு முதல் சர்வதேச ஓசோன் தினமாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
Ozone_001
புவியைச் சுற்றி பல்வேறு வாயுக்களைக் கொண்டிருக்கும் படையே வளிமண்டலம் ஆகும். புவியினுடைய ஈர்ப்புச் சக்தியினாலேயே இவ் வளிமண்டலம் புவியைச் சுற்றிக் காணப்படுகின்றது. வளிமண்டலமானது மாறன்மண்டலம், படைமண்டலம், அயணமண்டலம் என்ற படைகளைக் கொண்டு காணப்படுகின்றது. மாறன்மண்டலத்திற்கும், படைமண்டலத்திற்கும் இடையே 12 – 45 கிலோமீற்றர் வரையான ஸ்ட்ரட்ரோ ஸ்பியர்  பிரதேசத்தினுள்  காணப்படும் மென்படையே ஓசோன்படை எனலாம். ஒரு மெல்லிய புகைமண்டலம் போல ஓசோன் இங்கு பரவிக் காணப்படுகின்றது. அடர்த்தி குறைந்த ஒரு வாயு ஓசோன் ஆகும். இப் பகுதியில் இயல்பாக உள்ள ஒட்சிசன் மூலக் கூறு மீது சூரியனின் புறஊதாக் கதிர் வீச்சு தாக்குதல் ஏற்படுத்தி இரண்டு ஒட்சிசன் அணுவாகப் பிரிக்கப்பட்டு, பின் இந்த அணுக்கள் ஒட்சிசன் மூலக் கூற்றுடன் இணைந்து ஓசோன் (O3) வடிவமாக உருவாகின்றது. ஓசோனை முதன் முதலாகக் கண்டறிந்தவர் சி.எப் ஸ்கோன்பின் என்பவராவர்.
Ozone_002
ஓசோன் அமைந்துள்ள மாறன்மண்டலமே புவியின் வானிலை, காலநிலை நிலைமைகளுக்கு முக்கியமானதாகும். இப்படையானது சூரியனில் இருந்து வீசப்படும் புறஊதாக் கதிர்களிடமிருந்து பாதுகாப்புக் கவசமாகச் செயற்படுகின்றது. வளிமண்டலத்தில் ஓசோனின் அடர்த்தியை டாப்சன் அலகினால் அளவிடுகின்றனர். ஓசோனின் அடர்த்தியை கணக்கிட பத்தொன்பது வகையான கருவிகள் உள்ளன. அவற்றுள் டாப்சன் ஸ்பேக்ட்டோ மீற்றர், ப்ருவர் ஸ்பேக்ட்டோ போட்டோ மீற்றர், ஜோடு மீற்றர், பில்டர் ஓசோன் மீற்றர் எம்.83, பில்டர் ஓசோன் மீற்றர் எம்.124, மாஸ்ட், ஆக்ஸ்போட்டு, சர்பேஸ் ஓசோன் பப்ளர், எலக்ட்ரோ கெமிக்கல் செல் சோன்ட் என்பவை சிலவாகும்.
Ozone_003
அறிவியலாளர்கள் 1920 இல் ஓசோன் படலத்தைக் கண்டுபிடித்த காலத்தில் இருந்து அதன் இயற்கை அமைப்பு, மற்றும் தொழிற்பாடுகள் தொடர்பாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 1974 இல் சேர் வூட்ரொலன்ட் மற்றும் மரியா மொலினா என்போர் மனித செற்பாடுகளினால் ஓசோன்படைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கண்டுபிடித்துள்ளனர். ஓசோன் படையில் துவாரமேற்பட்டிருப்பது தொடர்பாக 1982 ஆம் ஆண்டு அந்தாட்டிக்காவின் “கலிபே” என்ற இடத்தில் ஆராய்ச்சி நடாத்திய பிரித்தானிய ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். உறைபனிக் காலத்தில் துவாரங்கள் தோன்றுவதாக NIMBUS 7 எனும் செயற்கை செய்மதியினால் கண்டறியப்பட்டது. 1984 ஒக்டோபர் மாதம் மீண்டும் ஆராய்ந்த போது முன்னரிலும் பார்க்க 30 வீதம் விரிவடைந்திருந்தமை கண்டறியப்பட்டது.
Ozone_004
ஓசோனைத் தேய்வடையச் செய்யக் கூடிய பொருட்களை வெளியிடுதலே ஓசோன் படையின் அழிவிற்கு (Ozone Depleting Substances) காரணங்களாக உள்ளன. இப் பொருட்கள் பிரதானமாக மனிதனின் செயற்பாடுகளினாலேயே வளிமண்டலத்தில் கலக்கின்றன. இவ் ஊறுவிளைவிக்கும் பொருட்கள் கைத்தொழில் விவசாய நடவடிக்கைகள் மூலம் உருவாக்கப்படுகின்றது. குறிப்பாக குளோரோ புளோரா காபன் (CFC Chloro floro carban),   கார்பன் தெட்ராகுளோரைட் (Carbon Thetrachlorite), ஐதரோ குளோரோ புளோரோ காபன் (HCFC), மற்றும் மெதில் புரோமைட் (Methil Bromite), போன்றவை பிரதானமாக ஓசோன் தேய்விற்குப் பொறுப்பாய் உள்ளன.
ஓசோன் தேய்வானது அதற்கு சேதம் விளைவிக்கும் பொருட்களால் வெளியேற்றப்படும் (ODS Ozone Depliting Substances) பிரதேசத்திற்கோ அல்லது குறிப்பிட்ட இடத்திற்கோ சேதத்தினை ஏற்படுத்துவதில்லை. உலகின் அனைத்து மக்களுமே அதன் தாக்கத்திற்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. மானிடக் காரணிகள் (Anthropogenic) மூலம் வெளிவிடப்படும் பொருட்கள் ஓசோனின் அழிவைத் துரிதப்படுத்தி, இயற்கை சமநிலை குலைகின்றது.
Ozone_005
இவ் ஓசோன் படையின் அழிவுக்கான காரணங்கள் பற்றி நோக்குகையில், நாம் அன்றாடம் பாவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதால் அதிலிருந்து வெளியேறும் புகை  ஓசோன் மண்டலத்தில் ஒரு படையாகப் படிந்து தாக்கம் புரிகின்றது. அத்துடன் குளிர்சாதனப்பெட்டிகள், குளிரூட்டிகள் என்பனவற்றில் இருந்து வெளியேறும்  CFC இதற்குப் பெருமளவு பங்களிப்புச் செய்கின்றது. வர்ணப் பூச்சுக்கள், இலத்திரனியல்  கைத்தொழில்சாலைகளில் இருந்து வெளியேறும் வாயுக்கள், துப்பரவாக்கல் செயன்முறைக்குப் பயன்படுத்தப்படும் ஒரு திரவம், ஐரோப்பிய நாடுகளில் கோதுமைத் தானியத்திற்கு தெளிக்கப்படும் பூச்சி நாசினிகள், அதிவேக விமானங்கள், அணுப் பரிசோதனை போன்றவை ஓசோன் படலத்தில் பாதிப்பினை ஏற்படுத்தி விடுகின்றது. இதனை விட ஏனைய வாயுக்களும் இதில் பங்களிப்புச் செய்கின்றது.
Ozone_006
ஹொலோன், மெத்தில் புரொமைஸ், காபன் மெற்றா குளோரைட், மெத்தில் குளோரோ போம் என்பனவும் ஹைரோகாபன்களாகும். அவற்றின் அழிவுகளின் மூலம் கிளோரித், பிரோமித் போன்ற ஹெசவின் பிரிவொன்றும் உருவாகும். இவை மண்ணிலிருந்தும் கடல், நீராவி என்பவற்றில் இருந்தும் வெளிப்படுகின்றது. இது தவிர இயற்கையாக எரிமலைகள், பருவமாற்றங்கள், சூரியவட்டம், காற்றின் வேகம் இவற்றினாலும் ஓசோன்படை பாதிப்படைவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கைத்தொழில் பேட்டைகளில் இருந்து உருவாகும் சூழலை மாசுபடுத்தும் வாயுக்களாக குளோரோ புளோரா காபன், மெதேன், நைதரசன் ஒக்சைட் போன்ற வாயுக்கள் 100 – 125 ஆண்டுகள் வரை வளிமண்டலத்தில் நிலைத்திருக்கும் தன்மை வாய்ந்தன. எனவே, இவை படிப்படியாக ஓசோன் படலத்தில் உள்ள ஓசோன் மூலக்கூறுகளுடன் தாக்கமடைந்து சுயாதீன ஒட்சிசன் மூலக்கூறுகளை உருவாக்கி ஒட்சிசன் படலத்ததைப் பிரிகையடையச் செய்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
Ozone_007
கீழ் வளிமண்டலத்தில் இப் பொருட்கள் எமது சுற்றாடலுக்கு எது வித தாக்கங்களையும் ஏற்படுத்தாது. எனவே கைத்தொழிலுக்காக இவற்றின் பாவிப்பு அதிகளவாகக் காணப்படுகின்றது. எனினும் இவை சுற்றாடலில் கலந்ததன் பின்பு கீழ் வளிமண்டலத்தில் உள்ள ஏனைய வாயுக்களும் தாக்கங்களை ஏற்படுத்தாது. படிப்படியாக மேல் வளிமண்டலம் வரை இந்த வாயு, அதிகளவான சக்தியினை சூரிய ஒளிக்கதிர்கள் ருஏ (Ultra Violet) உடன் ஒன்றிணைந்து கிளோரின் அல்லது பிராமிக்த் ஹெலயிட் ஓசோனுடன் செயற்பட்டு கிளோரின் அல்லது பிரோமின் மொனோ ஒக்சைட்டின் உற்பத்தி செய்யும். இங்ஙனமாக உற்பத்தியாகும் அணுக்கள் மீண்டும் சிதறி ஹெலயிட் அணுவினை அழிக்கும். இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெறும். இதன் மூலம் தொடர்ச்சியாக ஓசோன் அணுக்கள் அழிக்கப்படும் என விஞ்ஞானிகளின் ஆய்வுகளின் பிரகாரம் கண்டறிந்துள்ளனர். ஒரு கிளோரிக் அணுவிற்கு ஒரு  மில்லியன் ஓசோன் அணுக்கள் குறைவதினால் ஓசோன் படலத்தின் தடிப்புக் குறையும். எனவே, இங்ஙனம் ஓசோன் படலத்தின் தடிப்பு குறைதலை ஓசோன் துவாரம் என அழைப்பார்கள். ஓசோன் துவாரத்திற்கான காரணத்தை ஆராய்ந்து முன்மொழிந்தவர் அமெரிக்க இரசாயனவியலாளரான சேர்.வூட்ரவ்லண்ட் என்பவராவார்.
Ozone_008
ஓசோன் துவாரத்தின் தற்போதைய நிலையினை ஆய்வாளர்கள் செயற்கைக் கோளின் துணையுடன் ஆராய்ந்து வருகின்றனர். அந்தாட்டிக்காவில் ஓசோன் துவாரத்தின் பரப்பு 1980 ஆம் ஆண்டு முதல் கணக்கிடப்பட்டுள்ளது. ஓசோன் துவாரத்தின் பரப்பு ஆகஸ்ட் மாதத்தில் 10 மில்லியன் ச.கி.மீ அளவில் ஆரம்பித்து செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அதிக அளவிற்கு விரிவடைந்து நவம்பர் மாத இறுதியில் குறைய ஆரம்பித்து, டிசம்பர் முதல் வாரத்தில் ஓசோன் துவாரம் முழுமையாக மறைந்து விடுகின்றது. கடந்த பத்தாண்டுகளில் ஓசோன் துவாரத்தின் பரப்பு அதிகபட்ச நிலையில் 25 மில்லியன் ச.கி.மீ ஆக இருந்த நிலைமாறி, 2000 ஆம் ஆண்டில் 28.3 மில்லியன் ச.கி.மீ ஆக அதிகரித்திருந்தது. இந்த பரப்பளவு அவுஸ்ரேலியாவின் பரப்பளவினை போல் மூன்று மடங்காகும். ஆனால் 2002 ஆம் ஆண்டில் இதன் பரப்பளவு வெகுவாகக் குறைந்து 15 மில்லியன் ச.கி.மீ ஆக இருந்தது. இது கடந்த இருபது ஆண்டுகளில் மிகக் குறைந்த பரப்பளவு கொண்ட ஓசோன் துவாரம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
Ozone_009
ஓசோனில் ஏற்பட்டுள்ள துவாரத்தினால் உயிர்ச்சுழலுக்கு  பொருத்தமற்ற ஒளிக்கதிர்கள் புவியை வந்தடைகின்றன. இதனால், மனிதனுக்கு பல விதமான நோய்கள் ஏற்படுகின்றது. அதாவது, தோல்புற்று நோய், கண்களில் வெள்ளை உண்டாதல், அதன் மூலம் கண்பார்வை அற்றுப்போதல், மனிதனின் நோய்த் தடுப்பு முறைகளில் தாக்கங்கள் ஏற்படுதல், நோய்த்தடுப்பு, உடல் சக்தி குறைதல் போன்றவையாகும். இதனைவிட தாவரங்களின் வளர்ச்சி குன்றுதல், அவற்றின் பலாபலன்கள் குறைதல், மீன் இனம், ஊர்வன ஆகியவற்றின் முட்டைகள் மிக விரைவாக அழிவடைதல், UV கதிர்களின் வீச்சினால் அப்பகுதிகளில் உள்ள மீனின் உணவுகளான பிளான்டன்கள் அழிவடைதல் ஆகியவைகளினால் கடலில் பிடிக்கப்படும் மீன்களின் வளம் குறைவடைந்துள்ளது.
Ozone_010
CFC வாயுவும், காபன்டைஸ் ஒட்சையிட் வாயுவும் அதிகளவான சக்தியினை கொண்டவையாகும். இந்த வாயுவின் முக்கிய தொழிற்பாடு வெப்பத்தினை சீராக வைத்திருத்தலாகும். இவ்வகையான வாயு ஒன்று பாச்சப்படுதலின் காரணமாக வளிமண்டலத்தின் வெப்பம் அதிகரித்துள்ளது. இதனால் முனைவுப் பனிப்படலங்கள் உருகி, கடல் மட்டம் உயர்வடைந்துள்ளது. காலநிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இங்ஙனமாக ஒன்றொடொன்று தொடர்புடைய சுற்றாடல் பிரச்சினைகள் அதிகளவு ஓசோன் படையின் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ளது. எவ்விதத்திலும் ஓசோன் படலத்தின் சிதைவின் இறுதிப் பிரதிபலன் பூமியில் வாழும் சகல உயிரினங்களினதும் அழிவாகும்.
Ozone_011
ஓசோன் படையானது புவியிற்கும் அதன் உயிரியல் முறைமைக்கும் பாதுகாப்புக் கவசமாகத் தொழிற்படுகின்றது. ஓசோன் வாயுவிற்கு பங்கம் ஏற்படுத்தும் பொருட்களைப் பாவனையில் இருந்து நீக்கிவிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதாவது, குளிரூட்கள், கொலோன்  உற்பத்திக்கு CFC க்கு பதிலாக மாற்றுப் பொருட்களாக ஓசோன் விரும்பத்தக்க HFC (ஹய்ரோ புளோரோக் காபன்), வகைகளைப் பாவித்தல். தெளிபொருளாக ஹய்ரோ காபன் பாவித்தல், கமத்தொழிலுக்கு பாவிக்கப்படும் மெத்தில் போமலிங் பதிலாக வேறு பாவனைகளை மேற்கொள்ளுதல்.  தீயணைக்கும் கருவிகளில் பயன்படுத்தப்படும் காபன்டைன் ஒட்சைட் போன்ற மாற்றுப் பொருட்களைப் பாவித்தல், வளர்முக நாடுகளில் வெளியேற்றப்படும் CFC உள்ளடங்கலான பொருட்களை இறக்குமதி செய்வதை தடுப்பதற்காக முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளல் போன்றன இன்று செயற்படுத்தப்பட்டு வருகின்றது.
Ozone_012
ஓசோன் படையின் பாதுகாப்புத் தொடர்பாக 1976 இல் ஐ.நாவின் சுழல் திட்ட கூட்டத்தில் ஆராயப்பட்டது. 1977 இல் இது குறித்து வல்லுனர்களின் கூட்டம் ஒன்று நடைபெற்றது. ஓசோன் படலப் பாதிப்பைத் தொடர்ந்து மதிப்பீடு செய்வதற்காக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டமும், உலக நிலவிய அமைப்பும் சேர்ந்து ஓசோன் படலத்திற்கான ஒருங்கிணைப்பு குழுவை அமைந்தனர். ஓசோனைப் பாதிக்கும் நிலைகளைத் தடுப்பதற்கான உலக நாடுகளிடையே ஒரு அனைத்துலக உடன்பாட்டை ஏற்படுத்துவதற்கான முயற்சி 1981 இல் தொடங்கியது. அத்துடன் 1985 மார்ச்சில் நடைபெற்ற வியன்னா மாநாடு முடிவுகள் உலக நாடுகளினால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இதனையடுத்து 1987 இல் கனடாவில் ஓசோன் படலத்தைப் பாதிக்கும் பொருட்கள் குறித்து,  மொன்றியல் ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது தொடர்பான மாநாடுகள் 1990 இல் லண்டனிலும், 1992 இல் கெர்பன்கேகளிலும் நடத்தப்பட்டது. 1995 இல் CFC இனை நிரத்திரமாகத் தடைசெய்வதற்கான ஒப்பந்தத்தில் 150 நாடுகள் கைச்சாத்திட்டன. ஆனால் இப்பிரச்சினை இதனுடன் தீர்ந்து விடவில்லை. CFC இன் பயன்பாட்டை ஐரோப்பிய சமூகம் 2015 ஆம் ஆண்டுக்குள் முடிவுக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்று குரலெழுப்பி வருகின்றது.
Ozone_013
1990 களில் சுவிஸ்லாந்தில் சுமார் 52.8 மில்லியன் தொன் பாதகமான வாயுக்கள் வெளியிடப்பட்டதாக அறியப்பட்டுள்ள போதும், 2008 ஆம் ஆண்டில்; 48.4 தொன்னாக குறைவடைந்துள்ளது. ஓசோன் படலத்தை பாதுகாக்கும் வகையில் சுவிசில் புதிய திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். 2012 ஆம் ஆண்டில் சுற்றாடலுக்கு தீங்கு ஏற்படுத்தக் கூடிய வாயு வெளியேற்றத்தை குறைக்க முடியுமென நம்பிக்கை வெளியிடப்படுள்ளது.
Ozone_014
மொன்றியல் சாசனத்தின் மூலம் ஓசோனின் மீள் உற்பத்தி நடவடிக்கையினை ஊக்குவிக்கும் தொழிற்பாடுகள் செயற்படுத்தப்படுகின்றன. கைத்தொழில் குழுக்கள் சூழல் – நட்பு முறையிலான பாதுகாக்கப்பட்ட மாற்று முறைமைகளைக் கையாள முனைந்து வருகின்றன. தொழில்நுட்பத்தின் ஊடாக மாற்று திட்டங்களை அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளும் அமுல்படுத்துவதினை ஊக்குவித்து வருகின்றன. மொன்றியல் பிரகடனத்தில் கைச்சாத்திட்ட நாடுகளும்  சாசனத்தில் உள்ள இலக்குகளுக்கு கட்டுப்பட்டிருப்பது, சூழல் நட்புத் தொழில்நுட்பத்திற்கு நன்மை பயப்பித்துள்ளது. தேசிய ரீதியாக இது தொடர்பான சட்ட அமுலாக்கங்கள் தேசிய ஓசோன் அமைப்பினால் (National Ozone Unit) செயற்படுத்தப்படுகின்றது. இலங்கையில் அனைத்துலக ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட குறியீட்டு முறைமை (Coding) Harmonized System  (H.S Code) ஒன்றினை ODS பொருட்களின் இறக்குமதியினை கண்காணிப்பதற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கை CFC அல்லது ODS இனை அடிப்படையாக வைத்த உபகரணங்களை தற்போது உற்பத்தி செய்யவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Ozone_015
உலகிற்கே பாதுகாப்பு படையாகக் காணப்படும் இவ் ஓசோன் படையானது மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளது. இதன் உண்மையினைப் புரிந்து கொண்டு அனைத்துலக நாடுகளும் தமது சுயாதீன சிந்தனைகளைச் சற்று தியாகம் செய்து இவ் ஓசோன் படையின் பாதுகாப்பில் அக்கறை காட்டுமானால் ஓசோன் படையினைப் பாதுகாப்புடன் பேணமுடியும். வளரும் பல நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு சுற்றுப்புறச் சூழல் குறித்த விழிப்புணர்வு இன்னும் வரவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். “தூய்மையான இருப்பிடம் என்பது ஆரோக்கியமான வாழ்வின் அடிப்படை” மனிதன் இயற்கையை விட்டும், தூய்மையை விட்டும் தூரமாய் செல்லும் போது பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடுகின்றது. ஆகவே, ஒவ்வொரு தனிமனிதனும் இதனை உணர்ந்து செயற்படுவானேயானால், இயற்கை எம் மீது தொடுக்கும் போரில் இருந்து விடுபட முடியும் என்பது திண்ணம்.
                                                                                                Thanks to http://pothikai.wordpress.com