Thursday, June 30, 2011

தமிழர்களை ஏமாற்ற வேண்டாம் பிரதமருக்கு பழ. நெடுமாறன் எச்சரிக்கை


இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்று இலங்கை அரசை இந்தியா நிர்பந்தித்து வருவதாக பிரதமர் கூறியிருப்பது ஏமாற்றுப் பேச்சு என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

தமிழர்கள் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்று ஒருபோதும் தங்களை இந்தியா நிர்பந்திக்கவில்லை என்று இலங்கை அதிபர் ராஜபக்ச கூறி, அது ஊடகங்களிலும் வெளிவந்த நிலையில், யார் கூறுவது சரி என்று நெடுமாறன் வினா எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

"இலங்கைத் தமிழர்களினகுறைகள் நியாயமானவை. அவைத் தீர்க்கப்பட வேண்டும். அங்கு வாழும் தமிழர்களுக்கு சஉரிமை வழங்க வேண்டும் என இந்திய அரசு இலங்கை அரசை நிர்பந்தித்து வருகிறது எபிரதமர் மன்மோகன் சிங் கூறியிருக்கிறார்.

ஆனால் நேற்றைய தினம் "இலங்கைத் தமிழரபிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணுமாறு இந்திய நிர்பந்திக்கவில்லை என்று இலங்கஅதிபர் மகிந்தா இராசபக்சே தெரிவித்திருக்கிறார். யார் கூறுவது உண்மை? என்ற ஐயமஎழுந்திருக்கிறது. இராசபக்சே தெரிவித்திருக்கிற கருத்தை இந்தியப் பிரதமரமறுத்திருக்க வேண்டும். ஆனால் அவர் அவ்வாறசெய்யவில்லை.

இலங்கையில் போர் உச்சககட்டமாக நடைபெற்ற வேளையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையவலியுறுத்தி தமிழக மக்கள் போராடிய போது போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என இலங்கஅரசுக்குக் கூறியிருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். ஆனால் இராசபக்சஅதை மறுத்தார். இந்தியா ஒருபோதும் செய்யும்படி கேட்கவில்லை என பகிரங்கமாகககூறினார்.

அதைப் போல இலங்கைக்கு இராணுவ ரீதியிலான உதவி எதையும் இந்தியசெய்யவில்லை என பிரதமர் மன்மோகன் சிஙகூறினார். ஆனாலஇந்தியா செய்உதவியால்தான் தாங்கள் வெற்றிபெற முடிந்தது என இராசபச்சே போர் முடிந்தபிறகபகிரங்கமாகக் கூறினார்.

இவ்வாறு தங்களைததொடர்ந்து ஏமாற்றுவதற்காக பிரதமரமன்மோகன் சிங் நாடகமாடுவதாக தமிழக மக்கள் கருதுகிறார்கள். எனவே தான் கடந்த சட்மன்றத் தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் பாடம் கற்பித்தார்கள். இன்னமும் தொடர்ந்து தமிழக மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபடவேண்டாம் என பிரதமரமன்மோகன் சிங்கை எச்சரிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment