Monday, August 1, 2011

பேட்டில் வாஸ்லின் தடவியதாக புகார்: வாகனுக்கு, கவாஸ்கர், கங்குலி கண்டனம்


இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் வி.வி.எஸ்.லட்சுமண் 27 ரன்னில் இருந்தபோது ஆண்டர்சன் பந்து வீசினார். பந்து பேட்டில் உரசியப்படி செல்வதாக இங்கிலாந்து வீரர்கள் கருதினர். அந்த பந்து “கேட்ச்” செய்யப்பட்டது.
இதனால் இங்கிலாந்து வீரர்கள் முறையிட்டனர். “ஹாட் ஸ்பாட்” தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர் அவுட் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. லட்சுமண் தனது பேட்டில் “வாஸ்லின்” (தைல களிம்பு) தடவி இருந்ததால் பந்து உரசியதை “ஹாட் ஸ்பாட்” தொழில்நுட்பம் காட்டவில்லை என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் வாகன் குற்றம் சாட்டினார்.
வாகனின் இந்த குற்றச்சாட்டுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் கவாஸ்கர், கங்குலி கண்டனம் தெரிவித்தனர்.
கவாஸ்கர் கூறும்போது, வாகனின் இந்த குற்றச்சாட்டு பொறுப்பற்றது. இதற்காக அவர் மீது லட்சுமண் நினைத்தால் வழக்கு தொடரலாம் என்றார்.
கங்குலி கூறும்போது, வாகனின் இந்த புகார் முட்டாள்தனமானது. சர்வதேச போட்டிகளில் விளையாடிய ஒருவர் இப்படி கூறி இருப்பது வினோதமானது. இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கூறுவதாக அவரது இலக்காக இருக்கலாம் என்றார்.
இங்கிலாந்து வேகப்பந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் இது தொடர்பாக கூறும்போது, லட்சுமண் பேட்டை நான் பரிசோதித்து பார்த்தேன் அதில் வாஸ்லினோ அல்லது வேறு எந்த திரவமோ பயன்படுத்தப்படவில்லை என்றார்.

No comments:

Post a Comment