உனக்கு நான் ! எனக்கு நீ !! இச்சமுதாயத்திற்கு நாம் !! தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் வெற்றி கிடைத்தே தீரும். கனி குலுங்கும் மரத்தின் மீது கல் வீசி கனி பெறுவது போன்ற எளிய எண்ணங்களை விட்டொழித்து மலை உச்சி ஏறி மூலிகை தேடுவது போன்ற உழைப்பே உயர்வைத்தரும். உழைப்போம் ! உயர்வோம் !!
Wednesday, August 31, 2011
நல்வாழ்த்துக்களுடன்
கணபதி பக்தர்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
எல்லோரும் எல்லா வளமும் பெற்று நலமோடு வாழ்வோமாக .....
Friday, August 26, 2011
தமிழக ஆளுநர் கே. ரோசய்யா

34,036 ஆசிரியர் நியமனம்: முதல்வர் ஜெயலலிதா

சட்டப்பேரவையில் தாமாக முன்வந்து விதி 110-ன் கீழ் அவர் சமர்ப்பித்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: "அனைவருக்கும் தரமான கல்வியை வழங்கும் நோக்கத்தின் ஒரு அங்கமாக, மேலும் 65 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 710 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் ஆக்கப்படும். தரம் உயர்த்தப்படுவதற்கு ஏற்ப 9,735 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 3,565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், ஆக மொத்தம் 13,300 ஆசிரியர் பணியிடங்கள் ரூ. 315.30 கோடி செலவில் இந்த ஆண்டிலேயே ஏற்படுத்தப்படும்
உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி ஆகியவற்றுக்காக ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 16,549 பகுதி நேர ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்படும். இதனால் இப்பள்ளிகளில் 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர் பயன் அடைவர். இதற்கு, அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 99.29 கோடி செலவு ஏற்படும். முனைவர் முத்துக்குமரன் குழு அளித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு, சமச்சீர் கல்விக்கு மிகவும் இன்றியமையாதது அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் ஆகும். பொது பாடத் திட்டம் மட்டும் சமச்சீர் கல்வி ஆகாது. இதனை நன்கு உணர்ந்த இந்த அரசு, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், இந்தக் கல்வி ஆண்டில், கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறைகள், சுகாதாரமான குடிநீர் வசதி, சுற்றுச்சுவர் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கும். இந்தக் கல்வி ஆண்டில் ரூ. 1082.71 கோடியில் இவை ஏற்படுத்தப்படும். மேற்கண்ட திட்டங்கள் அனைத்தும், மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படுத்தும் அனைவருக்கும் கல்வித் திட்டம் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும். நிலை உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளுக்கு, 3,187 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள், முழுவதும் மாநில அரசின் நிதியில் இருந்து, ரூ. 90.70 கோடி செலவில், இந்தக் கல்வி ஆண்டு முதல் இரண்டு கட்டங்களில் ஏற்படுத்தப்படும். 1985 ஆம் ஆண்டிலிருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இலவசமாக பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.
மாணவர்களிடம் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளை நீக்கும் நல்லெண்ணத்துடன் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் ஒரே மாதிரியான புத்தகப் பைகள், கற்றலுக்குத் தேவையான கணித உபகரணப் பெட்டி - அதாவது ஜியாமெட்ரி பெட்டி - கிராமப்புற மாணவ மாணவியர்களுக்கு இதுவரை கிடைக்கப் பெறாத வண்ணப் பென்சில்கள், புவியியல் வரைபடங்கள் போன்றவை வரும் கல்வியாண்டு முதல் வழங்கப்படும். இதற்காக ஆண்டுக்கு தோராயமாக ரூ. 119.48 கோடி செலவிடப்படும். அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் துப்புரவாளர் மற்றும் இதர பணிகளுக்கான 5,000 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் ஏற்படுத்தப்படும். இதற்கு அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 60 கோடி செலவாகும். புத்தகச் சுமையை குறைக்கும் வகையில் வரும் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் முப்பருவ முறை, அறிமுகப்படுத்தப்படும். முழுக் கல்வியாண்டிற்குரிய பாடப் புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பருவ முடிவிலும் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டுடன் கூடிய தேர்வுகள் நடத்தப்படும். 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்கள் தவறாகக் கையாளக் கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு அவர்களின் புகைப்படத்துடன் கூடிய மறைமுகக் குறியீட்டுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
குழந்தைகளின் சிந்திக்கும் ஆற்றலை மேம்படுத்தும் நோக்கத்துடன், 7 முதல் 17 வயதுள்ள பள்ளி செல்லும் மாணவ, மாணவியருக்கு சதுரங்க விளையாட்டு வரும் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும். இந்த விளையாட்டினால் மாணவ, மாணவியரின் அறிவுத் திறன் வளர்வதுடன், கூர்மையாக சிந்திக்கும் ஆற்றலும் விரிவடையும். கணினி மூலம் கற்பது பள்ளிகளில் இப்போது இன்றியமையாததாக உள்ளது. எல்லா வகுப்புகளிலும் படிக்கும் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் விதத்திலும், தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர் ஆசிரியைகளின் வகுப்புறைக் கற்றல், கற்பித்தல் முறைகளை மேம்படுத்தும் வகையிலும், "பள்ளிகளில் தகவல் மற்றும் தொடர்பியல் சேவை (தமிழ்நாடு)' என்ற புதிய திட்டம் உருவாக்கப்படும். இத்திட்டத்தில் எல்லா வகுப்புகளுக்கும் ஆன பாடப் புத்தகங்களின் உட்பொருளை கணினிமயமாக மாற்றி மையக் கணினி மூலமாக வகுப்பறைகளில் வழங்க வழிவகை செய்யப்படும். எல்லா மாணவ, மாணவியர்களும் பயன் அடையும் பொருட்டு சிறந்த ஆசிரியர்களின் விரிவுரைகளின் தொகுப்புகள் கல்வி செயற்கைக்கோள் வாயிலாக வகுப்பறைகளுக்குச் சென்றடைய இத்திட்டத்தின் வாயிலாக நடவடிக்கைகள் எடுக்கப்படும். பள்ளிக் கல்வித் துறை மூலம் எனது அரசு செயல்படுத்த இருக்கும் இந்தத் திட்டங்களால், மாநிலத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர்கள், உரிய உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய பள்ளிகளில், மிகவும் உகந்த சூழலில், தரமான கல்வி கற்கும் நிலை உருவாகி, உண்மையான சமச்சீர் கல்வி கிடைக்க வழி வகுக்கும்' என்றார் முதல்வர்.
Tuesday, August 9, 2011
சமச்சீர் கல்வியை 10 நாட்களில் அமல்படுத்த வேண்டும்: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

நன்றி - மாலை மலர் நாளிதழ் .
Tuesday, August 2, 2011
ENGINEERING COLLEGES WEBSITE ADDRESS WITH COLLEGE CODE.

1. 901-A.C COLLEGE OF ENGINEERING & TECHNOLOGY, KARAIKUDI
2. 002-A.C. COLLEGE OF TECHNOLOGY,A.C.TECH CAMPUS
Web Site : www.annauniv.edu/act
3. 101-A.M.S COLLEGE OF ENGINEERING
Web Site : www.amsenggcol.ac.in
4. 821-A.R.J COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY
Web Site : www.arjcet.org
5. 801-A.V.C COLLEGE OF ENGINEERING
Web Site : www.avccengg.net
6. 501-ADHIPARASAKTHI COLLEGE OF ENGINEERING
7. 401-ADHIPARASAKTHI ENGINEERING COLLEGE, MELMARUVATHUR
8. 601-ADHIYAMAAN COLLEGE OF ENGINEERING
Web Site : www.adhiyamaan.ac.in
9. 228-ALPHA COLLEGE OF ENGINEERING
Web Site : www.alpha.com
10. 303-ANAND INSTITUTE OF HIGHER TECHNOLOGY
Web Site : www.aiht.ac.in
11. 803-ANJALAI AMMAL MAHALINGAM ENGINEERING COLLEGE
Web Site : www.aamec.com
12. 602-ANNAI MATHAMMAL SHEELA ENGINEERING COLLEGE
Web Site : www.amsheela.org
13. 402-ANNAI TERESA COLLEGE OF ENGINEERING
14. 804-ARASU ENGINEERING COLLEGE
Web Site : www.aec.edu
15. 201-ARIGNAR ANNA INSTITUTE OF SCIENCE AND TECHNOLOGY
Web Site : www.arignaranna.org
16. 951-ARULMIGU KALASALINGAM COLLEGE OF ENGINEERING
Web Site : www.akce.ac.in
17. 503-ARULMIGU MEENAKSHI AMMAN COLLEGE OF ENGINEERING
18. 504-ARUNAI ENGINEERING COLLEGE
Web Site : www.arunai.org
19. 423-ASAN MEMORIAL COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY
Web Site : www.asaneducation.com
20. 404-B.S.ABDUR RAHMAN CRESCENT ENGINEERING COLLEGE
Web Site : www.crescentcollege.org
21. 702-BANNARI AMMAN INSTITUTE OF TECHNOLOGY
Web Site : www.bitsathy.ac.in
22. 102-BHAJARANG ENGINEERING COLLEGE
Web Site : www.bhajarangenggcollege.com
23. 902-BHARATH NIKETAN COLLEGE OF ENGINEERING
24. 519-BHARATHIDASAN ENGINEERING COLLEGE
25. 011-BHARATHIDASAN INSTITUTE OF TECHNOLOGY (Bharathidasan University)
Web Site : www.bdu.ac.in
26. 505-C.ABDUL HAKEEM COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY
Web Site : www.hakeemengineeringcollege.edu
27. 952-C.S.I. INSTITUTE OF TECHNOLOGY
Web Site : www.csiit.ac.in
28. 953-CAPE INSTITUTE OF TECHNOLOGY
29. 703-CHRISTIAN COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY
Web Site : ccetodc@sancharnet.in
30. 704-COIMBATORE INSTITUTE OF ENGINEERING AND INFORMATION TECH.
Web Site : www.kovaikalaimagal.org
31. 007-COIMBATORE INSTITUTE OF TECHNOLOGY
Web Site : citindia.com
32. 001-COLLEGE OF ENGINEERING,GUINDY CAMPUS
Web Site : www.annauniv.edu/ceg
33. 705-CSI COLLEGE OF ENGINEERING
Web Site : www.csice.org
34. 424-DHAANISH AHMED COLLEGE OF ENGINEERING
Web Site : www.dhanishenggcollege.com
35. 405-DHANALAKSHMI COLLEGE OF ENGINEERING
Web Site : www.dce-edu.com
36. 805-DHANALAKSHMI SRINIVASAN ENGINEERING COLLEGE
Web Site : www.dsengg.com
37. 202-DMI COLLEGE OF ENGINEERING
Web Site : www.dmicollege.ac.in
38. 706-DR. MAHALINGAM COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY
Web Site : www.drmcet.org
39. 406-DR. PAULS ENGINEERING COLLEGE
Web Site : www.pec-edu.com
40. 822-DR.NAVALAR NEDUNCHEZHIYAN COLLEGE OF ENGINEERING
Web Site : www.nnce.ac.in
41. 954-Dr. SIVANTHI ADITANAR COLLEGE OF ENGINEERING
Web Site : http://www.drsacoe.org
42. 975-Dr.G.U. POPE COLLEGE OF ENGINEERING
Web Site : http://www.geocities.com/popecollegetech
43. 203-E.V.P ENGINEERING COLLEGE
44. 304-EASWARI ENGINEERING COLLEGE
Web Site : www.easwari.ac.in
45. 806-EDAYATHANGUDY G.S.PILLAY ENGINEERING COLLEGE
Web Site : www. egspcolleges.com
46. 980-EINSTEIN COLLEGE OF ENGINEERING
47. 621-ER.PERUMAL MANIMEKALAI COLLEGE OF ENGINEERING
48. 707-ERODE SENGUNTHAR ENGINEERING COLLEGE
Web Site : www.erode-sengunthar.ac.in
49. 955-FRANCIS XAVIER ENGINEERING COLLEGE
Web Site : www.francisxavier.ac.in
50. 407-G.K.M COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY
Web Site : www.gkmengg-tech.ac.in
51. 507-GANADIPATHY TULSI'S ENGINEERING COLLEGE
Web Site : www.gtec_execellence.com
52. 506-GGR COLLEGE OF ENGINEERING
53. 624-GNANAMANI COLLEGE OF TECHNOLOGY
Web Site :
54. 999-GOJAN SCHOOL OF BUSINESS AND TECHNOLOGY
55. 603-GOVERNMENT COLLEGE OF ENGINEERING, BARGUR
56. 615-GOVT. COLLEGE OF ENGINEERING, SALEM
57. 974-GOVT. COLLEGE OF ENGINEERING,TIRUNELVELI
58. 005-GOVT. COLLEGE OF TECHNOLOGY , COIMBATORE
59. 305-HINDUSTAN COLLEGE OF ENGINEERING
Web Site : www.hindustancollege.com
60. 708-HINDUSTAN COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY
Web Site : www.hindusthan.net
61. 408-I.F.E.T COLLEGE OF ENGINEERING
Web Site : www.ifet.ac.in
62. 605-IDHAYA ENGINEERING COLLEGE FOR WOMEN
Web Site : www.idhayaengg.com
63. 976-INFANT JESUS COLLEGE OF ENGINEERING
Web Site : www.ijcoe.com
64. 709-INSTITUTE OF ROAD AND TRANSPORT TECHNOLOGY
65. 105-J.A INSTITUTE OF ENGINEERING AND TECHNOLOGY
Web Site : jaiet.com
66. 807-J.J. COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY
Web Site : www.jjcet.org
67. 106-JAYA ENGINEERING COLLEGE
Web Site : www.jec.ac.in
68. 606-JAYAM COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY
Web Site : collegejayam.com
69. 956-JAYAMATHA ENGINEERING COLLEGE
Web Site : jayamatha.com
70. 957-JAYARAJ ANNAPACKIAM CSI COLLEGE OF ENGINEERING
Web Site : jacsicollegeofengineering.com
71. 808-JAYARAM COLLEGE OF ENGINEERING & TECHNOLOGY
72 306-JEPPIAAR ENGINEERING COLLEGE
Web Site : www.jeppiaarcollege.org
73 .307-JERUSALEM COLLEGE OF ENGINEERING
Web Site : www.jerusalemengg.ac.in
74. 958-JOE SURESH ENGINEERING COLLEGE
Web Site : http:\\www.rajas.edu
75. 903-K.L.N. COLLEGE OF INFORMATION TECHNOLOGY
Web Site : www.klnce.edu
76. 904-K.L.N. COLLEGE OF ENGINEERING
Web Site : www.klnce.edu
77. 607-K.S. RANGASAMY COLLEGE OF TECHNOLOGY
Web Site : www.ksrct.org
78. 613-K.S.R COLLEGE OF ENGINEERING
Web Site : www.ksrce.ac.in
79. 204-KALSAR COLLEGE OF ENGINEERING
80. 959-KAMARAJ COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY
Web Site : www.kamarajkcet.org
81. 508-KAMBAN ENGINEERING COLLEGE
Web Site : www.kamban.org
82. 208-KANCHI PALLAVAN ENGINEERING COLLEGE
83. 409-KARPAGA VINAYAGA COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY
Web Site : www.kvcengg.com
84 .710-KARPAGAM COLLEGE OF ENGINEERING
Web Site : www.karpagameducation.com
85. 311-KCG COLLEGE OF TECHNOLOGY
Web Site : www.kcgcollege.com
86. 905-KINGS COLLEGE OF ENGINEERING
Web Site : www.kingsindia.net
87. 207-KINGS ENGINEERING COLLEGE
Web Site : www.kingsengineeringcollege.com
88 .906-KODAIKANAL INSTITUTE OF TECHNOLOGY
89. 711-KONGU ENGINEERING COLLEGE
Web Site : www.Kongu.ac.in/www.Kongu.edu
90. 410-KRISHNASAMY COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY
Web Site : www.skret.ac.in
91. 712-KUMARAGURU COLLEGE OF TECHNOLOGY
Web Site : www.kct.ac.in
92. 809-KURINJI COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY
93. 107-LCR COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY
94 .983-LORD JEGANNATH COLLEGE OF ENGG. & TECHNOLOGY
Web Site :
95 .205-LORD VENKATESWARA ENGINEERING COLLEGE
Web Site : www.lvenggcol.com
96.608-M. KUMARASAMY COLLEGE OF ENGINEERING
Web Site : www.mkcekrr.ac.in
97. 810-M.A.M. COLLEGE OF ENGINEERING
Web Site : www.mamcetry.com
98. 811-M.I.E.T ENGINEERING COLLEGE
Web Site : www.miet.edu
99. 923-M.N.S.K. COLLEGE OF ENGINEERING
Web Site : www.mnskce.org
100. 713-M.P NACHIMITHU M.JAGANATHAN ENGINEERING COLLEGE
Web Site : www.mpnmjec.ac.in
101. 206-MAAMALLAN INSTITUTE OF TECHNOLOGY
Web Site : maamallancollege.com
102. 411-MADHA ENGINEERING COLLEGE
Web Site : www.madhagroup.org
103. 004-MADRAS INSTITUTE OF TECHNOLOGY
Web Site : www.annauniv.edu/mit
104 .108-MAGNA COLLEGE OF ENGINEERING
Web Site : www.magnace.org
105. 623-MAHA COLLEGE OF ENGINEERING
Web Site : www.mahacollege.com
106. 714-MAHARAJA ENGINEERING COLLEGE
Web Site : http :\\maharaja institutions.tripod.com
107 .730-MAHARAJA INSTITUTE OF TECHNOLOGY
Web Site :
108. 724-MAHARAJA PRITHVI ENGINEERING COLLEGE
Web Site : http:\maharaja institutions.tripod.com
109. 609-MAHENDRA ENGINEERING COLLEGE
Web Site : www.mahendrainstitutions.com
110. 412-MAILAM ENGINEERING COLLEGE
Web Site : www.mailamengg.com
111. 984-MARTHANDAM COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY
Web Site :
112. 308-MEASI ACADEMY OF ARCHITECTURE
Web Site : http:\\www.measi.org/arch
113. 323-MEENAKSHI COLLEGE OF ENGINEERING, K.K. NAGAR WEST, CHENNAI-78
Web Site : www.mce-edu.com
114. 309-MEENAKSHI SUNDARARAJAN ENGINEERING COLLEGE
115 .960-MEPCO SCHLENK ENGINEERING COLLEGE
Web Site : www.mepcoeng.ac.in
116. 310-MISRIMAL NAVAJEE MUNOTH JAIN ENGINEERING COLLEGE
Web Site : www.mnmjain-enggcollege.com
117. 301-MOHAMED SATHAK A.J COLLEGE OF ENGINEERING
Web Site :
118 .907-MOHAMED SATHAK ENGINEERING COLLEGE
Web Site : www.mohamedsathak-eng.ac.in
119. 812-MOOKAMBIGAI COLLEGE OF ENGINEERING
Web Site : www.moogambigaiCollege.org '
120. 908-MOUNT ZION COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY
Web Site : www.mount-zion.net
121. 610-MUTHAYAMMAL ENGINEERING COLLEGE
Web Site : www.muthayammal.ac.in
122. 715-NANDHA ENGINEERING COLLEGE
Web Site : www.nandhaEngg.org
123. 977-NARAYANA GURU COLLEGE OF ENGINEERING
124. 961-NATIONAL COLLEGE OF ENGINEERING
Web Site : www.nce.ac.in
125. 962-NATIONAL ENGINEERING COLLEGE
Web Site : www.nationalenggcollege.org
126. 729-NEHRU INSTITUTE OF ENGINEERING AND TECHNOLOGY
Web Site :
127. 963-NOORUL ISLAM COLLEGE OF ENGINEERING
Web Site : www.niceindia.com
128. 909-ODAIYAPPA COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY
129. 813-OXFORD ENGINEERING COLLEGE
Web Site : www.oxfordengg.edu,www.oxfordtrichy.com
130. 222-P.B. COLLEGE OF ENGINEERING
131.109-P.M.R INSTITUTE OF TECHNOLOGY
Web Site : www.pmrsoft.com
132 .814-P.R. ENGINEERING COLLEGE
Web Site : www.prcolleges.com
133 .964-P.S.N. COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY
Web Site : www.psncet.net
134 .910-P.S.N.A.COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY
Web Site : www.psnacet.org
135. 965-P.S.R ENGINEERING COLLEGE
Web Site : www.psrengg.ac.in
136. 226-P.T. LEE CHENGALVARAYA NAICKER COLLEGE OF ENGINEERING & TECH
Web Site : www.ptleecncet.net
137. 911-P.T.R. COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY
138. 611-PAAVAI ENGINEERING COLLEGE
Web Site : www.paavai.org
139. 209-PALLAVAN COLLEGE OF ENGINEERING
Web Site : www.pallavan.net
140. 912-PANDIAN SARASWATHI YADAV ENGINEERING COLLEGE
141. 210-PANIMALAR ENGINEERING COLLEGE
Web Site: www.panaimalar.ac.in
142. 716-PARK COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY
Web Site : www.pcet.ac.in
143. 815-PAVENDAR BHARATHIDASAN COLLEGE OF ENGINEERING & TECHNOLOGY
Web Site : www.pabcet.com
144 .816-PERIYAR MANIAMMAI COLLEGE OF TECHNOLOGY FOR WOMEN
Web Site : www.pmctech.edu
145. 966-PET ENGINEERING COLLEGE
Web Site : www. petengineeringcollege.com
146. 612-PGP COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY
Web Site : www.pgpedu.ac.in
147. 981-PONJESLY COLLEGE OF ENGINEERING
Web Site : www. ponjesly.com
148 .824-PONNAIYAH RAMAJAYAM COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY
Web Site :
149. 110-PRATHYUSHA INSTITUTE OF TECHNOLOGY & MANAGEMENT
Web Site : www.prathyushaengineeringcollege.com
150. 414-PRINCE SHRI VENKATESHWARA PADMAVATHY ENGINEERING COLLEGE
151. 510-PRIYADARSHINI ENGINEERING COLLEGE
152. 006-PSG COLLEGE OF TECHNOLOGY Web Site : www.psgtech.edu
153. 112-R.M.D. ENGINEERING COLLEGE
154. 113-R.M.K. ENGINEERING COLLEGE
Web Site : http://education.vsnl.com/rmkec
155. 913-R.V.S COLLEGE OF ENGINEERING
Web Site : www.rvseng.ac.in
156. 914-RAJA COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY
157 .-RAJA RAJESWARI ENGINEERING COLLEGE
158. 211-RAJALAKSHMI ENGINEERING COLLEGE
Web Site : www.rajalakshmi.com
159. 212-RAJIV GANDHI COLLEGE OF ENGINEERING
Web Site : www.rgce.org
160. 511-RANIPETTAI ENGINEERING COLLEGE
161. 817-ROEVER ENGINEERING COLLEGE
Web Site : www.roeverenggcol.com
162. 322-ROYAL COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY
163. 114-S.A. ENGINEERING COLLEGE
Web Site : www.saec.ac.in
164. 512-S.K.P ENGINEERING COLLEGE
Web Site : www.skpengineeringcollege.com
165. 213-S.K.R. ENGINEERING COLLEGE
Web Site : www.skrenggcollege.ac.in
166. 225-S.M.KADER ENGINEERING COLLEGE
Web Site : dmiinstitution.net
167. 726-S.N.S. COLLEGE OF TECHNOLOGY
Web Site : http://www.snsgroups.com
168. 614-S.S.M. COLLEGE OF ENGINEERING
Web Site : www.ssmcollege.com
169. 967-S.VEERASAMY CHETTIAR COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY
Web Site : www.svccollege.com
170. 915-SACS - M.A.V.M.M. ENGINEERING COLLEGE
Web Site : www.sacsmavmmengg.com
171. 416-SAKTHI ENGINEERING COLLEGE
172. 214-SAKTHI MARIAMMAN ENGINNERING COLLEGE
Web Site : www.smecollege.edu
173 .124-SAMS COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY
Web Site : www.samsindia.com
174. 616-SAPTHAGIRI COLLEGE OF ENGINEERING
175. 819-SARANATHAN COLLEGE OF ENGINEERING
Web Site : www.saranathan.ac.in
176. 515-SARASWATHI VELU COLLEGE OF ENGINEERING
177. 968-SARDAR RAJA COLLEGE OF ENGINEERING
Web Site : www.srce.ws
178. 717-SASURIE COLLEGE OF ENGINEERING
179. 216-SAVEETHA ENGINNERING COLLEGE
Web Site : www.saveetha.in
180. 969-SCAD COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY
Web Site : www.scadengineering.ac.in
181. 003-SCHOOL OF ARCHITECTURE AND PLANNING,A.C.TECH CAMPUS
Web Site : www.annauniv.edu/sap
182. 916-SEETHAI AMMAL ENGINEERING COLLEGE
183. 627-SELVAM COLLEGE OF TECHNOLOGY
Web Site : www.selvaminstitutions.com
184. 617-SENGUNTHAR ENGINEERING COLLEGE
Web Site : www.scteng.org
185. 917-SETHU INSTITUTE OF TECHNOLOGY
Web Site : www.sethu.ac.in
186. 918-SHANMUGANATHAN ENGINEERING COLLEGE
Web Site : www.Shanmuganathanengg.com
187. 313-SHREE MOTILAL KANHAIYALAL FOMRA INSTITUTE OF TECHNOLOGY
Web Site : www.smkfomra.net
188. 417-SHRI ANDAL ALAGAR COLLEGE OF ENGINEERING
Web Site : www.saace.net
189. 802-SHRI ANGALAMMAN COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY
Web Site : www.saacet.net
190. 618-SONA COLLEGE OF TECHNOLOGY
Web Site : www.sonatech.ac.in
191. 217-SREE SASTHA INSTITUTE OF ENGINEERING AND TECHNOLOGY
Web Site : www.sasthaenggcollege.edu
192. 970-SREE SOWDAMBIKA COLLEGE OF ENGINEERING
193. 513-SRI BALAJI CHOCKALINGAM ENGINEERING COLLEGE
194. 425-SRI JAYARAM ENGINEERING COLLEGE
Web Site : www.srijayaramengg.com
195. 718-SRI KRISHNA COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY
Web Site : www.skcet.ac.in
196. 427-SRI KRISHNA ENGINNERING COLLEGE
197. 418-SRI LAKSHMI AMMAL ENGINEERING COLLEGE
198. 218-SRI MUTHUKUMARAN INSTITUTE OF TECHNOLOGY
Web Site : www.smitcollege.com
199. 514-SRI NANDHANAM COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY
Web Site : www.nandhanam.com
200. 220-SRI PADMAVATHI COLLEGE OF ENGINEERING
201 115-SRI RAM ENGINEERING COLLEGE
Web Site : www.sriramtrust.org
202. 719-SRI RAMAKRISHNA ENGINEERING COLLEGE
Web Site : www.srec.ac.in
203. 725-SRI RAMAKRISHNA INSTITUTE OF TECHNOLOGY
Web Site : www.srec.ac.in
204 .426-SRI RAMANUJAR ENGINEERING COLLEGE
205 .419-SRI SAIRAM ENGINEERING COLLEGE
Web Site : www.srisairamengg.com
206 .727-SRI SHAKTHI INSTITUTE OF ENGG. & TECH
Web Site :
207. 315-SRI SIVASUBRAMANIYA NADAR COLLEGE OF ENGINEERING
Web Site : www.ssnce.ac.in
208. 720-SRI SUBRAMANYA COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY
Web Site : www.srisubramanya.org
209 .219-SRI VENKATESWARA COLLEGE OF ENGINEERING
Web Site : www.svce.ac.in '
210. 116-SRI VENKATESWARA COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY
Web Site : www.sriventech.ac.in
211. 121-SRI VENKATESWARA INSTITUTE OF SCIENCE AND TECHNOLOGY
212 .221-SRINIVASA INSTITUTE OF ENGINEERING AND TECHNOLOGY
Web Site : siet.ac.in
213. 823-SRINIVASAN ENGINEERING COLLEGE
Web Site :
214. 320-SRR ENGINEERING COLLEGE
Web Site : www.Srrengg.org
215. 919-ST. MICHAEL COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY
Web Site : www.smcet.com
216. 971-ST. XAVIER'S CATHOLIC COLLEGE OF ENGINEERING
Web Site : www.xaviersengg.com
217. 317-ST.JOSEPH'S COLLEGE OF ENGINEERING
Web Site : www.stjosephs.ac.in
218. 117-ST.PETER'S ENGINEERING COLLEGE
Web Site : www.spec.ac.in
219. 920-SUDHARSAN ENGINEERING COLLEGE
Web Site : www.sudharsanengg.com
220. 972-SUN COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY
Web Site : www. sunedu.ac.in
221. 921-SYED AMMAL ENGINEERING COLLEGE
Web Site : www.syedengg.ac.in
222 .318-T.J. INSTITUTE OF TECHNOLOGY
Web Site : www.thangavelucolleges.com
223 .420-TAGORE ENGINEERING COLLEGE
Web Site : www.tagoreengineering.ac.in
224. 721-TAMILNADU COLLEGE OF ENGINEERING
Web Site : www.tcecbe.org
225 .728-TAMILNADU SCHOOL OF ARCHITECTURE
Web Site :
226. 319-THANGAVELU ENGINEERING COLLEGE
Web Site : http:www.thangavelucolleges.com
227 .516-THANTHAI PERIYAR GOVT. INSTITUTE OF TECHNOLOGY
228 .625-THE KAVERY ENGINEERING COLLEGE
Web Site :
229. 973-THE RAJAAS ENGINEERING COLLEGE
Web Site : http:\\www.rajas.edu
230. 008-THIAGARAJAR COLLEGE OF ENGINEERING
Web Site : www.tce.edu
231. 517-THIRUMALAI ENGINEERING COLLEGE
Web Site : www.thirumalaiengg.com
232 .518-THIRUVALLUVAR COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY
Web Site : www.thiruvalluvar.edu
233. 820-TRICHY ENGINEERING COLLEGE
Web Site : www.trichyengineeringcollege.com
234. 978-UDAYA SCHOOL OF ENGINEERING
Web Site : www.udayaengg@sancharnet.in
235. 996-V.K.K.VIJAYAN ENGINEERING COLLEGE
Web Site :
236 .722-V.L.B JANAKIAMMAL COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY
Web Site : www.vlbjcet.ac.in
237. 979-V.P MUTHAIAH PILLAI MEENAKSHI AMMAL ENGG. COLLEGE FOR WOMEN
Web Site : www.vpmmecfw.org
238. 421-V.R.S COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY
Web Site : www.vrs.edu.
239 .622-V.S.B ENGINEERING COLLEGE
Web Site : www.vsbenggcollege.com
240 .422-VALLIAMMAI ENGINEERING COLLEGE
Web Site : www.srmuniv.ac.in
241. 118-VEL SRI RANGARAJAN SAKUNTHALA COLLEGE OF MULTIMEDIA
Web Site : www.veltech.org
242. 122-VEL SRI RANGARAJAN SAKUNTHALA HI-TECH ENGINEERING COLLEGE
Web Site : www.veltech.org
243. 119-VEL TECH
Web Site : www.veltech.org
244. 316-VEL'S SRINIVASA COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY
Web Site : www.velsrinivasa.com
245 .723-VELALAR COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY
Web Site : www.vellalar.com
246 .120-VELAMMAL ENGINEERING COLLEGE
Web Site : www.velammal.org
247. 922-VICKRAM COLLEGE OF ENGINEERING
Web Site : www.vickramce.org
248. 982-VINS CHRISTIAN COLLEGE OF ENGINEERING
Web Site : www.vinsengineeringcollege.com
249 .626-VIVEKANANDHA INSTITUTE OF ENGINEERING AND TECHNOLOGY FOR WOMEN
Web Site : www.vietw.org
250. 620-VIVEKANANDHAA COLLEGE OF ENGINEERING FOR WOMEN
Web Site : www.Vivekanandha.org
Read more: http://wiki.answers.com/
Monday, August 1, 2011
பேட்டில் வாஸ்லின் தடவியதாக புகார்: வாகனுக்கு, கவாஸ்கர், கங்குலி கண்டனம்

வரலாற்றில் ஆகஸ்ட் 1
- உலக சாரணர் நாள்
- அங்கோலா - இராணுவ நாள்
- பெனின் - தேசிய நாள் (1960)
- கொங்கோ - பெற்றோர் நாள்
- லெபனான் - இராணுவ நாள்
- சுவிட்சர்லாந்து - தேசிய நாள் (1291)
- தாய்ப்பால் நாள்
- தமிழ் ஆட்சிமொழியாக்கப்பட்ட நாள்
- கிமு 33 - ஒக்டேவியன் எகிப்தின் அலெக்சாண்டிரியா ந்கரைக் கைப்பற்றி ரோமக் குடியரசின் கீழ் கொண்டு வந்தான்.
- 1291 - சுவிஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
- 1498 - கொலம்பஸ் வெனிசுவேலாவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆனார்.
- 1619 - முதலாவது ஆபிரிக்க அடிமைகள் வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுன் நகரை அடைந்தனர்.
- 1774 - ஆக்சிஜன் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1793 - உலகிலேயே மெட்ரிக் அளவு முறையை முதன்முதலாக அறிமுகப்படுத்திய நாடு பிரான்ஸ்
- 1831 - புதிய லண்டன் பாலம் திறந்து வைக்கப்பட்டது.
- 1902 - பனாமா கால்வாயுக்கான உரிமையை ஐக்கிய அமெரிக்கா பிரான்சிடம் இருந்து வாங்கியது.
- 1907 - சாரணிய இயக்கத்தின் முதல் பாசறையை பேடன் பவல் இங்கிலாந்தில் பிறௌன்சி தீவில் ஆரம்பித்து வைத்தார். இது ஆகஸ்ட் 9 வரை நீடித்தது.
- 1914 - முதலாம் உலகப் போர்: ஜெர்மனி ரஷ்யாவுடன் போர் தொடுத்தது.
- 1914 - இலங்கையில் மன்னாருக்கும் மதவாச்சிக்கும் இடையில் பகல் நேர தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.
- 1927 - சீன உள்நாட்டுப் போரின் முக்கிய சமர் கொமிந்தாங் படைகளுக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையில் ”நான்சாங்” என்ற இடத்தில் இடம்பெற்றது. இந்நாள் மக்கள் விடுதலை இராணுவத்தின் ஆரம்பிக்கப்பட்ட நாளாக நினைவு கூரப்படுகிறது.
- 1936 - பெர்லினில் 11வது ஒலிம்பிக் விளையாட்டுகக்ள் ஆரம்பமாயின.
- 1941 - முதலாவது ஜீப் வண்டி உருவாக்கப்பட்டது.
- 1944 - போலந்தில் வார்சா நகரில் நாசிகளுக்கெதிரான கிளர்ச்சி ஆரம்பமானது.
- 1952 - தந்தை பெரியார் தொடருந்து நிலையங்களில் இந்தி அழிப்புப் போராட்டத்தைத் துவக்கி வைத்தார்.
- 1960 - டஹோமி (பெனின்) பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1960 - பாகிஸ்தானின் தலைநகராக இஸ்லாமாபாத் அறிவிக்கப்பட்டது.
- 1964 - பெல்ஜிய கொங்கோவின் பெயர் கொங்கோ குடியரசு எனப் பெயர் மாற்றப்பட்டது.
- 1990 - எஸ்.பி.சி என்றழைக்கப்பட்ட சிங்கப்பூர் ஒளிபரப்புக் கழகம் முதன் முதலாக ஸ்டீரியோ ஒலியில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியது
- 2002 - தமிழ்நாட்டில் பழ. நெடுமாறன் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
- 2006 - இலங்கை, திருகோணமலையில் கடற்படைத்தளம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 14 கடற்படையினர் கொல்லப்பட்டனர்
Friday, July 1, 2011
Medical Courses In India
Bachelor of Surgery)
DURATION: 4.5 years
COURSE: B.D.S (Bachelor of Dental Surgery)
DURATION: 4 years
COURSE: B.Pharma (Bachelor of Pharmacy)
DURATION: 4 years
COURSE: B.Sc Nursing
DURATION: 3 years
COURSE: B.P.T (Physiotherapy)
DURATION: 3 years
COURSE: B.O.T (Occupational Therapy)
DURATION: 3 years
COURSE: B.H.M.S(Homeopathy Medicine)
DURATION: 3 years
COURSE: B.U.M.S(Unani Medicine)
DURATION: 5 years
COURSE: Optometry
DURATION: 2 years
COURSE: Ophthalmic Assistant Course
DURATION: 2 years
COURSE: Histopathalogical Lab Technology
DURATION: 1 year
: B.A.M.S(Ayurvedic, Siddha Medicine)
DURATION: 4 years
COURSE: D. Pharma(Ayurvedic, Siddha Medicine)
DURATION: 1 year
COURSE: Lab Technicians
DURATION: 1 year
COURSE: Sanitary Inspector Course
DURATION: 1 year
COURSE: General Nursing Training Course
DURATION: 3.5 years
COURSE: Orthopedist Course
DURATION: 2 years
COURSE: Dental Mechanic Course
DURATION: 2 years
COURSE: Dental Hygienist Course
DURATION: 2 years
COURSE: Bachelor of Occupationaltherapy
DURATION: 3 years
COURSE: Radiological Assistant
DURATION: 1 year
COURSE: Radiography [Diagnosis & Therapy]
DURATION: 2 years
COURSE: Nuclear Medicine Technology
DURATION: 2 years
Thursday, June 30, 2011
தமிழ் வலைப்பதிவு திரட்டிகள்
http://tamil10.com
2.இன்ட்லி
http://ta.indli.com
3.போகி
http://bogy.in
4.ந்யூஸ் பானை
http://newspaanai.com
5.இ தமிழ்
http://etamil.net
6.தமிழ் பெஸ்ட்
http://thamilbest.com
7.உலவு
http://ulavu.com
8.தமிழ் டெய்லி
http://tamildaily.com
9.தமிழர்கள் ப்ளாக்ஸ்
http://tamilarkalblogs.com
10.தமிழ்வெளி
http://tamilveli.com
11.வலைப்பூக்கள்
http://valaipookkal.com
12.பகலவன்
http://periyarl.com
13.வலையகம்
http://valaiyakam.com
14.நம்குரல்
http://namkural.com
15.தமிழ்மணம்
http://tamilmanam.com
16.நறுமுகை
http://narumugai.com/directory/index.php
17.தலைவன்
http://thalaivan.com
18.யாழ்தேவி
http://yaaldevi.com
தமிழர்களை ஏமாற்ற வேண்டாம் பிரதமருக்கு பழ. நெடுமாறன் எச்சரிக்கை

இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்று இலங்கை அரசை இந்தியா நிர்பந்தித்து வருவதாக பிரதமர் கூறியிருப்பது ஏமாற்றுப் பேச்சு என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
தமிழர்கள் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்று ஒருபோதும் தங்களை இந்தியா நிர்பந்திக்கவில்லை என்று இலங்கை அதிபர் ராஜபக்ச கூறி, அது ஊடகங்களிலும் வெளிவந்த நிலையில், யார் கூறுவது சரி என்று நெடுமாறன் வினா எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
"இலங்கைத் தமிழர்களின் குறைகள் நியாயமானவை. அவைத் தீர்க்கப்பட வேண்டும். அங்கு வாழும் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என இந்திய அரசு இலங்கை அரசை நிர்பந்தித்து வருகிறது என பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருக்கிறார்.
ஆனால் நேற்றைய தினம் "இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணுமாறு இந்திய நிர்பந்திக்கவில்லை என்று இலங்கை அதிபர் மகிந்தா இராசபக்சே தெரிவித்திருக்கிறார். யார் கூறுவது உண்மை? என்ற ஐயம் எழுந்திருக்கிறது. இராசபக்சே தெரிவித்திருக்கிற கருத்தை இந்தியப் பிரதமர் மறுத்திருக்க வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.
இலங்கையில் போர் உச்சக் கட்டமாக நடைபெற்ற வேளையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக மக்கள் போராடிய போது போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என இலங்கை அரசுக்குக் கூறியிருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். ஆனால் இராசபக்சே அதை மறுத்தார். இந்தியா ஒருபோதும் செய்யும்படி கேட்கவில்லை என பகிரங்கமாகக் கூறினார்.
அதைப் போல இலங்கைக்கு இராணுவ ரீதியிலான உதவி எதையும் இந்தியா செய்யவில்லை என பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். ஆனால் இந்தியா செய்த உதவியால்தான் தாங்கள் வெற்றிபெற முடிந்தது என இராசபச்சே போர் முடிந்தபிறகு பகிரங்கமாகக் கூறினார்.
இவ்வாறு தங்களைத் தொடர்ந்து ஏமாற்றுவதற்காக பிரதமர் மன்மோகன் சிங் நாடகமாடுவதாக தமிழக மக்கள் கருதுகிறார்கள். எனவே தான் கடந்த சட்ட மன்றத் தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் பாடம் கற்பித்தார்கள். இன்னமும் தொடர்ந்து தமிழக மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபடவேண்டாம் என பிரதமர் மன்மோகன் சிங்கை எச்சரிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
Tuesday, June 28, 2011
சமச்சீர் கல்வி

என்றாலும், தனியார் மயம், உலக மயத்தின் தாக்குதல் இங்கே தொடங்கியபின் கல்வியைத் தனி யாருக்கு ஒதுக்கிவிட்டு, அவர்கள் அதை விற்பனை செய்ததை எல்லா அரசுகளும் வேடிக்கை பார்த்தன. அதன்விளைவுதான் நாடெங்கும் புற்றீசல் போல் பெருகிவிட்ட பணம் பறிக்கும் தனியார் மற்றும் மெட்ரி குலேசன் உள்ளிட்ட பள்ளிகளாகும். இக்கொள்கை யைத் தடுத்துநிறுத்தவும் அடிப்படைக் கல்வியிலேயே பல்வேறு பாடத்திட்டங்கள் இருப்பதை ஒழித்துகட்டவும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட பலரும் குரல் எழுப்பி வந்தனர்.
இதனை ஏற்று, கடந்த முறை ஆட்சியில் இருந்த கலைஞர் அரசு சமச்சீர் கல்வி முறைபற்றி ஆய்வு செய்ய பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ச.முத்துக்குமரன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.
அந்தக்குழு அளித்த பரிந்துரைகளை ஏற்றுச் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த கலைஞர் அரசு புதிய சட்டம் ஒன்றை இயற்றியது. அச்சட்டத்தின்படி 2010-2011ஆம் கல்வியாண்டில் 1 முதல் 6 வகுப்பு வரையி லான புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2011-2012-ஆம் கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு வரையிலான இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த, கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் முன் மாணவர்களுக்கு வழங்கும் நோக்கில் ரூ.200 கோடிச் செலவில் 9 கோடிப் பாட நூல்கள் அச்சடிக்கப்பட்டு விட்டன.
இந்நிலையில் செயலலிதா தலைமையில் அமைந்த புதிய அரசு கடந்த 22.5.2011இல் கூட்டிய தனது முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழக அரசின் சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைப்பதென முடிவு செய்துள்ளது. அதுகுறித்துத் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் ‘இப்போது நடைமுறையில் உள்ள சமச்சீர் கல்வி, மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில் அமையவில்லை. இதற்கென உருவாக்கப் பட்டுள்ள பாடத் திட்டம் ஒட்டுமொத்த கல்வித் தரத் தையும் உயர்த்திட வழிவகை செய்யாது. எனவே கல்வித் தரத்தை மிகச் செம்மையாக நடைமுறைப் படுத்த மீண்டும் வேறொரு குழுவை அமைத்து ஆராய வேண்டும். அதுவரை பழைய பாடநூல் களையே இந்தக் கல்வி ஆண்டிற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தேவையான அளவில் பாடநூல்களை அச்சிடப் போதுமான கால நேரம் இல்லாமையால் தமிழ் நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் சூன் 15ஆம் தேதி திறக்கப்படும்’ என்று கூறியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த சியாம் சுந்தர் என்னும் வழக்குரைஞர் தமிழக அரசின் சமச்சீர் கல்வி முறையை நிறுத்தி வைக்கும் இந்த முடிவை எதிர்த் தும், தொடர்ந்து சமச்சீர் கல்வியைத் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.
நீதிபதிகள் எஸ். இராஜேஸ்வரன், கே.பி.கே. வாசுகி ஆகியோரைக் கொண்ட அமர்வின்முன் இந்த வழக்குத் தொடர்பாக விடையளித்த தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் நவநீத கிருட்டிணன் “பல் வேறு பாடத்திட்ட முறைகளில் இருந்து தங்களுக்கான சிறந்த பாடத்திட்டத்தைத் தேர்வு செய்து கொள்வ தற்குத் தமக்கு வாய்ப்பு இருக்க வேண்டுமென பெற் றோர்களும் மாணவர்களும் விரும்புகின்றனர். இந் நிலையில் ஒரு மாணவன் குறிப்பிட்ட ஒரு பாடத் திட்ட முறையில்தான் படிக்க வேண்டும் என்பதை அரசால் கட்டாயப்படுத்திச் செய்ய முடியாது.
தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சமச்சீர் கல்வி முறை மாணவர்களின் எதிர்காலத்தைக் கெடுக்கக் கூடியது. எனவே மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலனைக் கருத்தில் கொண்டே சமச்சீர் கல்வி முறையை நிறுத்தி வைப்பது என்ற கொள்கை முடிவை அமைச்சரவை எடுத்துள்ளது” என்று கூறியுள்ளார்.
‘மாணவர்களுக்குப் பயன்தரும் நல்ல கல்வித் திட்டம் எது என்பதையும், எந்த மொழி பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்பதையும் முடிவு செய்கிற அதிகாரம் மாநில அரசுக்கே உண்டு. இவற்றைப் பெற்றோர்கள் தீர்மானிக்கக் கூடாது’ என்ற அடிப்படை புரிதல்கூட இல்லாமல் அரசு வழக்குரைஞர் வாதாடியுள்ளார்.
இந்நிலையில் சமச்சீர் கல்வி முறையைத் தொடர்ந்து அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலுச் சேர்க்கும் வண்ணம் பண்ருட்டியைச் சேர்ந்த எம். சேசாசலம், சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை எஸ்.டி. மனோன்மணி ஆகியோர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
அவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வாதாடிய வழக்குரைஞர் பி. வில்சன், தற்போது நடைமுறை யில் உள்ள சமச்சீர்கல்வி முறை தமிழகச் சட்டப் பேரவை நிறைவேற்றிய ஒரு சட்டத்தின் மூலம் அமல்படுத்தப்படுவதாகும். இதனை அமைச்சரவைக் கூட்டம் ஒன்றின் கொள்கை முடிவால் நிறுத்தி வைக்க முடியுமா?
மேலும் தமிழக அரசின் சமச்சீர் கல்விச் சட்டத்தை எதிர்த்து அப்போதே பல வழக்குகள் தாக்கல் செய்யப் பட்டன. என்றாலும் தமிழக அரசின் இந்தச் சட்டத்தை உறுதிப்படுத்தி உயர்நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கியுள்ளது. உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை அமைச்சரவையின் ஒரு கொள்கை முடிவால் தடுத்துவிட முடியுமா? மேலும் தமிழக அரசின் இந்தச் சமச்சீர் கல்விச் சட்டத்தை உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. முந்தைய அரசு எடுக்கும் ஒரு கொள்கை முடிவை, அடுத்துப் பொறுப்புக்கு வரும் அரசு மாற்று வது நல்லதல்ல என்றும் உச்சநீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது’ என-தன் வாதங்களைத் முன் வைத்தார்.
உயர்நீதிமன்ற அமர்வின் நீதிபதிகளும் ‘சமச்சீர் கல்விச் சட்டத்தின் நோக்கம் மிகத் தெளிவானது. சிறந்த கல்வியாளர்களைக் கொண்ட ஆய்வுக்குழு, விரிவாக ஆய்வு செய்த பிறகே, சமச்சீர் கல்வி முறையை அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது. இதனை யாரும் எளிதில் புறக்கணித்துவிட முடியாது. மேலும் முந்தைய அரசின் சார்பில் இதற்கென ஒரு பெருந் தொகை செலவிடப்பட்டுள்ளது. மேலும் ஒரு பெருந் தொகையை மீண்டும் செலவிடுவது தேவையானது தானா? இவை பற்றியெல்லாம் ஆய்வு செய்து அரசு வழக்குரைஞர் தனது எண்ணத்தை அரசுக்குச் சொல்ல வேண்டும்’ என்று கருத்துரைத்துள்ளனர். இவ்வழக்கு சூன் 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய தமிழக முதலமைச்சர், முன்பிருந்த முதல்வரைப் போல குழப்பவாதியல்ல. ‘வெட்டு ஒன்று துண்டு இரண்டு’ என்ற தன்மையில் எந்தக் கருத்தையும் துணிந்து சொல்லக் கூடியவர். வெளிப்படையாகவே அவர் தமிழ்வழிக் கல்விக்கு எதிரானவர். 2001-2006இல் இவர் ஆட்சியிலிருந்தபோது வெளிப்படையாக ஆங்கிலமே பயிற்சி மொழி எனத் தீர்ப்புப் பெற்றவர்.
கருணாநிதி முதல்வராய் இருந்த நேரத்தில் 1 முதல் 5 வகுப்பு வரை தமிழை ஒரு பாடமொழியாய் அறிமுகப்படுத்தி ஓர் அரசாணை இயற்றினார். இஃது மிகமிகச் சாதாரணமான ஒன்று. தமிழ்நாட்டின் கல்விக் கொள்ளையர்கள், பார்ப்பனிய மேல்சாதிச் சிந்தனைக்கு ஆட்பட்டுவிட்ட மலட்டு மண்டையர் தவிர மற்றெல்லாரும், எல்லாக் கட்சித் தலைவர்களும் இந்த அரசாணையை வரவேற்றனர். ஆனால் அன்று இந்த அரசாணையை எதிர்த்த ஒரே அரசியல் கட்சித் தலைவர் செயலலிதா தான்.
தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளைப் பெற்று தமிழ்நாட்டு முதலமைச்சர் ஆகும் இந்த அம்மையார் தமிழ்நாட்டின் தலைமை செயலகத்தில் இருந்தாலும் அல்லது தனது வீட்டில் இருந்தாலும் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பெரும்பாலும் தமிழில் பேசமாட்டார். தமிழ்நாட்டுச் சட்டமன்றத்தில் தமிழ்நாட்டு ஆளுநர் நிகழ்த்தும் உரையைத் தமிழில் மொழி பெயர்த்துப் படிக்க நேரம் ஒதுக்கமாட்டார். தொண்டர்கள் தம் குழந்தைகளுக்குப் பெயர் சூட்ட வேண்டினால் தமிழ்ப் பெயர்கள் வைக்கமாட்டார். இப்படிப் பல செய்திகளில் இவர் தமிழ் மரபோடு ஒட்டவேமாட்டார்.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு நோக்கும் போது, இவர் தமிழக அரசின் சமச்சீர் கல்வித் திட்டத் தை நிறுத்தி வைத்துள்ளது எவ்வகையிலும் வியப்பிற் குரியதன்று. “நிறுத்தி வைப்பு” என்பதே குழி தோண்டிப் புதைப்பதற்கான முன்னோட்டந்தான்.
சமச்சீர் கல்வி முறையின் அமலை நிறுத்தி வைக்க முடிவு செய்த அமைச்சரவை, கல்வித் தரத்தை உயர்த்த புதியதோர் வல்லுநர் குழுவை அமைக்கப் போவதாக முடிவு செய்துள்ளதாகக் கூறுகிறது.
தமிழக அரசு, அரசாணை நிலை எண்.159 நாள் 8.9.2006இன்படி அமைக்கப்பட்ட சமச்சீர் கல்வி முறை குறித்த ஆய்வுக் குழுவில் கீழ்க்காணும் உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர்.
1. டாக்டர் ச. முத்துக்குமரன் தலைவர்
முன்னாள் துணைவேந்தர்
பாரதிதாசன் பல்கலைக்கழகம்
2. டி. கிருஸ்துதாஸ் உறுப்பினர்
தலைவர், தமிழ்நாடு நர்சரி,
பிரைமரி மெட்ரிகுலேசன் மற்றும்
உயர்நிலைப் பள்ளிகளின்
மேலாண்மைக் குழு
3. சகோதரர். ஜார்ஜ் உறுப்பினர்
மான்ட் போர்டு பள்ளி, ஏற்காடு
4. எம்.எஸ். காஜா முகைதீன் உறுப்பினர்
தலைமையாசிரியர், நிஜாம் ஓரியண்டல்
மேனிலைப்பள்ளி, புதுக்கோட்டை
5. டாக்டர் எஸ்.எஸ்.இராசகோபாலன் உறுப்பினர்
தலைமையாசிரியர் (ஓய்வு),
சர்வ ஜன மேனிலைப்பள்ளி, கோவை
6. ஜெ. உமாமகேசுவரி அலுவல்வழி
தொடக்கக் கல்வி இயக்குநர் உறுப்பினர்
7. தெ. செகந்நாதன் அலுவல்வழி
மெட்ரிகுலேசன் பள்ளி இயக்குநர் உறுப்பினர்
8. வசந்தி ஜீவானந்தம் அலுவல்வழி
அரசுத் தேர்வுகள் இயக்குநர் உறுப்பினர்
9. இரா. கண்ணன் அலுவல்வழி
பள்ளிக் கல்வி இயக்குநர் உறுப்பினர்-
செயலர் மற்றும்
நடத்துபவர்
இக்குழு தமிழகம் முழுவதும் பயணம் மேற் கொண்டது. 1. நர்சரி கல்வி முறை, 2. மெட்ரிகுலேசன் கல்வி முறை 3. ஆங்கிலோ இந்தியன் கல்வி முறை, 4. ஓரியண்டல் கல்வி முறை, 5. மாநில வாரியக் கல்வி முறை ஆகிய அனைத்துக் கல்வியிலும் கற்பிக்கப்படும் பள்ளிகளைப் பார்வையிட்டது.
தன்னுடைய குழுவின் முடிவு ஒருபக்கச் சார்பாக இருந்துவிடக் கூடாது என்கிற அக்கறையோடுதான் தமிழ்வழிக் கல்வியைக் கேலி பேசும் அரைவேக் காடுகளையும் காசு பண்ணுவதையே ‘அறத்தொண் டாக’ ஏற்றுக் ‘கல்வி வள்ளல்’களாக உலாவரும் போலிகளையும் குழு உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொண்டது.
“பல்வேறு பாடத்திட்ட முறைகளில் இருந்து சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுப்பது பெற்றோர் மாணவர் விருப்பம். ஒரு பாடத்திட்ட முறையில்தான் படிக்க வேண்டுமென எந்தவொரு மாணவனையும் அரசு கட்டாயப்படுத்த முடியாது. இப்போதைய சமச்சீர் கல்வி முறை மாணவர்களின் எதிர்காலத்தையே பாதிக்கக் கூடியது” என்றெல்லாம் இன்று அரசு வழக்குரைஞர் நீதிமன்றத்தில் கருத்துக் கூறியுள்ளார். தனியார்ப் பள்ளி பணமுதலைகள் காலங்காலமாக அழுது புலம்பும் அதே ஒப்பாரிப் பாட்டை அரசு வழக்குரைஞரும் பாடி யிருக்கிறார்.
சமச்சீர் கல்வியின் பாடத் திட்டங்கள் சாரமற்ற சக்கைகள். தரமில்லாதவை. தேசியத் தரத்துக்கு உயர்த்தாமல் நம் குழந்தைகளின் எதிர்காலத்தை வீணடிப்பவை என்கிற போலித்தனமான வாதத்தை முத்துக்குமரன் குழு அறிவியல் அடிப்படையில் ஆய்வு செய்து தோலுரித்துள்ளது.
தொடக்கக் கல்வி நிலையில் ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவர்கள் அதிக பாடச்சுமை காரணமாய்ப் புரிதலின்றியும், மகிழ்ச்சி இன்றியுமே தாங்கள் படிப்ப தாகக் கூறினார்கள். இவர்கள் பெற்றோர் உதவியின்றி வீட்டுப் பாடங்களை முடிக்க முடிவதில்லை என்பது பொதுவான கருத்து. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி” பாடல்கள் வெகுவேகமாக நடத்தப்படுகின்றன. மாணவர்கள் புரிந்து கொண்டார்களா என்பதைப் பற்றி கவலைப்படாமலேயே ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர் என்று பல பெற்றோர்கள் குறைபடுவதாகக் முத்துக் குமரன் குழுவின் அறிக்கை கூறுகிறது.
தனியார்ப் பள்ளிக் கல்வி வணிகர்கள் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் வழியாக மட்டுமே கணிச மான அளவில் கொள்ளையடிக்க, பொதிகளைப் போல் கனக்கும் புத்தகச் சுமைகளை மாணவப் பூங்கொத்து களின் முதுகில் ஏற்றுகிறார்கள். அந்தப் பாடநூல் களைக் கற்பிக்கும் திறமான ஆசிரியர்களைத் தம் பள்ளிகளில் அமர்த்தாமல், கொத்தடிமைகளைக் கொண்டு வந்து, சீருடை ஒன்றை மாட்டி ஆசிரியர்கள் என்ற பேரில் கரும்பலகைமுன் நிறுத்தி விடுகிறார்கள்.
அரசுப் பள்ளிகளைவிடத் தங்கள் பள்ளிகள் தர மானவை என்று மார்தட்டிக் கொள்ளும் தனியார்ப் பள்ளி நிர்வாகிகள், பள்ளி நேரம் போக, மீதி நேரத் திலும் தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களையே மடக்கிப் போட்டுத் தனிப்பாடம் என்ற பெயரில் மேலும் சுரண்டுகிறார்கள். இவையும் போதாதென்று பேராசை பிடித்த பெற்றோர்கள் தம் குழந்தைகளைச் சிறப்புப் பயிற்சி என்ற பேரால் பிற இடங்களுக்கு அனுப்பி வதைக்கிறார்கள்.
‘அரசுப் பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் கற்பித்தல் தரமானதாக இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் தனியார்ப் பள்ளிகளிலும் வகுப்பு முடிந்தபின் தனி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அங்குப் படிக்கும் மாணவர்கூட பள்ளிக்கு வெளியே தேர்வு எழுதப் பயிற்சி அளிக்கும் நிறுவனங்களில் சேர்ந்து தனிப்பயிற்சி பெறுகின் றனர். அதாவது தேவையான மாணவர்க்கு மட்டுமே தனி வகுப்புகள் என்ற நிலைமாறி எல்லா மாணவர்க் குமே தனியாகக் கட்டணம் செலுத்திப் பாடம் கற்பித்தல் தேவை என்ற நிலை இன்றுள்ளது. இது ஒரு சமுதாயக் கேடு என்றால் மிகையாகாது’ என முத்துக்குமரன் குழு தன் கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
இக்கேடுகளுக்கெல்லாம் காரணம் என்ன?
* பள்ளிக் கல்வியை அடிப்படை உரிமை ஆக்காமை.
* பள்ளிக்கல்வி முழுமையையும் அரசு தன் கட்டுப் பாட்டில் ஏற்காமை.
* வகுப்புக்கு ஓர் ஆசிரியர் அமர்த்தாமை.
* எல்லாப் பாடங்களுக்கும் தகுதி பெற்ற ஆசிரியர் அமர்த்தாமை.
* கல்வி தாய்மொழியில் வழங்கப்படாமை.
* தேசிய உற்பத்தியில் கல்விக்குப் போதிய நிதி ஒதுக்காமை.
* வசதிக்கேற்ற பள்ளிகளில் படிப்பதை அரசே ஊக்கு விக்கும் இழிவான நிலை.
‘நம் காலத்தில் நாம்தான் படிக்கவில்லை. நம் குழந்தைகளுக்கேனும் நல்ல தரமான படிப் பைப் பெற்றுத்தருவோமே’ என்று எண்ணும் பெற்றோர்களின் கவலையைக் கல்வி வணிகர் கள் காசாக்கிக் கொள்கிறார்கள். அவர்களின் கொள்ளைக்கு ஆட்சியாளர்கள் அரணாக நிற்கிறார்கள். நேற்றைய ஆளுங்கட்சி இன்றைய எதிர்க்கட்சி - இன்றைய எதிர்க்கட்சி, நாளைய ஆளுங்கட்சி. இதில் எல்லாக் கட்சியிலும் கல்விக் கடை நடத்தும் வணிகர்கள் நிரம்பி வழிகிறார்கள். எனவே புதிய அரசின் அறிவிப்பு அவர்கள் எல்லோருடைய வயிற்றிலும் பால் வார்த்துள்ளது. எளிய மக்களின் தலையில் நெருப்பைக் கொட்டியுள்ளது.
மக்களின் விழிப்புணர்ச்சியும், எஃகு போன்ற மன உறுதியும் எல்லாத் தடைகளையும் தகர்க் கும் ஆற்றல் வாய்ந்தவையாகும். சமச்சீர் கல்விக்கான தடைகளையும் தகர்த்து முன்னேற வேண் டும். சமச்சீர் கல்விகூட குறைகளே இல்லாத முழுமையான கல்வியல்ல. இப்போதைக்கு இந்தத் தடையையேனும் தகர்க்க அணிதிரள வேண்டியது மக்கள் கடன்.
- கட்டுரை தந்த சிந்தனையாளர் திரு . தமிழேந்தி அவர்களுக்கு(www.keetru.com) நன்றி
லோக்பால் மசோதா என்றால் என்ன?

இப்போதுள்ள ஊழல் குறித்த சட்டங்கள் எவை? இந்திய தண்டனை சட்டம், 1860 மற்றும் ஊழல் தடுப்பு சட்டம், 1988 ஆகியவை, அரசு அதிகாரிகள் மீதான ஊழல் வழக்குகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இவற்றின் படி நடவடிக்கை எடுக்க, போலீசோ, வேறு புலனாய்வு துறையோ, மாநில, மத்திய அரசுகளிடம் இருந்து அனுமதி பெற வேண்டும். அரசில் நிர்வாக துறையை பொறுத்தவரை மத்திய புலனாய்வு துறை மற்றும் மத்திய ஊழல் கண்காணிப்பு துறை ஆகிய இரண்டு மட்டுமே, ஊழல் வழக்குகளை கையாள்வதில் பிரதானமாக செயல்படுகின்றன.
லோக்பால் அமைப்பினால் என்ன லாபம்? இது முறையாக நிறுவப்பட்டால், அரசின் சட்டத்துறை மற்றும் நிர்வாகத் துறையின் கலவையாக இருக்கும். புகார்களை பெற்று விசாரணை நடத்துவதில் நிர்வாகத் துறையை போன்றும், தண்டனை கொடுப்பதில் நீதித் துறையை போன்றும் செயல்படும். மக்களின் பிரச்னை, அலைக்கழிப்பு இல்லாமல் ஒரே இடத்தில் தீர்க்கப்படும்.
இதே போல் இந்தியாவில் வேறு அரசு நிறுவனம் உள்ளதா? ஆந்திரா, அசாம், பீகார், சத்திஸ்கர், டில்லி, குஜராத், ஜார்க்கண்ட், அரியானா, இமாச்சல பிரதேசம், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரகண்ட் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்கள், லோக் ஆயுக்தா மற்றும் உபலோக் ஆயுக்தா அமைப்புகளை உருவாக்கியுள்ளன. இவை, மாநில அளவில் லோக்பாலின் வேலைகளை, குறுகிய அளவில், அதிகாரமற்ற நிலையில் செய்து வருகின்றன. இவற்றில் பிரபலமானது, கர்நாடகாவில் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தலைமையில் இயங்கும் லோக் ஆயுக்தா. இது கர்நாடகாவில் அரசியல் பலம் படைத்த பெல்லாரி சகோதரர்களின் ஊழல்களை வெளிச்சம் போட்டு காட்டியது.
இந்த சட்டம் எப்போது அமலுக்கு வரும்? கடந்த 1968 முதல், லோக்சபாவில் எட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டு, தகுந்த காலவரைக்குள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. தற்போது நிலவும் தொடர் ஊழல் சூழலில், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில், ஊழலை தடுக்க நடவடிக்கைகள் பரிந்துரைக்க, மத்திய அமைச்சர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இதில் லோக்பால் மசோதாவின் வடிவம் மற்றும் அதை மீண்டும் அறிமுகப்படுத்துவது பற்றி பரிந்துரைக்கப்பட்டது. லோக்பால் மசோதாவின் வடிவம் குறித்து போராடி வரும் அன்னா ஹசாரே உட்பட அனைத்து தரப்பினரும் ஒப்புக்கொண்டால், இந்த ஆண்டே லோக்சபாவில் நிறைவேற வாய்ப்பு உள்ளது.
அன்னா ஹசாரே உண்ணாவிரதம் ஏன்? தற்போது அரசுக்கு பரிசீலிக்கப்பட்ட லோக்பால் சட்டம் மிகவும் பலவீனமானது. அதன்படி உருவாக்கப்படும் அமைப்புக்கு, பரிந்துரை செய்யும் அதிகாரங்கள் மட்டுமே இருக்கும். இதுவரை வெவ்வேறு அரசு ஆணையங்கள் லோக்பால் குறித்து செய்த பரிந்துரைகளை சேர்த்து, சட்டத்துக்கு வலிமையூட்டும் வகையில், அன்னா ஹசாரே தலைமையில், ஒரு சமூக ஆர்வலர் குழு, மாதிரி மசோதா தயார் செய்திருந்தது. அந்த மாதிரி மசோதாவின் அடிப்படையில் புதிய லோக்பால் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று கோரி, அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருக்கின்றார்.