- உலக சாரணர் நாள்
- அங்கோலா - இராணுவ நாள்
- பெனின் - தேசிய நாள் (1960)
- கொங்கோ - பெற்றோர் நாள்
- லெபனான் - இராணுவ நாள்
- சுவிட்சர்லாந்து - தேசிய நாள் (1291)
- தாய்ப்பால் நாள்
- தமிழ் ஆட்சிமொழியாக்கப்பட்ட நாள்
- கிமு 33 - ஒக்டேவியன் எகிப்தின் அலெக்சாண்டிரியா ந்கரைக் கைப்பற்றி ரோமக் குடியரசின் கீழ் கொண்டு வந்தான்.
- 1291 - சுவிஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
- 1498 - கொலம்பஸ் வெனிசுவேலாவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆனார்.
- 1619 - முதலாவது ஆபிரிக்க அடிமைகள் வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுன் நகரை அடைந்தனர்.
- 1774 - ஆக்சிஜன் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1793 - உலகிலேயே மெட்ரிக் அளவு முறையை முதன்முதலாக அறிமுகப்படுத்திய நாடு பிரான்ஸ்
- 1831 - புதிய லண்டன் பாலம் திறந்து வைக்கப்பட்டது.
- 1902 - பனாமா கால்வாயுக்கான உரிமையை ஐக்கிய அமெரிக்கா பிரான்சிடம் இருந்து வாங்கியது.
- 1907 - சாரணிய இயக்கத்தின் முதல் பாசறையை பேடன் பவல் இங்கிலாந்தில் பிறௌன்சி தீவில் ஆரம்பித்து வைத்தார். இது ஆகஸ்ட் 9 வரை நீடித்தது.
- 1914 - முதலாம் உலகப் போர்: ஜெர்மனி ரஷ்யாவுடன் போர் தொடுத்தது.
- 1914 - இலங்கையில் மன்னாருக்கும் மதவாச்சிக்கும் இடையில் பகல் நேர தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.
- 1927 - சீன உள்நாட்டுப் போரின் முக்கிய சமர் கொமிந்தாங் படைகளுக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையில் ”நான்சாங்” என்ற இடத்தில் இடம்பெற்றது. இந்நாள் மக்கள் விடுதலை இராணுவத்தின் ஆரம்பிக்கப்பட்ட நாளாக நினைவு கூரப்படுகிறது.
- 1936 - பெர்லினில் 11வது ஒலிம்பிக் விளையாட்டுகக்ள் ஆரம்பமாயின.
- 1941 - முதலாவது ஜீப் வண்டி உருவாக்கப்பட்டது.
- 1944 - போலந்தில் வார்சா நகரில் நாசிகளுக்கெதிரான கிளர்ச்சி ஆரம்பமானது.
- 1952 - தந்தை பெரியார் தொடருந்து நிலையங்களில் இந்தி அழிப்புப் போராட்டத்தைத் துவக்கி வைத்தார்.
- 1960 - டஹோமி (பெனின்) பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1960 - பாகிஸ்தானின் தலைநகராக இஸ்லாமாபாத் அறிவிக்கப்பட்டது.
- 1964 - பெல்ஜிய கொங்கோவின் பெயர் கொங்கோ குடியரசு எனப் பெயர் மாற்றப்பட்டது.
- 1990 - எஸ்.பி.சி என்றழைக்கப்பட்ட சிங்கப்பூர் ஒளிபரப்புக் கழகம் முதன் முதலாக ஸ்டீரியோ ஒலியில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியது
- 2002 - தமிழ்நாட்டில் பழ. நெடுமாறன் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
- 2006 - இலங்கை, திருகோணமலையில் கடற்படைத்தளம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 14 கடற்படையினர் கொல்லப்பட்டனர்
உனக்கு நான் ! எனக்கு நீ !! இச்சமுதாயத்திற்கு நாம் !! தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் வெற்றி கிடைத்தே தீரும். கனி குலுங்கும் மரத்தின் மீது கல் வீசி கனி பெறுவது போன்ற எளிய எண்ணங்களை விட்டொழித்து மலை உச்சி ஏறி மூலிகை தேடுவது போன்ற உழைப்பே உயர்வைத்தரும். உழைப்போம் ! உயர்வோம் !!
Monday, August 1, 2011
வரலாற்றில் ஆகஸ்ட் 1
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment