உனக்கு நான் ! எனக்கு நீ !! இச்சமுதாயத்திற்கு நாம் !! தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் வெற்றி கிடைத்தே தீரும். கனி குலுங்கும் மரத்தின் மீது கல் வீசி கனி பெறுவது போன்ற எளிய எண்ணங்களை விட்டொழித்து மலை உச்சி ஏறி மூலிகை தேடுவது போன்ற உழைப்பே உயர்வைத்தரும். உழைப்போம் ! உயர்வோம் !!
Friday, August 26, 2011
தமிழக ஆளுநர் கே. ரோசய்யா
தமிழக ஆளுநராக ஆந்திர முன்னாள் முதல்வர் கே.ரோசய்யா (78) நியமிக்கப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் இத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம், குண்டூரைச் சேர்ந்தவர் ரோசய்யா. முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி விமான விபத்தில் பலியானதை அடுத்து 2009 செப்டம்பர் 3-ல் ஆந்திர முதல்வராகப் பதவியேற்றார். 2010 நவம்பர் 24 வரை முதல்வராக இருந்தார். இப்போது தமிழக ஆளுநராக உள்ள சுர்ஜித் சிங் பர்னாலாவின் பதவிக் காலம் ஜூன் 20-ம் தேதி முடிவடைந்துவிட்டது. கேரளம், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், மிசோரத்துக்கு ஆளுநர்கள் நியமனம்: இப்போது ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக உள்ள எம்.ஓ.எச்.பாரூக் (73) கேரள ஆளுநராகவும், ராம்நரேஷ் யாதவ் (83) மத்தியப் பிரதேச ஆளுநராகவும், வி.புருஷோத்தமன் (83) மிசோரம் ஆளுநராகவும், சையத் அகமது ஜார்க்கண்ட் ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கூடுதல் பொறுப்பு: மகாராஷ்டிர மாநில ஆளுநராக உள்ள கே.சங்கரநாராயணன் (79) கோவாவுக்கும் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment